யாழில் கடத்தப்பட்ட 22 வயது யுவதி சினிமாவை மிஞ்சும் சம்பவம்

6 / 100 SEO Score

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் புதன்கிழமை (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

22 62ea63f1cab31 copy

காதல் திருமணம்
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியும் பூநகரி கௌதாரிமுனை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் தஞ்சம்
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும் இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும் இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பு
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சினிமா பாணியில் கடத்தல்
நீதிமன்றத்தை விட்டு செல்லும் போது வரும்போது பிற்பகல் 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர் இந்த சம்பவம் குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

காயடந்த இளைஞன் மருத்துவமனையில்
காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்செ பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது

பொலிசார் தீவிர தேடுதலில்
விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சி.சி ரி.வி.
யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *