பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்ன? இலகுவான விளக்கம் -ஜெகன்
பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்ன? என்று நம்மிடையே பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் மேலைத்தேய நாட்டவர்கள் இந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதியை தெரிந்து கொண்டு அதை சரியாக கடைபிடித்து வாழ்வில் வெற்றி மேல் வெற்றியை பெற்று வருகிறார்கள்
பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்ன? என்று இன்று கூகுளிலும் சரி யூடியூபில் எங்கு தேடினாலும் கிடைக்கும் அறிந்து கொள்ளலாம் பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்பது ஒரே மாதிரி இருக்காது ஒவ்வொருவருக்கும் அது வித்தியாசப்படும் நாம் கேட்பது கிடைக்கிறது நாம் நினைப்பது நடக்கிறது எல்லாமே இந்த பிரபஞ் ஈர்ப்பு விதியின் மூலம் தான் பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்றால் என்னவென்று தெரியாமல் அதை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் ஒவ்வொருவரும் நிறைய பெற்றுள்ளோம் அதைப் பற்றி தெரிந்து கொண்டால் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு எதையும் சாதிக்க முடியும்
பிரபஞ்சத்திடம் கேளுங்கள்
நம் தேவைகள் அனைத்தும் இந்த பிரபஞ்சத்திலிருந்தே கிடைக்கிறது நாம் எது கேட்டாலும் இந்த பிரபஞ்சம் அள்ளித் தரும் பிரபஞ்சத்திற்கு நாம் வாத்தையால் கேட்பதைவிட மௌனமாக எண்ணத்தால் வெளிப்படுத்துவதையே அது விரைவாக புரிந்து கொள்ளும் இன்று நினைப்பதை நாளையே செய்து தருமா என்றால் இல்லை உங்கள் எண்ணத்தின் வலிமை எவ்வாறு உள்ளதோ அதற்கேற்றாற் போல் அது உங்களுக்காக சூழல ஆரம்பிக்கும் இந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதியை எவ்வாறு நம்புவது என்ற கேள்வி எழலாம் பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் முதல் வெற்றி என்பது 'நம்பிக்கை' கிடைக்கும் என்றால் அது கிடைத்தே தீரும் அடுத்ததாக நன்றியுணர்வு அமைதி மன்னிப்பு தொடர்முயற்சி வலிமையான எண்ணம் உள்ளோர்களின் கட்டளைகளையும் வேண்டுதலையும் இந்த பிரபஞ்சம் நிறைவேற்றித் தரும்
பிரபஞ்சம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் வானம், காற்று, நெருப்பு, நீர், மற்றும் நிலம் எனும் பஞ்ச பூதங்கள் இறை நம்பிக்கை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருந்தாலும் நமது தேவைகளை இந்த பஞ்ச பூதங்கள் மூலமாகவே பெற்று வாழ்கிறோம் இவை நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் மனிதன் உயிர் வாழ மட்டுப்படுத்தப்பட்ட அளவே கிடைக்கிறது ஆனால் இந்த பிரபஞ்சத்தின் ரகசியங்களை புரிந்து கொண்டால் அதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம்
ஏனெனில் இந்த பிரபஞ்சத்தின் பார்வையில் நாம் அனைவரும் விருந்தாளிகள் போலத் தான் என்று ஒருநாள் இந்த பூமிமை விட்டு சென்று விடுவோம் என்று அதற்குத் தெரியும் அதனால் ஒவ்வொரு மனிதனும் இந்த பூமியில் வாழும் வரை அவனது தேவைகளை கவனித் இந்த பூமியில் இருந்து அவன் விடைபெறும் போது மன மகிழ்ச்சியுடன் அவனை அனுப்ப வேண்டும் என்பதே இந்த பிரபஞ்சத்தின் விருப்பம்
சாதாரனமாக ஒரு மனிதனுக்கு வழங்கப்படும் நண்மைகளையே இந்த பிரபஞ்சம் வழங்கிக் கொண்டிருக்கிறது மேலதிகமாக எது கிடைத்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்பதை நீங்கள் தான் இந்த பிரபஞ்சத்திடம் கேட்க வேண்டும் உங்களுக்கு என்ன தேவை நீங்கள் என்னவாக போகிறீர்கள் என்பதை எண்ணத்தின் மூலம் வெளிப்படுத்துங்கள் அந்த பொருளின் மீது அல்லது அந்த செயற்படுகளின் மீது பெரும் விருப்பம் கொள்ளுங்கள் அதைப்பற்றியே நினையுங்கள், அதைப்பற்றி கற்பனை செய்யுங்கள், அது கிடைத்து விட்டதாக உணருங்கள் நம்பிக்கையீனத்தையும் நெகடிவ் சிந்தனைகளையும் வெளிப்படுத்தாதீர்கள் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பது போலவே உணருங்கள் இந்த பிரஞ்சத்திற்கு எப்பொழுதும் நன்றியுணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருங்கள்
உங்களை அறியாமல் இந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதியை ஒவ்வொருவரும் சில தருணங்களில் உணர்ந்திருப்பிர்கள்
உதாரணம் 1
நீங்கள் யாரோ ஒருவரை சந்திக்க வேண்டும் என்று இரண்டு மூன்று நாட்களாக அந்த நபரை நினைத்துக் கொண்டிருப்பீர்கள் எங்கே எப்படி சந்திப்பது என்ன பேசுவது என்று கூட மனதுக்குள் நினைத்துக் கொண்டிருப்பீர்கள் அவரை நீங்கள் தேடிப் போகாமலேயே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் உங்கள் முன் நிற்பார் நீங்கள் திகைத்துப் போய் அய்யோ உங்களை நான் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் வந்து விட்டீர்கள் என்பீர்கள் இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது உங்கள் எண்ணத்தின் மூலம் வெளிப்படுத்தினீர்கள் அந்த நபரை நீங்கள் சந்திக்க விரும்புனீர்கள் அதை இந்த பிரபஞ்சம் புரிந்து கொண்டு அவரை உங்களிடமே அழைத்து வந்து விட்டது
உதாரணம் 2 நீங்கள் வாயால் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பீர்கள் சிறிது நேரத்தில் அந்த பாடல் எங்கோ ரேடியோவில் போகும் அல்லது ஐஸ்கிரீம் போன்ற வியாபார வண்டிகளில் அந்த பாடல் இசைக்கப்படும் எப்படி நீங்கள் அந்த பாடல் மீது பெரும் விருப்பம் கொண்டீர்கள் பிரபஞ்சம் உங்கள் அருகில் கொண்டு வந்து அந்த பாடலை இசைக்க வைத்துள்ளது
உதாரணம் 3
நீங்கள் ஒரு தாயாக இருந்தால் குழந்தையை தூங்க வைத்து விட்டு ஏதோ ஒரு அவசரமான வேலையை செய்து கொண்டிருப்பீர்கள் ஆனால் மனதுக்குள் அந்த குழந்தையின் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் அய்யோ வேலை முடியும் வரை விழிந்து விடக் கூடாது என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு வேலையை செய்வீர்கள் உங்கள் வேலையை முடிந்து முகம் கழுவி துடைக்கும் போது குழந்தையின் அழுகை சத்தம் அல்லது சினுங்கள் அல்லது அம்மா என்று கூப்பிடும் நீங்கள் அரக்கப்பறக்க ஓடிப் போய் தூக்குவீர்கள்
நீங்கள் எண்ணத்தின் மூலமாக இந்த பிரபஞ்சத்திற்கு உணர்த்தியது என்ன உங்கள் வேலை முடியும் வரை குழந்தை எழும்பி விடக் கூடாது என்று அதை இந்த பிரபஞ்சம் அப்படியே செய்தது ஒரு வேளை அந்த குழந்தை பற்றி சிந்தனை இல்லாமல் நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தால் அந்த குழந்தைக்கு இயற்கையாய் விழிப்பு வரும் வரை தூங்கியிருக்கும் அந்த குழந்தை அரைவாசியில் எழும்பியது உங்கள் மூலமாகவே இந்த பிரபஞ்சத்தின் தூண்டல் நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை இந்த பிரபஞ்சம் செய்து தரும்
உதாரணம் 4
உங்கள் கையில் தொலைபேசி இருக்கும் வரை எவரிடமும் இருந்து அழைப்புகள் வராது அதுவே நீங்கள் சார்ஜ் போட்டுவிட்டு குளிக்கப் போய் விட்டால் அந்த தொலைபேசி ஞாபகம் வந்தவுடன் யாராவது கோல் எடுத்திருப்பாங்க கோல் எடுத்திருப்பாங்க என்று நினைத்துக் கொண்டு குளிப்பீர்கள் அதே போல் நீங்கள் வந்து தொலை பேசியை பார்க்கும் போது உங்களுக்கு அறியாதவன் தெரியாதவன் என்று பல மிஸ்ட் கோல் இருக்கும் நீங்கள் அச்சந்தர்ப்பத்தில் தொலை பேசியை நினைக்காமல் இருந்திருந்தால் இது நிகழ்ந்திருக்காது நீங்கள் என்ன எப்படி நினைத்தீர்கள் யாராவது அல்லது எவராவது கோல் எடுத்திருப்பார்கள் என்று அதுதான் உங்களுக்கு அறிமுகம் இல்லாத நம்பர்களில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது இந்த விடயம் சாதாரணமாக நிகழ்ந்ததில்லை உங்கள் எண்ணங்களால் அந்த செயற்பாட்டை கவர்ந்திழுத்து உள்ளீர்கள் என்பது இப்போது ஞாபகத்தில் வரும்
இவ்வாறு சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் உங்களாலும் பிரபஞ்ச ஈர்ப்பு விதியை பெற்றுக் கொள்ள முடியும் உங்களிடம் வலிமையான எண்ணங்கள் உள்ளது உங்கள் கஷ்டங்களை போக்கிக் கொள்ளலாம் நல்ல தொழில் வருமானங்களை பெற்றுக் கொள்ளலாம் கூடுதலாக வரும் நோய் நொடிகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் உங்கள் எதிரிகளை இந்த பிரபஞ்சமே பார்த்துக் கொள்ளும் நீங்கள் பிரபஞ்சத்தை நம்பி உங்களை ஒப்படைத்து விட்டால் உங்களுக்காக இந்த பிரபஞ்சம் சுழல ஆரம்பிக்கும் பிரபஞ்ச ரகசியம் மாபெரும் கடல் இங்கே நம்பிக்கையும் வலிமையான எண்ணங்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்
உங்களது வெற்றிக்கு உங்களது எண்ணங்களே காரணம்
நன்றி
ஜெகன்
COMMENTS