Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் ரோட்டரி கழகத்தினரால் பொலித்தீன் கழிவுகள் அகற்றும் சிரமதானப் பணி

'ஜீரோ' பொலித்தீன் என்னும் கருப் பொருளுக்கு அமைவாக மன்னார் ரோட்டரி கழக அங்கத்தவர்களால் மன்னார் தலைமன்னார் வீதி லங்கா ஐ.ஒ.சி. எரிபொருள...

'ஜீரோ'பொலித்தீன் என்னும் கருப் பொருளுக்கு அமைவாக மன்னார் ரோட்டரி கழக அங்கத்தவர்களால் மன்னார் தலைமன்னார் வீதி லங்கா ஐ.ஒ.சி. எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு  அருகாமையில் உள்ள வாய்க்காலில் காணப்படும் பொலித்தீன் பைகள் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கண்ணாடி போத்தல்கள்  என்பன  அகற்றி சுத்தம் செய்யப்பட்டது

இந்த நிகழ்வானது மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் திருமலைராசா தனேஸ் அவர்களின் தலைமையில்  இன்று (28)  காலையில் 7.00 மணியளவில் ஆரம்பமாகியது  

குறித்த சிரமதான நிகழ்வில் மன்னார் ரோட்டரி கழக அங்கத்தவர்களுடன் பாடசாலை மாணவர்களை கொண்ட ரோட்டிரக்ட் மற்றும் இன்டிரக்ட் அங்கத்தவர்களும்  மன்னார் நகரசiபையின் ஊழியர்களும் கலந்து கொண்டார்கள் 

இந்த நிகழ்விகன் இணை அனுசரணையினை ஓப்பின் நிறுவனமும் ஒத்துழைப்பினை மன்னார் நகர சபையும் வழங்கியிருந்தது 

இதேவேளை இலங்கையில் உள்ள அனைத்து ரோட்டரி கழகங்களும் இன்று (28) திகதி இந்த பொலித்தீன் கழிவகற்றல் நிகழ்விiனை மேற் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 




No comments