விவாகரத்து ஏற்படுவதற்கான முக்கியமான பத்து காரணங்கள்

17 / 100 SEO Score

திருமணம் என்பது அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் இறுதி அடையாளமாக  காணப்படுகிறது. பெரும்பாலும் காதலால் வழிநடத்தப்படும் நவீன உலகில் விவாகரத்து சர்வசாதாரனமாகி விட்டது.  பலதரப்பட்ட காரணங்களால் விவாகரத்து  விகிதங்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதை  காணக் கூடியதாக உள்ளது 

IMG 20240807 WA0142%20copy

திருமணத்தின் புனிதத்தன்மை பலருக்கு புரிவதில்லை அதை அவர்கள் கலவியோடு மட்டுமே நோக்குகின்றனர்.  சமகால வாழ்க்கையில் பல்வேறு பட்ட  அழுத்தங்களினால்  விரிசல் ஏற்படுவதை தம்பதிகள் கவனிக்கத் தவறி விடுகின்றனர். இதனால் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வு மட்டுமல்ல அவர்களின் குழந்தைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது. பல தம்பதிகளிடம்   சிறந்த நோக்கங்கள் எதிர்கால இலக்குகள் இருந்த போதும் கவனிக்கப்படாத காரணங்களினால்  விவாகரத்துகள் ஏற்படுகிறது.  ஆய்வுகளின் அடிப்படையில் திருமன முறிவுக்கு முக்கியமாக கூறப்படும் ஏழு காரணங்கள்  பார்ப்போம் 

முதலாவது காரணம் ஈகோ

ஒரு காலத்தில் விவாகரத்து என்பது கடைசி முயற்சியாகவே  இருந்த இடத்தில் இப்போது அது சர்வசாதாரனமாகிவிட்டது  நிச்சயித்து முடிக்கும் திருமணங்களில் தான் கணவன் மணைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சில பல நாட்கள் எடுக்கலாம். ஆனால் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் கூட  விவாகரத்தை ஏற்றுக் கொள்வது  சர்வசாதாரணமாகிவிட்டது அதற்கான காரணம் ஈகோ என்பது முக்கிய காரணமாக இருக்கும் அந்த ஈகோவானது தங்களது அந்தரங்க தாம்பத்தியத்தில் ஆரம்பித்து சிறிது சிறிதாக  அவர்களின் அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளில் பரவுகிறது. அதாவது தாம்பத்தியத்தில் யார் முதலில் தொடுவது என்ற எண்ணத்திலும் தயக்கத்திலும் ஆரம்பித்து  யார் பெரியவர்?நீயா?நானா?  யார் சிறந்தவர்? என்னும் எண்ணங்கள் வலுக்கும் போது ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் ஈர்ப்பு சக்தி நாளடைவில் இருவருக்கும் இடையில் பாரிய பிளவை ஏற்படுத்துகிறது

திருமண வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொள்ளல்

காதல் சக்திவாய்ந்ததாக இருந்தாலும் திருமண பந்தத்தை தக்கவைக்க இது  போதாது. நோக்கங்கள் தூய்மையாக இருக்கலாம் திருமண வாழ்வின் யதார்த்தம் என்ன என்பதை புரிந்து கொள்ளாதவரை  கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படலாம் இங்கு மறுக்க முடியாத உண்மை என்னவெனில் புரிதல், பொறுமை, மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய பொதுவான பார்வை என்பது தேவை.  

எல்லாவற்றிற்கும் மேலாக  வாழ்வை கொண்டு நடத்துவதற்கான பொருளாதாரத்தில் பின்னடைவு வரும் போது  அன்பு, பாசம், காதல் அனைத்தும் இல்லாமல் போகிறது  பொருளாதாரப் பிரச்சனையும்  திருமண முறிவுக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது 

இரண்டாவது காரணம் தவறான தொடர்பு

இன்றைய நவீன உலகில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடிகளால் கனவன்,மனைவி இருவரும் உழைத்தால் மட்டுமே  எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும்.அவ்வாறு தங்களது தொழில் நிமித்தம் ஏற்படும் வெளி மனிதர்களின் நட்பு  தொழில் நிமித்தமாகவோ, அல்லது நட்பு ரீதியாகவோ, புதியவர்களோடு நேரடியான சந்திப்புகள் மூலமாகவோ, தொலைபேசி உரையாடல் மூலமாகவோ, அதிக நேரம் செலவிடும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகிறது 

இது சந்தேகத்தையும் தேவையற்ற மன விரக்தியையும் உண்டு பண்ணும் இதனால் கனவணுக்கு மனைவி மீதும் மனைவிக்கு கணவன்  மீதும் நாட்டம் குறைந்து  இவர்களுக்கான இடைவெளி அதிகமாகும்  போது ​​விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும்.  அந்த நேரங்களில் ஏற்படும்  சிறிய தவறான புரிதல்கள் பெரிய சிக்கல்களில் ஏற்படுத்துகிறது  இவ்வாறான தவறான தகவல்தொடர்பு பெரும்பாலும்  நல்லதொரு மணவாழ்வை சிதைத்து விடும். ஆகவே தவறான தொடர்புகளை தவிர்த்துக் வெளிப்படையாக நேர்மையாக மனம் விட்டு பேசி ஒருவர் மீது  ஒருவர் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது 

மூன்றாவது காரணம் 

சமூக ஊடகங்களின் தாக்கம் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தகவல் தொடர்பு  தேவையான ஒன்று  தொழில்நுட்ப வளர்ச்சி என்பது உலகத்துடன் இணைக்கும் சாதனங்கள் என்றாலும்  நமக்கு நெருக்கமானவர்களிடமிருந்து நம்மைத் துண்டிக்கும் சக்தியையும் கொண்டிருக்கின்றன. 

மெய்நிகர் உலகில் நமக்கு அருகில் இருக்கும் உண்மையான அன்பு கொண்டவர்களிடமிருந்து அது  நம்மை அந்நியப் படுத்தி விடுகிறது  சமூக ஊடகங்களின் தாக்கம் வருவதற்கு முன்பு  குடும்ப அங்கத்தவர்களிடம் நெருக்கமான பாசப் பிணைப்புகள் அதிகமாக காணப்பட்டது. தற்போது  சக மனிதர்கள் எவரும் தேவையில்லை  ஒரு  அன்ரோய்ட் போன் இருந்தால் போது என்ற மன நிலையில் அனைவரும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.இந்த தொழிநுட்ப வளர்ச்சி குடும்ப உறவுகளை அந்நியப்படுத்தி விட்டது  இதற்கு கணவன் மணைவியும் விதிவிலக்கல்ல சமூக ஊடகங்களில் மனம் லயித்துப் போயுள்ளதால் கணவன் மனைவிக்கும் மனைவி கணவணுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து போகும்  சந்தர்பங்களினாலும் அல்லது வேண்டா வெறுப்பாக  செய்வதனாலும் தம்பதிகளிடையே விரிசல்கள் உருவாகிறது  முடிந்தளவு சமூக ஊடகங்களில் மனம் லயித்து செல்வதை தவிர்த்துக் கொள்வதும் தாம்பத்திய வாழ்வுக்கு சிறந்தது

நானாகாவது  காரணம்: நிதி ரகசியங்கள்

ரகசிய செலவு பழக்கம்:பணம் பெரும்பாலும் விவாகரத்துக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது ஆனால் இது நிதி நெருக்கடியைப் பற்றியது மட்டுமல்ல. பணத்தைச் சுற்றியுள்ள ரகசியங்கள்-மறைமுகமாக கொடுக்கப்படும் அல்லது வாங்கப்படும்  கடன்கள், இரகசிய செலவுகள், ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளப்படாத நிதி சிக்கல்கள்,திருமண வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தலாம்.

சிறிய அளவில் ஆரம்பிக்கும்  நிதித் துரோகம்  சில சமயங்களில் பெரிய அளவு துரோகத்தை செய்ய வழி வகுக்கும்.  குடும்பத்தினுள் நிதி கையாள்வது என்பது  இருவரும் உடன்பட்டு  வெளிப்படையாக இருக்க வேண்டும். 

குடும்பத்தின் நண்மைக்காக பெறப்படும் கடன்களாக இருந்தாலும் சரி அல்லது பிரிதொருவருக்கு கொடுக்கப்படும் கடன்களாக இருந்தாலும் சரி ஒருவருக்கு ஒருவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும் இருவரின் ஆலோசனைகளின்படியே பணப் பரிமாற்றங்கள் செய்ய வேண்டும்.எனது பணம்,இது உனது பணம் என்னும் மன நிலை உருவாகும் போது  திருமண வாழ்வு சிக்கலானதாகவே அமையும் இதை மீட்டெடுக்க முடியாத நிலை உருவாகும் 

ஐந்தாவது காரணம் 

தனிப்பட்ட வளர்ச்சி திருமண சறுக்கலுக்கு வழிவகுக்கும்

திருமணத்திற்கு முன்பு நாம் தனிநபர்களாக வளர்ச்சியை நோக்கி போராடுகிறோம் ஆனால் அந்த தனிநபர் வளர்ச்சியை திருமணத்தின் பின்னரும் தொடர முற்படும் போது  ​அது திருமண சறுக்கலுக்கு வழிவகுக்கும். திருமணத்தின் பின்னர் தம்பதிகள் இருவரின் வெற்றி அல்லது வளர்ச்சி என்ற மனநிலை வரவேண்டும்.

 வாழ்க்கை சம்பந்தப்பட்ட முடிவகளை  ஆணோ, பெண்ணோ, தனித்து எடுக்கும் போது யாரோ ஒருவருக்கு தாழ்வு மனப்பாண்மை ஏற்படுகிறது, ஒருவர் மற்றவரிடம் ஆலோசனை கேட்பது ஒருவரின் சொல்லுக்கு மதிப்பளிப்பது உளவியல் ரீதியாக அவர்களின் தாம்பத்திய வாழ்வை பலமடையச் செய்யும். ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிக்காத கணக்கில் எடுக்கப்படாத செயற்பாடுகள் மகிழ்ச்சியாக இல்லற வாழ்வை தொடர முடியாத நிலைக்கு இட்டுச் செல்கிறது.  இந்த செயற்பாடுகள் தம்பதிகள் வயதாகும்போது வேறுபட்ட பாதைகளில் தங்கள் பயணங்களை தொடரும் பேராபத்தை  உண்டு பண்ணுகிறது 

ஐந்தாவது காரணம்: 

தேவையில்லாத எதிர்பார்ப்புகள்

திருமணத்தின் முன்பாக  ஆண், பெண் இருவரும் திருமண வாழ்வு பற்றிய  மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகள் அதாவது தாங்கள் வெளி உலகில் பார்க்கும் திருமணமாகிய தம்பதிகளின் நடை உடை, பாவனைகள்,உண்மை என்று நம்பி  தேவையில்லாத எதிர்பார்ப்புகளுடனும், கனவுகளுடனும், திருமண வாழ்வுக்குள் நுழைகிறார்கள்.அவர்கள் எதிர்பார்த்தது போல்  திருமண வாழ்வு இல்லை என்ற உண்மை நிலை உணரும் போது விரக்தியும் கணவன் மனையிடையே விரிசல்களும் ஏற்படுகிறது  

ஆண், பெண்,மனநிலைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றாற் போல் மாறும் தன்மையது  காதலிக்கும் போது  பார்த்தவர்களின் குணவியல்புகள் திருமணத்தின் பின்னரும் அவ்வாறே இருக்கும் இருக்கும் என்று எதிர் பார்ப்பது பொருந்தாது நாம் அனைவரும் ஓர் அவசரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத தம்பதிகள் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகளை கொண்டு இறுதியில் ஏமாற்றமடைகின்றார்கள்

இவர்கள்  சவால்கள், பிரச்சனைகள், கஷ்டங்கள், இல்லாத உறவை எதிர்பார்க்கிறார்கள் இந்த அவரச உலகில் அவை சாத்தியம் இல்லை தவிர்க்க முடியாத காரணங்களால் சிரமங்கள், பிரச்சனைகள், ஏற்படும் போது  அதற்கு முகங்கொடுக்க முடியாமல் தவிக்கின்றார்கள்.  இறுதியில் கருத்து வேறுபாடுகள் மன அழுத்தங்கள் ஏற்பட்டு  அன்றாட வாழ்க்கையில் பிளவுகளை ஏற்படுகிறது  ஆகவே அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள்  திருமண உறவில் தோல்வியை தரும் என்னும் யதார்த்த நிலையை உணர்ந்து கொள்ள வேண்டும் 

ஆறாவது காரணம்: 

உணர்வு மற்றும் உடல் நெருக்கம் இரண்டும் முக்கியம்

நெருக்கம் என்பது ஆரோக்கியமான திருமணத்தின் ஒரு மூலக் கருவியாகும் இரண்டு வகையான நெருக்கம் உள்ளன – உணர்வுகள்  மற்றும் உடல் நெருக்கம் – இவை இரண்டும் முக்கியமானவை. உணர்ச்சி நெருக்கம் என்பது பகிரப்பட்ட அனுபவங்கள் திறந்த தொடர்பு மற்றும் பரஸ்பர ஆதரவிலிருந்து வரும் ஆழமான இணைப்பு. உடல் நெருக்கம்  என்பது தொடுதல், அணைத்துக் கொள்ளுதல், மற்றும் பாலியல் செயல்பாடு மூலம் தோன்றும் காதல் மற்றும் ஆசையின் வெளிப்பாடு ஆகும். இந்த இரண்டு வகையான நெருக்கம் இல்லாதபோது ​​அது தனிமை, நிராகரிப்பு, மற்றும் விரக்தி போன்ற உணர்வுகளுக்கு வழிவகுக்கும். 

உணர்ச்சி மற்றும் உடல் நெருக்கத்திற்கு இடையில் சமநிலையை பராமரிப்பது ஒரு பூர்த்தியான உறவுக்கு முக்கியமாகும் இன்றைய சமூக ஊடகங்களின் தாக்கத்தால்  இந்த இரண்டு வகையான நெருக்கங்களும் அற்றதாகவே காணப்படுகிறது  இந்த சமூக ஊடகங்களும் திருமண முறிவக்கு  வழி வகுக்கிறது  எனவே நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடல் மூலமான நெருக்கங்களை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள் உடல் தொடுகைகள் மூலம் சுரக்கும் ஹார்மோன்கள் கோபம், மன விரக்தி, தனிமை  உணர்வு  போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள உதவுகிறது  தொடுகைகளும் உடல் நெருக்கங்களும் ஆதரவான வார்த்தைகளும் இல்லாமல் போகும் போது  தம்பதிகள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்வதை இலகுவாக்குகிறது 

ffff

ஏழாவது காரணம் 

மன அழுத்தம் வாழ்க்கை  இணைப்பை அழிக்கிறது

பரபரப்பான வாழ்க்கையால்  பல தம்பதிகளுக்கு மன அழுத்தம் ஒரு நிலையான துணையாகி விட்டது.இந்த மன அழுத்தம் எதிர்காலத்திற்கு பணம் பொருள் தேடுவதில்.அலுவலக வேலைப் பளு. காரணமா சிறிதாக ஆரம்பித்து பின்னாளில் அது முழு பாதிப்பை உண்டு பண்ணுகிறது  

இந்த மன அழுத்தங்களை, கோபம், விரக்திகளை, இல்லாமல் செய்வதற்காகவே தம்பதிகள் பேசிக் கொள்வது தொடுகை பிணைப்புகளை ஏற்படுத்தி பரஸ்பரம் மகிழ்ச்சியான வார்த்தைகளை பரிமாரிக் கொள்ள வேண்டும் ஆனால் மன அழுத்தம் மற்றும் பிஸியான கால அட்டவணைகளை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் போது நெருக்கம் பாதிக்கப்படலாம் எனவே கிடைப்பதற்கு அரிதான மனிதப் பிறவியில் கணவன் மனைவி உறவு என்பது புனிதமானது  அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து முடிக்கவும் திருமண முறிவுகளில் இருந்து விடுபடவும் நெருக்கம் அத்தியாவசியம் ஆகிறது 

எட்டாவது காரணம்: 

மாமியார் குறுக்கீடு:ஒரு திருமணத்தில் மாமியார் என்பவர் ஆசீர்வாதமாகவோ அல்லது சாபமாகவோ இருக்கலாம் பல திருமண முறிவுகளுக்கு இந்த மாமியார் உறவு பலமான காரணமாக இருப்பதாக பல ஆய்வறிக்கைகள் கூறுகிறது 

மாமியார் தொல்லை பெண்களுக்கு மட்டும் இல்லை  ஆண்களுக்கும் தான் இந்த விடயம் பலருக்கு தெரிவதில்லை மணமகள் விடயத்தில் மாமியார் நேரடியாக தலையிடுகிறார் மருமன் விடயத்தில் மகள் மூலமாக தலையிட்டு குழப்பத்தை விளைவிப்பததக கருத்துக்கள் உண்டு 

நீங்கள் ஒரு உறவில் இருந்து இன்னுமொரு உறவுக்கு நுழைந்து விட்டீர்கள் சுய புத்தியை பாவித்து வாழ கற்றுக் கொள்ள தெரியாக  தம்பதியர்களுக்கு மாமியார்களின் தலையீடு அதிகமாகிறது ஒரு மாமியார் தான் வாழ்ந்த காலப் பகுதியின் வாழ்வை பிரதிபலிக்க நினைக்கும் போது இன்றைய சூழலில் வாழும்  பெண்களுக்கு அது பொருந்தாது இதனால் குடும்பங்களுக்குள் ஏதோ ஒரு குறை,  குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும் இந்த நிம்மதியில்லா தன்மை நாளடைவில் தம்பதிகளின் மன முறிவுக்கு வழி வகுக்கிறது

 எப்படிப்பட்ட  நெருங்கிய உறவினராக இருந்தாலும் அதிகப்படியான குறுக்கீடுகள்  உறவை சீர்குலைக்கும். ஒரு ஜோடியின் முடிவுகளில் மாமியார் அதிகமாக ஈடுபடும்போது ​​​​அது பதற்றத்தையும், மோதலையும், உருவாக்கும். 

ஒரு கணவன்  தனது மனைவிக்கும் அவர்களது குடும்பத்திற்கும் இடையில் சிக்கிக்கொண்டதாக உணர்ந்தால் இதனால் ஏற்படும் மன அழுத்தம் திருமணத்தில் உராய்வை ஏற்படுத்தி மனக்கசப்பு மற்றும் விரக்திக்கு வழிவகுக்கும் 

அதனால் உங்கள் குடும்ப உறவில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு  முன்றாவது நபரை தலையிட அனுமதிக்காதீர்கள் குடும்ப உறவுகளாக இருந்தாலும் அதிகப்படியான ஆலோசனைகளை கேட்காதீர்கள் இந்த வாழ்க்கை உங்கள் இருவருடையது  ஆகவே அனைத்து முடிவுகளையும் நீங்களே எடுக்க வேண்டும்  அதே போல் உங்கள் குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகள் பற்றி வெளியில்  எவருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் அவை சமூகத்தில் உங்கள் மதிப்பை இழக்கச் செய்யும்  

திருமண உறவை  பாதுகாக்க மாமியார்களுக்கு எல்லைகளை அமைப்பது அவசியம்  ஆனால் இது ஒரு நுட்பமான சமநிலை. மரியாதையுடனும் புரிதலுடனும் இருப்பது முக்கியம் அதே சமயம் திருமண உறவின் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் மனைவி மற்றும் உங்கள் மாமியார் இருவருடனும் திறந்த பாசப்பிணைப்பான தொடர்பு முக்கியமானது குடும்பத்தில் மாமியார்களின் ஆலோசனைகள் தெவை  அது அதைச் இதை செய்யாதே எனும் நிர்ப்பந்தமாகும் போது வீன் குழப்பங்கள் ஏற்படுகிறது 

ஒன்பதாவது காரணம்: 

கடந்த கால வாழ்க்கைகள்: திருமண வாழ்வில் புயல் போல் பிரச்சனைகளை உருவாக்கக் கூடியது கடந்தகால  வாழ்க்கை ரகசியங்கள்  ஆனோ பெண்ணோ இருவருக்கும் திருமணத்திற்கு முன்பு காதல் உட்பட தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் நிச்சயம் இருக்கும்  இவற்றை திருமணத்தின் போது நம்பிக்கையோடு பகிர்ந்து கொண்டாலும்    ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்  முரண்பாடுகள் வாக்குவாதங்கள் எழும் போது  கடந்த கால வாழ்க்கை கைசியங்கள் திடீரென பேசு பொருளாக மாறும் போது  மனவிரக்தி கோபம் வாழ்வின் மீது நம்பிக்கையினம் ஏற்படுகிறது இவை தற்போதைய குடும்ப வாழ்வில் பூகம்பத்தை கொண்டு வந்து  விவாகரத்து செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்துகிறது  அதற்கான தீர்வு என்பது வாழ்க்கைத் துணையிடம் கடந்த காலம் பற்றி பேசாதிருப்பது மட்டுமே 

 பத்தாவது காரணம் 

அடிமைத்தனம்: ஒருவரை ஒருவர் அடிமைப் படுத்துதல்,தாழ்த்தி பேசுதல்,மனச் சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை பெரும்பாலும் நயவஞ்சகத்தனமானவை அவை அதிகமாக மாறும் போது உறவுகளுக்குள் தீர்க்க முடியாத விரிசல்கள் உருவாகின்றது. ஆணாதிக்கத் தன்மை மேலெழும் போது  பெண் அந்த உறவிலிருந்து விடு பட எத்தனிக்கிறாள் அதே போன்று தொழில் ரீதியா ஒரு பெண் அதிக வருமானம் ஈட்டும் சந்தர்ப்பத்தில் கனவனை மதிக்காத தன்மை நிகழும் போதும்  மண வாழ்வை ஒரு சேர கொண்டு போக முடியாத நிலை ஏற்படுகிறது 

நீடித்த சிக்கல்களைத் தீர்ப்பதில் சிகிச்சையின் சக்தி

தீர்க்கப்படாத கடந்தகால சிக்கல்களுடன் போராடும் தம்பதிகளுக்கு மனநல சிகிச்சை ஒரு விலைமதிப்பற்ற கருவியாக இருக்கும் .இந்தப் பிரச்சனைகளை ஆராய்வதற்கும் நுண்ணறிவைப் பெறுவதற்கும் சமாளிப்பதற்கான ஆரோக்கியமான வழிகளை உருவாக்குவதற்கும் இது பாதுகாப்பான இடத்தை வழங்குகிறது. 

சிகிச்சையின் மூலம் தம்பதிகள் ஒருவருக்கொருவர் தூண்டுதல்களைப் பெற்று புதிய வாழ்வைப் புரிந்துகொள்வதற்கும் பழைய காயங்களைக் குணப்படுத்துவதற்கும்  ஒன்றாக வேலை செய்வதற்கும் வழி வகுக்கும்  இது கடந்த காலத்தை சரிசெய்வது அல்ல மாறாக உறவை வலுப்படுத்தும் வகையில் எவ்வாறு முன்னேறுவது என்பதைக் கற்றுக்கொள்வது. பல ஜோடிகளுக்கு சிகிச்சையானது கடந்த காலத்திலிருந்து விடுபடுவதற்கும் ஆரோக்கியமான அதிக நெகிழ்ச்சியான திருமணத்தை உருவாக்குவதற்கும் உதவுகிறது   

தம்பதிகள் கவனிக்காதவை

திருமண ஸ்திரத்தன்மை பற்றிய விவாதங்களில் மன ஆரோக்கியம் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை இருப்பினும் அது ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. மனச்சோர்வு பதட்டம் மற்றும் பிற மனநலப் பிரச்சினைகள் திருமணத்தை பாதிக்கலாம் குறிப்பாக அவற்றிற்கு சிகிச்சை பெறாமல் விட்டால்  இறுதி வரை தம்பதியினர் மனநல சவால்களுடன் போராடும் நிலை ஏற்படும் 

நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கான நடைமுறை குறிப்புகள்

தொடர்பு மற்றும் நம்பிக்கை ஆகியவை வெற்றிகரமான திருமணத்தின் தூண்கள். இந்த தூண்களை வலுப்படுத்த தம்பதிகள்  திறந்த மற்றும் நேர்மையான உரையாடல்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். 

இதன் போது பெரிய பிரச்சினைகளைப் பற்றி பேசுவது மட்டுமல்லாமல் உங்களை சிறிய அன்றாட எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது உங்கள் துணையின்   தேவைகளை உண்மையிலேயே கேட்டு புரிந்துகொள்வது அவற்றை செய்து கொடுப்பது சிறந்த ஒன்றாகும் நம்பிக்கை ஒருமுறை உடைந்துவிட்டால் மீண்டும் கட்டியெழுப்புவது கடினம் எனவே பணம்  முதல் கொண்டு உங்களுடைய அந்தரங்கம் வரை உறவின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படைத்தன்மையைப் பேணுவது அவசியம். உடல் நெருக்கத்தையும் புறக்கணிக்கக்கூடாது. பாசத்தின் வழக்கமான வெளிப்பாடுகள் தொடுதல், வார்த்தைகள், அல்லது செயல்கள் மூலம் துணைகளிடம் பிணைப்பை வலுப்படுத்துகின்றன 

இறுதியாக

தம்பதியர்  உங்கள் வாழ்க்கைத் துணையின் மன நிலையை புரிந்து கொள்ள வேண்டும் கவலையில் இருக்கின்றாரா? அல்லது ஏதேனும் பிரச்சனையில் இருக்கின்ராரா? அல்லது ஏதேனும் வெளியில் சொல்ல முடியாத மன அழுத்தத்தில் இருக்கின்றாரா? என்று அவர்களது மனநிலையை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பது தாம்பத்தியத்தில் மிகவும் கடைப் பிடிக்க வேண்டிய ஒன்றாகும்  சிலர்  வெளியில்  ஒன்றும் இல்லாதவாறு காட்டிக் கொண்டாலும் அவர்களது அடிமனதில்  ஒரு தாக்கம் இருக்கும் அவற்றை கண்டறிந்து ஆதரவாக இருப்பது அவசியம் 

அவர்களிடம் காணப்படும் சிக்கல்களில் ஏதேனும்  உங்களால் அறிய முடிந்தால்  அவை பெரிதாகும் வரை காத்திருக்க வேண்டாம். உடனடியாக அதற்குரிய மாற்று வழியை கையாளுங்கள்  அவர்களோடு  ஒன்றாக அதிக நேரத்தைச் செலவிடுதல் போன்றவற்றின் மூலம் உடனடியாக  நடவடிக்கை எடுங்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பது அன்பைப் பரிமாறிக் கொள்வதும் நீடித்த திருமணத்திற்கான திறவுகோல் ஆகும்  மேலும்  சாத்தியமான ஆபத்துக்களைப் பற்றி அறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உங்கள் திருமணத்தைப் பாதுகாத்து  எதிர்வரும் காலங்களில்  அன்பு ஆதரவு மற்றும் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *