மத்தேகொடை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன 59 வயதுடைய பெண்ணை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கணவர் பொலிசில் முறைப்பாடு
இந்த விடயம் தொடர்பாக காணாமல் போன பெண்ணின் கணவர் மத்தேகொடை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தொடர்பு கொள்ள
காணாமல் போன பெண் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 071-8592207 அல்லது 011-2783776 என்ற தொலைபேசி எண்கள் மூலம் தெரியப்படுத்தலாம் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.