Page Nav

HIDE

Breaking News:

latest

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேடதேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட  இலகுரக மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேரை ...

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விஷேடதேடுதல் நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட  இலகுரக மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவமானது நேற்றைய தினம் 2024 செப்டெம்பர் 16 ஆம் திகதி  இடம்பெற்றுள்ளது 

இலங்கை கடற்படை தனது கடல் மற்றும் கரையோரப் பகுதிகளுக்குள் சட்டவிரோத மீன்பிடித்தலை எதிர்த்து நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுஇ விழிப்பு நிலைப்பாட்டை பேணுகிறது. இந்த முன்முயற்சி சட்டப்பூர்வ மீன்பிடி நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் மற்றும் ஆதரவை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த  சம்பவத்தில்  வடக்கு கடற்படை கட்டளையின் வெத்தலகேணி கடற்படையினர்இ செப்டெம்பர் 16 ஆம் திகதி சுண்டிக்குளத்தில் இலகுரக மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேரை கைது செய்ததுடன  அனுமதியற்ற மீன்பிடி சாதனங்களுடன் 02 டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கைகளின் போது பிடிபட்டவர்கள் கொன்னந்தை மற்றும் முள்ளியான் பிரதேசங்களில் வசிப்பவர்கள் என 40 மற்றும் 41 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட  நபர்கள் டிங்கி படகுகள்  மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.


No comments