இந்த வளர்ந்து விட்ட நவீன உலகில் சில பழங்கால சாஸ்திர சம்பிரதாயங்களை நாம் இன்னும் விடுவாதக இல்லை அந்த சாஸ்திரங்களில் மிக முக்கியமான ஒன்று கண்கள் துடிப்பது

மனப் பயம்
பொதுவாகவே கண்கள் துடிக்கும் போது எதுவோ நடக்கப்போகுது என்று பலரும் நினைத்து குழப்பமடைவதும் உண்டும் கண் துடிப்பு நின்ற பின்னரும் அவர்களுக்கு அந்த அச்சம் விட்டுப் போகாது என்றாலும் மனித உடற்பாகங்கள் அனைத்தின் செயற்பாடுகளுக்கும் iதிக சாஸ்திரங்கள் எழுதப் பட்டுள்ளது அவற்றை பார்க்கலாம்
கண் இமைத்தல் என்பது இயல்பாக நடக்கும் ஒன்று. கண் இமை துடித்தல் என்பது எப்போதாவது நிகழும் ஒன்று பெண்களுக்கு இடக்கண் துடித்தால் நன்மையைத் என்றும் வலக்கண் துடித்தால் தீமையைத் என்றும் ஆண்களுக்கு வலக்கண் துடித்தால் நன்மையைத் தரும் என்றும் இடக்கண் துடித்தால் தீமையைத் தரும் என்றும் கூறப்பட்டுள்ளது அதையும் விட சோதிட சாஸ்திரத்தில் பொதுவாக இடப்பாகம் பெண்களுக்கு நன்மை தரும் என்றும் ஆண்களுக்கு வலப்பாகம் நன்மை தரும் என்றும் கூறப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியங்களில் கண் துடித்தல் பலன் பற்றி கூறப்பட்டுள்ளது
நமக்கு வரப்போகும் சுக துக்கங்களை முன்கூட்டியே நமது உறுப்புகள் அறிந்து கொண்டு அதை மனிதர்களுக்கு உணர்த்தும் வகையில் துடிப்பதாக துடிசாஸ்திர நூல் கூறுகிறது. பொதுவாக உடம்பின் இடதுபாகம் துடிப்பது நன்மை என்றும் வலது பாகம் துடித்தால் தீயது நடக்கப்போகிறது என்று உணர்த்துவதாகவும் கூறப்படுகிறது
சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியங்களின் படி பெண்டிர்க்கு நன்மையும் ஆடவர்க்குத் தீமையும் எனக் கருதும் வகையில் இடக்கண் அல்லது இடத்தோள் துடித்தல். ஈண்டு தாம் இடந்துடிக்குமால் அஞ்சல் என்று கம்பராமாயணத்திலும் இடந்துடித்த காரணம் சொல் என்று தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலித்தொகைப் பாடலில் பிரிவுத் துன்பத்தில் வருந்தும் தலைவிக்கு ஆறுதல் கூறும் தோழி இடக்கண் துடிக்கின்றது. தலைவன் வருதல் உறுதி என்று நிமித்தம் கூறி ஆறுதல் கூறுகிறாள். நன் மனையிடத்துப் பல்லியும் நன்றாகிய இடத்தே அவர் வரவுக்குப் பொருந்திக் கூறின. நல்ல அழகையுடைய மையுண் கண்ணும் இடந்துடித்து நின்று நன்மை பயப்பதை என்று எழுதப்பட்டுள்ளது. கண்கள் துடிப்பது மூலம் மாதவிக்குப் பிரிவும்இ கண்ணகிக்குக் கூட்டமும் நிகழும் என்பதைஇ சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது

ஆண்களுக்கு வலது கண் துடிப்பது
ஆண்களுக்கு இடது கண்பகுதியிலும் பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என்று கூறப்படுகிறது
கண் புருவம்
ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ்இ பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும் புகழும் உண்டாகும். இடது புருவம் துடித்தால் வம்பு வழக்குகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு கண் மற்றும் புருவம் துடித்தால்
பெண்களுக்கு இடது கண் அதே நேரத்தில் பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம் புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில் அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நல்ல பலன்கள் ஏற்படுமாம்.
மருத்துவரை நாடுவது நல்லது

மருத்துவர்களை பார்ப்பது நல்லது
அதே நேரத்தில் சிலருக்கு கண்கள் துடிப்பது என்பது நாள் முழுவதும் இருக்கலாம். சில நாள்களுக்கோ வாரங்களுக்கோ மாதங்களுக்கோகூட அது தொடரலாம். அப்படி இருக்கும்போது அது அவர்களின் அன்றாட வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும். இதுபோல துடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் நல்ல கண் மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.