Page Nav

HIDE

Breaking News:

latest

நாளை மறுதினம் (செப். 23 விசேட) அரச விடுமுறை

நாளை மறுதினம் எதிர்வரும் 23 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக இன்றைய தினம் அறித்தல் விடுக்கப்பட்டுள்ளது  இந்த அறிவிப்பை பொது நிர்வாகம் ,உள...

நாளை மறுதினம் எதிர்வரும் 23 ஆம் திகதி விசேட அரச விடுமுறை தினமாக இன்றைய தினம் அறித்தல் விடுக்கப்பட்டுள்ளது 

இந்த அறிவிப்பை பொது நிர்வாகம் ,உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளி வரும் முக்கிய நாள் என்பதாலும் நாளை மறுதினம் பாடசாலைகள் ஒழுங்குபடுத்துவதில் சிரமம் ஏற்படலாம்  அத்துடன்  அரச உத்தியோகத்தர்கள்  இரண்டு நாட்கள் இரவு பகலாக தேர்தல் கடமைகளில் ஈடுபட்டு வருவதால் இந்த அரச விடுமுறை  அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று  பரவலான கருத்துகள் நிகழ்கிறது 

பிரதி பொலிஸமா அதிபர் கருத்து 

அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக 83 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிவில் உத்தியோகத்தர்கள் 

இந்நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 83 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் 2,500 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று தெரிவிக்கப்ட்டது 

வாக்கெண்ணும் நிலையங்கள் 

நாடளாவிய ரீதியில் 51 தேர்தல் வாக்கெண்ணும் நிலையங்களும் 13,421 வாக்கெடுப்பு நிலையங்களும் காணப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை 

இதே வேளை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது தகவல்களை வழங்குவதற்கு 119, 107, 118 (வடக்கு மற்றும் கிழக்கு ) 011 202 7149 ஃ 011 201 3243 மற்றும் FAX - 111 239 9104 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

விஷேட பாதுகாப்பு 

எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தேர்தலிற்கு பிந்தைய நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த விசேட நடவடிக்கை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

#தேர்தல்முடிவுகள் #இலங்கைஜனாதிபதிதேர்தல் #வன்னிமாவட்டம் 



No comments