இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் புயல் பாதுகாப்பு மண்டபங்கள் அவசரத் தேவை
இந்த புயல் பாதுகாப்பு மண்டபம் அல்லது கட்டிடங்கள் அல்லது மையம் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும் சிலருக்கு தெரியாமலிருக்கும் அவ்வாறு தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும் புயல் பாதுகாப்பு மண்டபங்கள் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இலங்கயில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த புயல் பாதுகாப்பு மண்டபங்களை அமக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த காணொளி தயாரிக்கப்படுகிறது
புயல் பாதுகாப்பு மண்டபத்தின் பயன்கள் என்ன?
புயல் பாதுகாப்பு மண்டபங்கள் (Cyclone Shelters) கடும் மழை புயல் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது மக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க பயன்படும் முக்கியமான வசதிகள் கொண்ட கட்டிடங்கள் ஆகும்
இந்த கட்டிடங்கள் முக்கியமாக முதலுதவி அவசர சிகிச்சை கூடங்கள் போலவே கையாளப்படும் இலங்கை ஒரு தீவாக இருப்பதாலும் ஒவ்வொரு வருட இறுதியிலும் கடும் மழை மற்றும் தாழமுக்க பாதிப்புகளால் இலங்கையின் அனைத்து பகுதி மக்களும் பாரிய பாதிப்புகளை எதிர் கொள்கிறார்கள்
திடீரென ஏற்படும் இயற்கை அனர்த்தங்களினால் வெள்ளம் தேங்கி நிற்கும் போது அருகில் உள்ள பாடசாலைகள் ஆலயங்கள் சிறிய பொது நோக்கு மண்டபங்களில் அனத்து மக்களும் தங்க வைக்கப்படுகிறார்கள் இந்த மக்கள் தங்கியிருக்கும் பாடசாலைகள் ஆலயங்கள் பொது நோக்கு மண்டபங்கள் சூறாவளி புயல் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்களுக்கு பாதுகாப்பானதா என்றால் நிச்சயமாக இல்லை ஏனெனில் குறித்த கட்டிடங்களும் சாதாரணமாக நில மட்டத்துடன் இருப்பதால் உழுங்கான புயல் சூறாவளி வெள்ளங்கள் வரும் போது இடிந்து விழும் தன்மை கொண்டதே
ஒவ்வொரு வருடமும் வரும் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களினால் இலங்கையின் வடக்கு கிழக்கு மலையகப் பகுதிகள் குறைவான உயிர் சேதங்களும் பாரிய பொருள் சேதங்களையும் ஏற்படுத்திச் செல்கின்றது புயல் அல்லது சூறாவளி என்று மக்கள் எதிர்பார்த்து அச்சத்துடன் இருக்கும் போது தெய்வாதீனமாக புயல் அல்லது சூறாவளி வலுவிழந்து செல்கிறது இலங்கையில் மழை வெள்ள காலங்களில் 2004 சுனாமிக்குப் பிறகு உயிர்ச் சேதங்கள் குறைவு இதற்குக் காரணம் வானிலை ஆய்வு மையங்களால் கணிக்கப்படுகின்ற புயல் சூறாவளி போன்றவற்றின் தரவுகள் இறுதி நாட்களில் திசை மாறி அல்லது வலுவிழந்து வெல்வதுதான் வானிலை ஆய்வு மையங்கள் கணிப்பது போலவே புயல் அல்லது சூறாவளி இலங்கையை தாக்குமாக இருந்தால் நம்மால் மீள முடியாத இழப்புகளை தரும் என்பதை இலங்கையர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்
அவ்வாறு வானிலை ஆய்வு மையங்களின் கனிப்புகள் பிசகாமல் ஒரு புயலோ அல்லது சூறாவளியோ தாக்கும் போது மக்கள் தப்பித்துக் கொள்வதற்காகவே இந்த புயல் பாதுகாப்பு மண்டபங்கள் அமைப்பது மிகவும் அவசியம் இதுவரை அந்த புயல் பாதுகாப்பு மண்டபங்கள் அமைப்பது பற்றி சிந்திக்காமல் இருந்தாலும் இனி வரும் காலங்களில் இலங்கை முழுவதிலும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் மட்டுமல்ல ஏனைய கிராமங்கள் தோறும் அமைப்பது கட்டாய தேவையாகும்
இந்த கட்டிடங்களை எவ்வாறான இடங்களில் அமத்துக் கொள்ளலாம் என்றால் உயரமான இடங்கள் எளிதாக வெள்ள நீர் வழிந்தோடக் கூடிய இடங்களில் அமைப்பது சாலச் சிறந்தது இவை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது தற்போதும் அவற்றை அமைப்பதற்கான வேலைகளை செய்து வருகிறார்கள்
இவ்வாறு ஆங்காங்கே புயல் பாதுகாப்பு மண்டபங்கள் அமைக்கப்பட்டிருக்கும் போது
ஏதேனும் பேரிடர் ஒன்று நிகழ்வதற்கு முன்னெச்சரிக்கையாக மக்கள் அனைவரையும் இந்த மண்டபங்களுக்குள் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யலாம். ஒரு அனர்த்தம் நிகழ்ந்த பிறகு அந்த மக்களை மீட்டெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி மேலும் மேலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது இவற்றை நாம் பல உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சூறாவளி புயல் வெள்ளம் மண்சரிவு போன்றவற்றை பார்த்திருக்கின்றோம் அவ்வாறு ஒரு நிலமை வருவதற்கு முன் நாம் எச்சரிக்கையாக செயற்படுவது எம் அனைவருக்கும் நல்லது
கட்டிடங்கள் அமைக்கும் போது நிலத்திலிருந்து சற்று உயராமாக முதலாவது தளம் அமைக்கப்பட்டு அதற்கு மேலாக வலுவான இரண்டு மூன்று தளங்களும் வேகமாக வரும் காற்றுகள் தடைப்படாமல் திறந்தவெளி ஜன்னல்கள் அமைக்கப்பட வேண்டும் வேகமாக வரும் காற்று தடைப்படும் போது அவை கட்டிடங்களை சாய்த்துச் செல்கிறது காற்று செல்வதற்கு வழிகள் இருக்கும் போது கட்டிடங்கள் தப்பித்துக் கொள்கிறது
மிகவும் தாழ்நிலப் பிரதேசங்களான வடக்கு மற்றும் கிகை;கில் இந்த புயல்பாதுகாப்பு மண்டபங்கள் அமைப்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக காணப்படுகிறது குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இவை தாமதிக்காமல் செய்வது மக்களை உயிரழிவில் இருந்து பாதுகாக்க வல்லது
மன்னார் மாவட்டத்தை பொறுத்த மட்டில் கடல் மட்டத்திலிருந்து தாழ்வாக காணப்படுகிறது வெள்ள நீர் வழிந்தோடுவதில் தாமதம் ஒரு வாரம் பெய்யும் தொடர் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நீர் நிறைந்து விடுகிறது இது மன்னார் மாவட்டத்தில் அனைத்து பிரதேசங்களுக்கும் பொருந்தும் முக்கியமாக புயல் வெள்ளம் காரணமாக தங்களது வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் பாடசாலைகள் ஆலயங்கள் பொது நோக்கு மண்டபங்கள் போன்றவையும் உறுதியான பாதுகாப்பை தந்து விடாது என்பதனை மீண்டும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்
இந்த புயல் பாதுகாப்பு மண்டபங்கள் மனிதர்களுக்காக மட்டுமா? சிறந்தது என்று கேட்டால் அவ்வாறு இல்லை விவசாயிகளிடம் உள்ள கால்நடைகளை கூட பாதுகாத்துக் கொள்ளலாம்
இதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் பெய்த கடும் மழையால் நிலம் முழுவதையும் நீர் ஆக்கிரமித்து நின்ற போது மட்டக்களப்பு பகுதியில் கழிவு மீள் சுழற்சி செய்யும் கட்டிடங்களில் காட்டு யானைகள் ஏறி நின்று தங்கள் உயிரை பாதுகாத்துக் கொண்டது
இந்த புயல் பாதுகாப்பு கட்டிடங்களை அரசாங்கம் மட்டுமே அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கருதுவதில் நியாயம் இல்லை தனவந்தர்கள் வியாபாரிகள் விவசாயிகள் போன்ற தனிநபர்களும் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் வெள்ள நீர் தேங்கி நிற்காத மேட்டு நிலங்களில் இவ்வாறான கட்டிடங்களை அமைத்துக் கொண்டால் வெள்ள அனர்த்தம் தவிர்ந்த நாட்களில் பொருட்களை பாதுகாத்து வைத்தல் நெல் காயப் போடுதல் போன்ற பலவாறான செயற்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்
இனி வருங்காலங்களில் காலநிலை எவ்வாறு அமையுமோ எவருக்கும் தெரியாது எல்லா காலங்களிலும் புயல் சூறாவளி போன்றவை வலுவிழந்து திசைமாறி போகும் என்று கூறமுடியாது பல உலக நாடுகளை தாக்கியது போல இலங்கை தாக்கப்படுமானால் கண்மூடி திறப்பதற்குள் இலங்கை நிலை குலைந்து போகும் பாரிய உயிர்ச் சேதம் எற்பட்டு மீளமுடியாத பெருந்துயரை நாம் சந்திக்க நேரிடும் எனவே உயர் மட்ட அரச அதிகாரிகள் மக்க பிரதிசநிதிகள் புயல் பாதுகாப்பு மணிடபங்கள் அமைப்பது தொடர்பாக கவனம் எடுங்கள் மாவட்டங்கள் பிரதேசங்கள் தோறும் ஒழுங்கு செய்யப்படும் அபிவிருத்திக் குழு கூட்டங்களில் இவை தொடர்பாக பேசி முன்னுரிமை அடிப்படையில் புயல் பாதுகாப்பு மண்டபங்களை அமைத்து இயற்கை பேரழிவிலிருந்து இலங்கையையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்
COMMENTS