சிங்களத் தலைவர்கள் தமிழர்கள் மீது முழு நம்பிக்கை வைத்தால் மாத்திரமே இனப்பிரச்சனை தீர்த்துக் கொள்வதற்கான வழி பிறக்கும் பயத்துடனும் சந்தேகத்துடனும் தமிழர்களை அனுகினால் நல்லெண்ண நடவடிக்கைகள் வெற்றியளிக்காது
இதற்கு சில வரலாற்று உதாரணங்களை அறிந்து கொள்வது அவசியம்
எள்ளால மன்னன் ஆரம்பித்து இறுதியாக நடைபெற்ற தலைவரின் போராட்டம் வரை சிங்கள மக்கள் மிகவும் பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் பார்க்கப்பட்டார்கள் ஆனால் அதற்கு நேரெதிராக தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்
இவை அனைவரும் அறிந்த வரலாறுகள் பல வருடங்களாக இழுபட்டுக் கொண்டிருக்கும் இலங்கையின் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இலங்கையை அபிவிருத்தி செய்யவோ வளப்படுத்தவோ முடியாது என்பது அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக விடுக்கும் எச்சரிக்கை
தமிழர் தரப்பு தனித் தமிழீழ உடும்புப் பிடியிலிருந்து மாகாண சபை அதிகாரங்களுக்கு இறங்கி வந்திருப்பது போராட்டத் தோல்வியோ பொருளாதார பின்னடைவோ பயமோ இல்லை அவர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து இன்றைய காலம் வரை காலச் சூழலுக்கு ஏற்றவாறு தங்களது வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு பழக்கப்பட்டவர்கள்
ஒருவருக் கொருவர் கோபதாபங்கள் காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் துன்பம் என்று வரும் பொழுது பகிர்ந்துண்ணும் பழக்கம் கொண்டவர்கள்
இதற்கும் சிறு உதாரணம் சொல்ல வேண்டுமானால் அவர்களுக்காக இருக்கும் இந்த குட்டி நிலப்பரப்பை விட்டு விடக் கூடாது என்று தொடர்ச்சியாக யுத்தம் மரணம் இழப்புகளுடன் வாழ்பவர்கள்
அந்த நேரங்களில் எல்லாம் தங்களது தற்சார்பு பொருலுளாதாரம் நெருக்கடிகளை சந்திக்கும் என தெரிந்து திரைகடல் ஓடி திரவியம் தேடியவன் தமிழன் அதாவது முன்னைய காலங்களிலேயே கூலியாட்களாகவும் பல்வேறுபட்ட தொழில் தகைமை உள்ளவர்களாக வெளிநாடுகளுக்கு சென்று உழைத்து தமது குடும்பங்களையும் பார்த்து வெளிநாடுகளிலேயே நகரங்களையம் கலாச்சாரங்களையும் உருவாக்கியவன் அது இன்று தொடர்கிறது
ஈழத் தமிழர்களை பொறுத்தவரை அவர்களின் நிலம் மொழி கலை கலாச்சாரம் பண்பாடு இவற்றிற்காக எவருடனும் சமரசம் செய்து கொண்டதில்லை இவை எல்லாம் சங்க காலத்திலேயே நூலாக பதியப்பட்ட வரலாறுகள்
ஆனாலும் இலங்கையில் ஒரு அமைதி நிலவ வேண்டும் பல நூற்றாண்டு காலமாக கட்டி காத்து வந்த மொழி கலை கலாச்சாரம் பண்பாடுகள் தொழில் முறைகளை இரட்டிப்பாக்க வேண்டும் தமிழ் பழமை மாறாமல் தங்கள் வாழ்வியலை அடையாளப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அமைதியை விரும்பியவர்கள் வடக்கு கிழக்கு தாயகத்தை மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கையையும் கட்டி எழுப்புவதற்காக அவர்களாகவே இன்றுவரை வெள்ளைக் கொடியுடன் நிற்கின்றார்கள் சிங்களத் தலைவர்கள் அவர்களை கண்டு கொள்ளவில்லை
ஒரு உளவியல் ரீதியாக புலம் பெயர் தமிழர்களாக இருந்தாலும் சரி நாட்டில் வசிக்கும் தமிழர்களாக இருந்தாலும் சரி இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் அல்லது ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணங்கள் இல்லை ஆனால் தமிழர்கள் தனி ஒரு தேசிய இனமாக அவர்களது கலை கலாச்சார பண்பாடுகளுடன் இலங்கை தேசத்துக்குள் வாழ விரும்புகிறர்கள் அதன் காரணமாகவே அவர்கள் தனித்தழீழ கோரிக்கையில் இருந்து சமஷ்டி மற்றும் மாகாண சபை அதிகாரங்களுக்கு இறங்கி வந்துள்ளார்கள் எனலாம்
இன்றைய இந்த சந்தர்ப்பத்தை சிங்கள மக்களும் சிங்களத் தலைவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அவ்வாறு பயன்படுத்தினால் எங்கும் கடன் வேண்டாமல் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் முதலீட்டாளர்களை கொண்டே இல்ங்கையை ஆரம்ப அபிவிருத்திகளை செய்ய முடியும் என்பது புலம்பெயர்ந்து வாழும் நண்பர்கள் சிலரின் கருத்து
மாறாக பழமைவாத சிங்களத் தலைவர்கள் ேபான்று ஒரு இனத்திற்கு சார்பான அரசியல் யாப்பையும் சட்டத் திருத்தங்களையம் கொண்டு வருவது இலங்கையில் இன நல்லினக்கத்திற்கும் அபிவிருத்தி வளர்ச்சிகப்கம் தடையாகவே இருக்கும்
தமிழர் தரப்பிலிருந்து அதி ஊச்ச நல்லினக்க சமிஞ்சைகளை தெரிவித்தும் கூட சிங்களத் தலைவர்கள் தமிழர்களை நம்பவில்லை இதற்கான காரணம் இவர்களை நம்பிப் போனால் நாம் எல்லாவற்றையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சம் மற்றும் சந்தேகம் இந்த பயமும் சந்தேகமும் கலந்த நிலைப்பாடு ஒட்டு மொத்த இலங்கையின் வளர்ச்சியை யை தடுத்துக் கொண்டே இருக்கும்
தமிழர்கள் நம்பிக்கை பாத்தரமானவர்கள் என்பதற்கு இன்னுமொரு வரலாற்று சான்றாக புத்தரின் புனித பற்களை பாதுப்பதற்கு சிங்களப் படைகளில் தமிழ் வேளக்கார படைகளிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது அப்போதும் தமிழர்களுக்கும் சிகளவர்களுக்கும் யுத்தம் நடந்து கொண்டுதான் இருகக்கிறது புத்தரின் புனிதப்பல்லை பாதுகாக்கும் பொறுப்பை தமிழ் வேளக்கார படைகளிடம் கொடுத்ததிலிருந்து தமிழன் எவ்வளவு நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருந்திருப்பார்கள்
அதுமட்டுமல்ல வெளிநாட்டு ஆங்கிலேயப் படைகள் இலங்கையை கைப்பற்ற போரிட்ட போது கண்டி சிங்கள மன்னனுக்கு ஆதரவாக வன்னிப் படைகள் அனுப்பப்பட்டு ஆங்கிலேயப் படைகள் திணறடிக்கட்டது அப்போது கூட தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் யுத்தம் நடந்து கொண்டுதான் இருந்தது இவை நடைபெற்ற வரலாறுகள் அன்று தமிழர்கள் மீது இருந்த நம்பிக்கை இன்று ஏன் இல்லாமல் போனது என்று சிந்திப்பது காலத்தின் கட்டாயம் இந்த வரலாற்றுத் தகவல்கள் தற்போதைய அரசியல் களச் சூழலுக்கு பொருத்தம் இல்லை என்று எனக்குத் தெரியும் ஆனாலும் முன்பு இப்படியும் வரலாறுகள் உள்ளது என்பதை நினைவு படுத்தவே இந்த பதிவாகும்
ஏனெனில் இலங்கை என்ற நாடும் அதற்குள் வாழும் தேசிய இனங்களும் இன்று எவ்வளவுதான் நவீன மாற்றங்கள் வந்தாலும் அவர்கள் பழமைவாதம் மாறாத வரலாறுகளின் படி வாழ்கின்றவர்கள் அதற்காகவே இந்த வரலாற்று உதாரணம் சுட்டிக்காட்டப்பட்டது
மேலும் இலங்கை சிங்ஙகள அரசுக்கு இந்தியாவோ சீனாவோ அமெரிக்காவோ ஐரோப்பிய நாடுகளோ விசுவாசம் உள்ள உற்ற நண்பர்களாக இருக்க வாய்ப்பில்லை அவர்கள் தங்களது நாட்டின் நலனைக் கொண்டே இலங்கையுடன் உறவாடுவார்கள் இந்த தகவல்கள் சாதாரண மக்களுக்கும் தெரியும்
உதாரணத்திற்கு விளையாட்டாக இனி இந்தியாவுடன் எந்த உறவும் இல்லை என்று சீனாவுடன் நெருங்கி அவர்களிடம் பணத்தை பெற்று இலங்கையை அபிவிருத்தி செய்ய போவதாக அறிக்கை விடுங்கள் உடனடியாக இந்தியாவும் அமெரிக்காவும் தமிழர்களை தங்கள் பக்கம் இழுத்து இலங்கை அரசுக்கு எதிராக திருப்பும் கடந்த கால ஆயுத போராட்ட ஆரம்பத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்பது அரசியலாளர்கள் கருத்து
தூரத்து தண்ணீர் தாகத்துக்கு உதவாது என்பது போல இன்று மட்டுமல்ல எல்லா காலத்திலும் இலங்கை நாட்டுக்கும் சிங்கள மக்களுக்கும் தமிழர்களே உற்ற நண்பன் என்பதை விட உறுதியான பாதுகாப்பு அரண் என்பதை சிங்கள மக்களும் சிங்களத் தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்
உலக வல்லரசுகளின் பார்வயில் இலங்கைக்குள் நடைபெறும் இனப்பிரச்சனை ஒரு பிரச்சனையே இல்லல இது ஒரு சிறு பிரச்சனை அவர்களால் மத்தியஸ்தம் வகித்து தீர்த்து வைக்க முடியும் ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள் ஏனெனில் ஊர்இரண்டு பட்டால் கூத்தாhடிக்கு கொண்டாட்டம் என்பது போல இலங்கைக்குள் இப்படி ஒரு பிரச்சனை இருக்க வேண்டும் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் இரத்தத்திலும் மரணத்திலும் வறுமைகளிலும் அவர்கள் தங்களது பிராந்திய அரசியலை செய்ய வேண்டும் அவர்களது நாடுகள் எந்த அச்சுறுத்தல்களும் இல்லாமல் செழிக்க வேண்டும் என்பதே வல்லாதிக்க சக்திகளின் நோக்கம்
இந்த வல்லரசுகளின் கபட நோக்கத்திற்கு இலங்கையும் மக்களும் பலியாகாமல் இருக்கவும் இலங்கைக்குள் உண்மையான நல்லிணக்கம் உருவாகுவதற்கு இலங்கை அரசாங்கமே விரைவாக நடவடிக்கை எடுத்து இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் பலரது வேண்டுகோளாக இருக்கிறது
நன்றி
ஜெகன்