கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் (25) ஏற்பட்ட இரண்டு விபத்துகளில் இரண்டு பேர் பலியானதுடன் பலர் காயமைந்து மருத்துவமையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது

அதன்படி கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவர் கிளிநொச்சி 190 ஆம் இலக்கத்தில் வசிக்கும் 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஆவார்.
குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் சிவபால சுப்பிரமணியம் நேரில் சென்று நிலமையை பார்வையிட்டுஇ மரண விசாரணை மேற்கொள்ள உயிரிழந்தவரின் சடலத்தை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பினார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்ததாக கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவங்கள் தொடர்பான தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது