Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் புத்தளம் பகுதிகளில் பெருமளவு பீடி இலை மூடைகள் மீட்பு

மன்னார் மற்றும் புத்தளம் கடற்கரைப் பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட  தனித்தனியான விஷேட  தேடுதல் நடவடிக்கைகளின் போது  ​​கடத்தப்பட்ட சுமார் 506 கில...

மன்னார் மற்றும் புத்தளம் கடற்கரைப் பகுதிகளில் மேற் கொள்ளப்பட்ட  தனித்தனியான விஷேட  தேடுதல் நடவடிக்கைகளின் போது  ​​கடத்தப்பட்ட சுமார் 506 கிலோ (ஈரமான எடை) பீடி இலை மூடைகளை கடற்படையினர் கைப்பற்றினர்.


இந்த சம்பவமாதனது  நேற்று முன்தினம் (2024 செப்டெம்பர் 20 ஆம் திகதி) இடம்பெற்றுள்ளது 

அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS தம்பபன்னி பகுதியில் செப்டம்பர் 20 அன்று சின்னபாடு மற்றும் தளுவ கடற்கரையில்  13 சாக்குகளில் சுமார் 469 கிலோ 300 கிராம் (ஈரமான எடை) பீடி இலை மூடைகள் கைப்பற்றப்பட்டது

மன்னாரில் உள்ள சவுத் பார் பகுதியில்  விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது ​​ சுமார் 36 கிலோ 700 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள டெண்டு இலைகள் அடங்கிய பொதிகள் மீட்கப்படுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் மொத்தம் 506 கிலோ (ஈரமான எடை) கடத்தப்பட்ட பீடி இலை மூடைகள் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்ட்டது 

புத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டு இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் நிலையத்தில் ஒப்படைக்கப்படும். இதற்கிடையில் மன்னார்  சவுத் பார் கடற்கரைக்கு அருகாமையில் மீட்கப்பட்ட டெண்டு இலைகள் சட்ட நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையின் பாதுகாப்பான காவலில் வைக்கப்பட்டுள்ளன 

மேலும் 2024 ல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இலங்கை கடற்படையினர் 88 தனித்தனி நிகழ்வுகளில் 48000 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலை மூடைகள்  வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 


No comments