வீதி விபத்தில் இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு சாரதி தப்பி ஓட்டம்

9 / 100 SEO Score

ஹபரணை – திருகோணமலை வீதியில் அநுராதபுரம்இ ஹபரணைஇ கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Screenshot 2025 05 17 134016 copy

இந்த விபத்து இன்றைய தினம் சனிக்கிழமை (17) காலையில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது

நேருக்கு நேர் மோதியதில்
இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் எதிரே வந்த வாகனமொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் திருகோணமலை கந்தளாய் பகுதியைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர் என்றும் தெரிவிக்ப்பட்டது

சாரதி தப்பி ஓட்டம்
இதனையடுத்து விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் சந்தேக நபரை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *