சர்வதேச மட்டத்தில் ஐந்து போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணத்தை சேர்ந்த சிறுமி

9 / 100 SEO Score

வட மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் இணுவில் கிராமத்தில் வசித்து வரும் கஜிஷனா தர்ஷன் எனும் சிறுமி 8வயதிற்குட்பட்டோர்களுக்கான FIDE World Cup 2025 இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த போட்டியானது ஜூன் 22 முதல் ஜூலை 3 ம் திகதி வரை ஜோர்ஜியாவில் நடைபெறவுள்ளது.

495375234 1244222967275004 3870240265939296557 n

குறித்த சிறுமி இவ்வருடம் 5 சர்வதேச போட்டிகளிற்க்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதில் முதலாவது போட்டியான மேற்காசிய இளையோர்களுக்கான போட்டி மார்ச் மாதம் அல்பேனியா நாட்டில் இடம் பெற்றது. போதிய அனுசரணை கிடைக்காமையால் அப்போட்டியில் இவர் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த வருடம் தாய்லாந்தில் இடம்பெற்ற ஆசிய பாடசாலைகளுக்கான இறுதிப் போட்டியில் எமது நாட்டின் உத்தியோகவீரராக பங்குபற்றி இரண்டு வெண்கலப் பதக்கத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் சதுரங்க போட்டிகளில் வலயம், மாகாணம், தேசியம் கடந்து சர்வதேசரீதியில் சாதித்து வருகின்றார். மேலும் எமது நாட்டில் மூன்று வகையான சதுரங்க வகைகளில் 8 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் ரேட்டிங் (rating ) வைத்திருப்பது மட்டும் அன்றி முதல் நிலையில் இருப்பது குறிப்பிடதக்கது.

அத்துடன் கடந்த டிசம்பர் மாத 7 வயதிற்குட்பட்டவர்களுக்கான Rapid சதுரங்க தரப்படுத்தலில் உலக அளவில் 2 ஆம் இடத்தில் காணப்பட்டார் மேலும் 8 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் Fide Online Arena இனால் வழங்கப்படும் ACM மற்றும் AFM எனப்படும் பட்டத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் பாடசாலைகள் பள்ளி சதுரங்க அமைப்பினால் (SLSCA ) நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் 7 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் வலய, மாகாண, தேசியம் என அனைத்து ரீதியிலும் முதலிடம் பெற்றிருந்தார்.

மேலும் இந்த மாதம் ஜனவரி யில் இடம் பெற்ற இளையோர்களுக்கான சதுரங்க போட்டியில் சூப்பர் 10 இல் இடம்பிடித்து பின்பு தேசியரீதியில் இடம் பெற்ற சூப்பர் 10 போட்டியில் வெள்ளி பதக்கத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி போட்டிகளில் வெற்றி பெற்றதை தொடர்ந்து 5 சர்வதேச போட்டிகளில் 2025 ம் ஆண்டில் எமது நாடு சார்பாக பங்குபற்ற இருப்பது குறிப்பிடத்தக்கது.
👉ஆசிய இளையோர்களுக்கான இறுதிப் போட்டி 2025 (தாய்லாந்து )
👉உலக இளையோர்களுக்கான இறுதிப் போட்டி 2025 (அல்பேனியா )
👉 பொதுநலவாய இளையோர்களுக்கான இறுதிப்போட்டி
👉மேற்காசிய இளையோர்களுக்கான இறுதிப் போட்டி (தஜிகிஸ்தான் )
👉FIDE World cup 2025 (ஜோர்ஜியா )
மேற்குறித்த 5 வகையான இவ் சர்வதேசபோட்டிகளிற்கு அனைத்து வயது பிரிவிலும் தகுதி பெற்ற ஒரே ஒரு தமிழ் வீரர் இவர் ஆவார் . ஆகவே மேற்குறித்த சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்க்கு அனுசரணையாளர்களை இச் சிறுமியின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *