Page Nav

HIDE

Breaking News:

latest

வவுனியா அரச பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு!

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்...

தமது ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலங்கை போக்குவரத்துசபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றயதினம் வவுனியா புதியபேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த அரசபேருந்தின் நடத்துனர் மற்றும் ஊழியர்கள் மீது வவுனியாவில் இருந்து கொழும்புநோக்கி பயணிக்கும் தனியார் பேருந்தின் ஊழியர்கள் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தால் அரச பேருந்துத்தரப்பினை சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டவர்களை கைதுசெய்யுமாறும் தமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தேவை என்றும் ,உயிர் அச்சுறுத்தல் மத்தியில் பணிபுரிய முடியாது என்றும் தெரிவித்து போக்குவரத்துச்சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று காலை முதல் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர் இதேவேளை பேருந்து நிலையத்திற்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு தேவை என்றும் தெரிவிக்கின்றனர் .

இதேவேளை தமது கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கத்தவறும் பட்சத்தில் வடமாகாணரீதியாக பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

குறித்த நடவடிக்கை காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.

Parameswaran Kartheeban 


No comments