மன்னார் மடுவில் இருந்து கொழும்பு சென்ற பாரவூர்தி தடம் புரண்டது

5 / 100 SEO Score

மன்னார் மடுவிலிருந்து வவுனியா வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனை பகுதியில் பாரவூர்தி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.

556427 2

இந்த விபத்து சம்பவமானது நேற்றையதினம் (18) இரவு இடம்பெற்றுள்ளது

 பிரமனாளங்குளம் – பரப்புக்கடந்தான் வீதியில் பெரியதம்பனை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

மடுவில் இருந்து கொழும்பு செல்லும் நோக்கில் பயணித்த குறித்த பாரவூர்தி பெரியதம்பனை பகுதியில் பிரமனாளங்குளம் – பரப்புக்கடந்தான் வீதி இணைப்பு வீதியை கடக்க முற்பட்ட வேளையே விபத்து சம்பவித்திருக்கிறது.

பாரவூர்தியில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது 

விபத்துக்குள்ளான பாரவூர்தியை இன்றைய தினம் (19)  மாலை கிரேன் உதவியுடன் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *