புத்தளம் வனாத்தவில்லு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரநாயக்கபுர பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரகசிய தகவல்
வனாத்தவில்லு பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது
இந்த கைது சம்பவமானது நேற்றைய தினம் வியாழக்கிழமை (22) இடம்பெற்றுள்ளது
செந்த இடங்கள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வனாத்தவில்லு கண்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட நவுன உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வனாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது