எதிர்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

9 / 100 SEO Score

அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி சபைகள் மூன்று, நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது – மக்கள் அளித்த ஆணையை திருட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்

497000022 1277955803700646 6661508492819068196 n

கொழும்பில் நேற்று (14) நடைபெற்ற ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) 60வது ஆண்டு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, தேசிய மக்கள் சக்திக்கு (NPP) மக்கள் அளித்த ஆணையை திருட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தமக்கு உள்ளதை நினைவூட்டிய அவர், மக்கள் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் எந்தவொரு முயற்சியும் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி 267 உள்ளூராட்சி மன்றங்களை நிர்வகிக்கும் ஆணையை பெற்றுள்ளதாகவும், முதல் நாளில் 152 மன்றங்களிலும், மீதமுள்ள 115 மன்றங்களிலும் விரைவில் கட்டுப்பாட்டை ஏற்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்த அவர், அவர்களுக்கு ஆட்சி செய்யும் ஆணை இல்லை எனவும், சில கட்சிகள் ஒரு மன்றத்தில் ஒரு அல்லது இரண்டு உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் ஆணைக்கு எதிராக உருவாக்கப்படும் எந்தவொரு மன்றமும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு மேல் நீடிக்காது எனவும் ஜனாதிபதி விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *