சில தினங்களாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் தொடர்பாக மன்னார் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்க விடுத்துள்ளது

இந்த எச்சரிக்கையானது இன்று 19.05.2025;9.00 காலையில் வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவு முழுவதும் நிலைபெற்று வருகிறது.
இதன் தாக்கம் காரணமாக இன்று (19) திகதி மற்றும் அடுத்த சில நாட்களில் (22) திகதி வரை தீவின் தென்மேற்குப் பகுதிகளில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மாத்தறை நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
புத்தளம் முதல் கொழும்பு காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடற்கரையோரப் பகுதிகள் சில நேரங்களில் (55-65) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்இ சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்.
கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தகவல்
DMC மன்னார்