மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் கடற்படை சிப்பாயின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குறித்த சிப்பாய் தன்னைத்தானே சுட்டு உயிர் மாய்த்துக் கொண்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இந்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட காவலரணில் இன்று (22) காலை 10. மணியின் பின் இடம்பெற்றுள்ளது
சம்பவ இடத்திற்கு முதல் கட்ட விசாரணைகளுக்காக முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்

பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் இன்று மாலை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது
உயிரிழந்த கடற்படை சிப்பாய் பெயர் பண்டார வயது 37 மூன்று பிள்ளைகளின் தந்தை என்று தெரிய வருகிறது
குறித்த கடற்படை சிப்பாய் வங்காலை மற்றும் அச்சங்குளம் கடற்படை முகாமில் பணியாற்றி உள்ளார் என்று மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன