ஓம் எனும் உச்சரிப்பும் ஈழத் தமிழர்களும் செந்தமிழுக்கு சொந்தக்காரர்கள் யார்?

14 / 100 SEO Score

ஓம் என்னும் ஓங்கார சொல் ஒரு பிரபஞ்ச உச்சரிப்பு  இந்த ஓம் என்னும் சொல் தமிழ் மொழியின் ஆதாரமாக இருக்கிறது  இந்த தமிழ் மொழி உலகின் முதல் மொழி என்பதை  பல நாடுகளை சார்ந்த  மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்தாக உள்ளதை அனவரும் அறிந்திருப்பீர்கள்  அதே போல் இந்த ஓம் எனும் சொல்லையும் உச்சரிப்பையும் ஒரு மதத்தினுள் அடக்கி விடமுடியாது என்பதனை  அதனுடைய ஒலி அல்லது சப்தம் காட்டி நிற்கிறது

dddddddd

ஓம் எவ்வகை

‘ஓம்’ என்ற சொல் ஆண்பாலும் இல்லை, பெண்பாலும் இல்லை, மூன்றாம் பாலினமும் இல்லை. ஒருமை ஒலியே. இதற்கு ஒருமையோ, பன்மையோ கிடையாது. வேற்றுமை உருபுகளும், அதாவது முதலாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையுள்ள உருபுகளும் இதற்குக் கிடையாது. இலக்கண வரம்புகளுக்கெல்லாம் இது அப்பாற்பட்டது.

‘பிரணவம்

இதர புனித நூல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மந்திரச் சொல்லாகும். இதைத்தான், ‘பிரணவம்’ என்று  சொல்லப்படுகிறது. பிரணவம் என்றால் சுவாசம் என்று பொருள். மனிதன் உயிர் வாழ சுவாசம் அவசியம். இந்த பிரபஞ்சம் உயிர் வாழ, ‘ஓம்’ எனும் மந்திரம் அவசியம்.  அதனால்தான் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் என்கிறோம்.
ஈழத் தமிழர்களை பொறுத்தவரை  இந்த ஓம் என்னும் பிரணவச் சொல்லை அனைத்து மதத்தவரும் உச்சரிக்கிறார்கள்  ஆகவே ஓம் என்பது மதங்கள் கடந்து மனிதர்களுக்கான சுவாசமாக அமைகிறது 

பல மதங்கள் உள்ளடக்கம்

தமிழ் மொழியின் உச்சரிப்பிலும் தமிழர்களின் வாழ்வியலிலும் ஓம் என்னும் சொல் மிக முக்கிய இடம் வகிக்கிறது ஓம் என்னும் ஒலி வடிவம் தொடர்பாக பல கட்டுரைகள் ஆவணக் காணொளிகள் வெளியாகியுள்ளது ஒம் என்னும் ஒலியில் பல மதங்களின் தியான ஓசைகள் இருப்பதாக பலரின் கருத்துக்கள் உள்ளது பலர் அறிந்திருக்கக் கூடும்

ஓம் என்பது பொதுவான வரிவடிவம் அல்லது தேவ நாகரீக வரிவடிவம் இது சைவம் இந்து சீக்கியம் பௌத்தம் சமணம் மற்றும் பூர்வீக தெற்காசிய சமயங்களில் உள்ள புனித குறியீடு ஆகும் இந்த ஓம் என்பது பிரபஞ்சத்தில் இருந்து வரும் சப்தமாகவும் பூமி சுத்தும் போது எழுப்பப்படும் ஒலியாகவும் கருதப்படுகிறது

இந்த ஓம் என்பதை வைத்துதான் மந்திரங்கள் தொடங்குகிறது ஓம் என்னும் சொல் தான் பிரபஞ்சத்தின் சாவி ஓம் என்னும் பிரணவ மந்திரம் ஓம் என்னும் சொல்லுக்குப் பிறகுதான் தெய்வங்களின் பெயர்கள் சொல்லப்படும்
ஓம் என்பதில் அ-உ-ம்-இருப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்

ஏன் தமிழ் சைவம் கடந்து பல மதங்களின் தியான வழிபாடுகளில் இந்த ஓம் எனும் நாத ஒலி வடிவம் எழுவதை நாம் காணலாம்

கூர்ந்து கவனித்தால் இவ்வளவு புனிதமான சக்தி வாய்ந்த  ஓம்காரமாக இருக்கும்  சொல்லை ஏனைய நாடுகளிலும் தமிழகத்திலும் தெய்வ வணக்க பூஜை நேரங்களில் மாத்திமே உச்சரிக்கப்படுகிறது ஆனால் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள்  எந்த நாட்டில் வசித்தாலும் ஓம் என்னும் சொல்லை நிமிடத்துக்கு நிமிடம் உச்சரித்துக் கொண்டே இருக்கிறார்கள்

உதாரணமாக ஒருவரிடம் நாம் சில விடயங்களை கேள்வியாக கேட்கும் போது அதாவது -சாப்பிட்டாயா? பதில்:-ஓம் குளித்தாயா? ஓம் கேள்வி:-சென்றாயா? ஓம் வருகிறாயா ஓம் படித்தாயாயா ?ஓம் இவ்வாறு இவ்வாறு கேள்விகளுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் பேச்சு வழக்கில் உச்சரிக்கும் பொது வார்த்தைகளில் ஓம் மற்றும் ஓ.. என்பது காணப்படும்

இது மட்டுமல்ல  தமிழகத்தில் முச்சக்கர வண்டியை ஆட்டோ என்பார்கள் ஈழத் தமிழர்கள் ஓட்டோ என்பார்கள் ஆரஞ்சுப் பழம் என்பர்கள் ஈழத்தமிழர்கள் ஓரஞ் பழம் என்பார்கள் இது போன்ற பல சொற்கள் உச்சரிப்புகளை ஈழத் தமிழர்க் ஓ.. என்பதை பயன்படுத்துவார்கள்

இது மட்டும் அல்ல செந்தமிழில் இந்த ஓம் என்பது மிக முக்கியமாக இருக்கிறது தொல்காப்பியர் காலத்தில் பேசப்பட்டு தற்போது வழக்கொழிந்து போன பல சொற்களை இன்றும் ஈழத்தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள் தமிழ் பிறந்தது சங்கங்கள் அமைத்து தமிழ் ஆய்வு செய்தது அனைத்தும் குமரிக்கண்ட பழைய  மதுரையில் என்பதாலும் அந்த பழைய மதுரை குமரிக்கண்டத்தில் இருந்துள்ளது  அந்த குமரிக்கண்ட அழிவிலிருந்து எஞ்சிய பகுதியாக ஈழம் இருக்கிறது இதை கணிப்பட்டு புரிந்து கொள்ளவது சிறந்தது

செந்தமிழுக்கு சொந்தக்காரர்கள் யார்? என்ற கேள்வி எழும் போது அது ஈழத் தமிழர்கள்தான்  ஆனால் தமிழ் என்றாலே அது மதுரைதானே  என்று எல்லோரும் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் மதுரையை நினைப்பது அல்லது ஆதாரமாக காட்டுவது தவறு  சங்கம் அமைத்து தமிழ் ஆய்வு செய்தது குமரிக்கண்டத்து பழைய மதுரையில் கடைசி சங்கம் வேண்டுமானால் இன்று தமிழநாட்டில் இருக்கும் மதுரையில் நடைபெற்றிருக்கலாம் முதல் சங்கம் இடைச்சங்கம் நிச்சயமாக   அந்த பழைய மதுரை என்பது அழிந்த குமரிக் கண்டத்தின் எஞ்சிய நிலப்பரப்பாக காணப்படம் ஈழ தேசத்திள் நடைபெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது  

உலக பரப்பில் பிறப்பால் தமிழர் அல்லாதோறும் மிக நன்றாக தமிழ் பேசுகிறார்கள் ஆனால் தமிழ் மொழியை உச்ச வரம்பாகவும் தாயகமாகவும் கொண்டிருப்பது ஈழத்தமிழர் மற்றயது தமிழகத் தமிழர் ஆனால் தமிழ் மொழிக்கு சொந்தக்காரர்கள் தமிழகத்தவர்கள் என்றும் தமிழை அவர்கள்தான் வளர்த்து பாதுகாப்பது போலும் ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுள்ளது இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் இருக்கும் பிற்கால மதுரை என்னும் இடப்பெயர்தான் உலகத் தமிழர்கள் இவை தொடர்பில் முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி தேவை உள்ளது

‘செந்தமிழ் பைந்தமிழ் கொடுந்தமிழ்’ என தமிழில் பல வகை உண்டு சீர்தரப்படுத்தப்பட்ட அல்லது செப்பம் செய்யப்பட்ட பேச்சுத் தமிழையும்  செந்தமிழ் எனலாம் மதுரையை (குமரிக்கண்டத்து) மையமாகக் கொண்டு மிகப் பழமையான காலத்திலேயே ஒரு செப்பமான மொழி உருவாகி வந்தது அந்த மொழி பாண்டிய நாட்டில் பேசப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டு மற்றைய பிரதேச வழக்குகளின் அம்சங்களை உட்கொண்டதாக அது இருந்தது.
‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ்க்குடி’
என்று நெஞ்சுரப் பெருமையும் பழமையும் கொண்டது  தமிழ் மொழி மரபு  தமிழ் மொழியின் வரலாறு சங்க காலம் சங்கமருவிய காலம் பக்தி இலக்கிய காலம் சிற்றிலக்கிய காலம்  தற்கால வரலாறு என்றும் இயற்றமிழ் இசைத்தமிழ் உரைத்தமிழ் நாடகத் தமிழ் அறிவியல் தமிழ் என்றும் பிரிக்கப்படும் தமிழ் என்பது தமிழர்களினதும் தமிழ் பேசும் பலரினதும்  தாய்மொழியாகும்.இலங்கை இந்தியா மலேசியா சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகளவிலும் ஐக்கிய அமீரகம் தென்னாப்பிரிக்கா மொரீசிஸ் பிஜி ரீயூனியன் தீவு போன்ற இன்னும் பல

நாடுகளில்  சிறிய அளவிலும்  தமிழ் மொழி பேசப்படுகிறது 1997ம் ஆண்டு புள்ளி விபர அடிப்படையில் 8 கோடி (80மில்லியன் ) மக்களால் தமிழ் பேசப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
செந்தமிழுக்கு சொந்தக்காரர்களான ஈழத்தமிழர்கள்
தமிழ் மொழியின் உச்சரிப்பு மற்றும் பேச்சு வழக்கு போன்றவை நாட்டுக்கு நாடு மட்டுல்ல ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாறுபடும் இவை வட்டார வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும் தமிழின் உச்சரிப்பை சரிவர பயண்படுத்தாமல்  செந்தமிழில் இருந்தோ அல்லது பொதுத் தமிழில் இருந்தோ வேறுபட்டு பேசப்படுவது கொடுந்தமிழ் அல்லது வண்தமிழ் என்பர் இந்த வண்தமிழ் அல்லது கொடுந்தமழை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பேசப்படுவதை காணலாம்

VIDEO

இங்கு நான் கூறுவiதை விட வேறு தகவல்களும் உங்களுக்கு தெரிந்திருக்கும் அதன பகிர்ந்து கொள்வதன் மூலம்  சரியான வரலாற்றை எமது அடுத்த தலைமுறைக்கு வழங்க முடியும்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *