Page Nav

HIDE

Breaking News:

latest

முக்கியமான 6 கட்சிகள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடத் தடை வர்த்தமானி அறிவித்தல்

நாடாளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிடமுடியாது  என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ...

நாடாளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிடமுடியாது  என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஈழவர் ஜனநாயக முன்னணி ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி

ஐக்கிய லங்கா மகா சபை லங்கா ஜனதா கட்சி 

இலங்கை முற்போக்கு முன்னணி உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இதே நேரம் தமிழரசுக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பெயர் பட்டியலில் உள்வாங்கப்படாத கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்இ தனது அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இன்று அல்லது நாளைய தினம் அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.   

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.   

அதன்படி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக எஸ்.சிறிதரன்இ எம்.ஏ.சுமந்திரன் எஸ்.சி.சி.இளங்கோவன் கேசவன் சயந்தன் சந்திரலிங்கம் சுகிர்தன் சுரேக்கா சசீந்திரன்இ இம்மானுவன் ஆர்னோல்ட் கிருஸ்ணவேணி சிறிதரன் தியாகராயா பிரகாஷ் ஆகியோர் வேட்பாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர். 

 


No comments