Page Nav

HIDE

Breaking News:

latest

பல லட்சம் பெறுமதியான மரக் குற்றிகள் பொலிசாரால் மீட்பு- ஒருவர் கைது

வவுனியாவில் 15இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்கள் மரங்கள் மீட்கப்பட்டதுடன்  இதில் தொடர்புடைய சந்தெகத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட...

வவுனியாவில் 15இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான மரங்கள் மரங்கள் மீட்கப்பட்டதுடன்  இதில் தொடர்புடைய சந்தெகத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 

வவுனியா மகாறம்பைக்குளம் 2ம் ஒழுங்கை பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டிருந்த ஒரு தொகை மரங்கள் இருப்பதாக வவுனியா (DCDB) மாவட்ட குற்ற விசாரனைப்பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கெப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றை சோதனை செய்தபோது சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்களை பொலிஸார் மீட்டுள்ளனர் 

வவுனியா பிரதிபொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களின் உத்தரவில், வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேரா அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு (DCDB) பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நடவடிக்கையில் பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன்,உப பொலிஸ் பரிசோதகர் ராஜகுரு, பொலிஸ் சார்ஜன்ட் ரங்வெல(61518),பொலிஸ் கொன்ஸதாபிள்களான சிந்தக்க(78448), பியரத்ன(77715), குமார(20569), ஹேரத்( 34712), ஜெயவர்த்தன(71423), விதுசன்(91800), நாமல்(95991), குமார(25523), அத்தநாயக்க(90495),திசாநாயக்க(18129) ஆகியோர் குறித்த நடவடிக்கை ஈடுபட்டிருந்தனர்

இக்குற்றச்சாட்டில் மரக்காலை உரிமையாளருடன் பணியாளர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரனைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

JOURNALIST Parameswaran Kartheeban


No comments