Page Nav

HIDE

Breaking News:

latest

தேர்தல் தினத்தில் வாக்காளர்கள் தவித்துக் கொள்ள வேண்டியவை-தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கமுடியும். எனவே கால தாமதமின்றி  குடிமக்கள...

எதிர்வரும் சனிக்கிழமை 21 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கமுடியும். எனவே கால தாமதமின்றி  குடிமக்கள் தங்களது வாக்குகளை  அளிக்குமாறு தேர்தல் அதிகாரிகள் கேட்டக் கொண்டுள்ளார்கள் 

தவிக்க் வேண்டியவை

வாக்களிக்கச் செல்லும்  போது அயலவர்கள்  நண்பர்கள் என்பவர்களோடு  வாக்குச் சாவடிக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்வது நல்லது   உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எடுத்துச் செல்ல வேண்டும் . வாக்காளர்  தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் மட்டுமே  வாக்களிக்க முடியும். எனவே நேர்த்தியான முறையில் தனது வாக்குகளை அளிக்குமாறு  கோரிக்கை விடுத்துள்ளனர் 

வாக்களிக்கும் முறைமை

வாக்காளருக்கு  விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்கும் போது வேட்பாளரின் பெயருடன் காணப்படும்  வாக்குச் சீட்டில் வாக்களிப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள கூட்டுக்குள்  வாக்கினை அளிக்க வேண்டும்.

வாக்காளர் தனது முதல் வாக்கினை அளிக்கும் போது 1 எனவும் விருப்பு வாக்குகளை அளிக்கும் போது 2 3 எனவும் வாக்களிக்க முடியும். 

 மேலதிக தேர்தல் ஆணையாளர் கருத்து 

அதற்கு மேலதிகமாக தேர்தல் ஆணைக்குழுவின் சட்டதிட்டத்துக்கு அமைய விருப்பத் தெரிவினை இடுவதற்காக புள்ளடி இட முடியும் என்பதுடன் மேலதிக கோடுகள் காணப்படும் போது வாக்கு நிராகரிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க  தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர். எஸ் அச்சுதன் ஆகியோர் குறிப்பிட்டனர்.

போக்குவரத்து ஏற்பாடுகள் 

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு  1இ358 பஸ்கள்  சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

பொலிசாரின் கடமைகளுக்கு 

இந்நிலையில்இ ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்காக 175 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அமைதியை பேணவும் 

அத்துடன் வாக்களிப்பதற்கு நிலையத்திற்கு செல்லும் போதும் வாக்குகளை அளித்த பின்னர் அமைதியை கடைப்பிடித்து நீதியான தேர்தல் நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கேடட்டுக் கொண்டார்கள் 



No comments