Page Nav

HIDE

Breaking News:

latest

தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது-ஆரம்பம் தேர்தல்கள் ஆணையாளர்

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார். நல்லிரவுக்குள் மு...

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

நல்லிரவுக்குள் முதல் முடிவுகள் 

இன்று நள்ளிரவுக்குள் முதல் தேர்தல் பெறுபேறு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

நாடு முழுவதும் வாக்குகள்  பதிவான சதவிகிதம் 

 நாடு முழுவதிலும் உள்ள சில முக்கியமான  மாவட்டங்களில் பதிவான வாக்கு வீதங்களின் சதவீதம்  கிடைக்கப்பபெற்றுள்ளது நுவரெலியா 80% கொழும்பு 78% இரத்தினபுரி 75% கேகாலை 72% குருணாகல் 70% கம்பஹா 80% புத்தளம் 78% மொனராகலை 77% பதுளை 73%  அம்பாறை 70% வன்னி 65% மட்டக்களப்பு 64% திருகோணமலை 63.9% பொலன்னறுவை 78%கண்டி 75%- 80% காலி 74% வீதம் ஆகும் 

மிகவும் அமைதியான தேர்தல் 

2024 ஜனாதிபதி தேர்தல்  அமைதியான முறையில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல்  தெரிவித்துள்ளது என்றாலும் வெறும் 164 தேர்தல் வன்முறைகள் பதிவாகியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது 

மன்னார் மாவட்டத்தில்

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்புகள் இடம் பெற்றது  மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள போதும் மன்னாரில்  மொத்தமாக 72.33 வீத வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது அந்த வகையில் 65 ஆயிரத்து 535 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

இதே நேரம் பல அரசியல் கட்சியின் தலைவர்களும் உற்சாகத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

#ஜனாதிபதிதேர்தல் #2024 #todaynews #Politicalnews #postalvotes 



No comments