Page Nav

HIDE

Breaking News:

latest

புதிய ஜனாதிபதி ஒற்றுமை அபிவிருத்தியுடன் மக்கள் ஆணையை ஈடேற்றுவார் - ரிஷாட் MP

இலங்கை நாட்டின் புதிய ஜனாதிபதியாக மக்களால்  தெரிவாகியிருக்கும்  அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகச...

இலங்கை நாட்டின் புதிய ஜனாதிபதியாக மக்களால்  தெரிவாகியிருக்கும்  அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகச் சுட்டிக் காட்டியிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் 

புதிய ஜனாதிபதி ஒருமைப்பாட்டையும், அபிவிருத்தியையும் ஊக்குவிப்பதன் ஊடாக மக்கள் வழங்கிய ஆணையை அவர் ஈடேற்றுவார் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.

X தளத்தில் பதிவு

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் முதலாவது வாக்குகள் எண்ணப்பட்டு வெளியான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையிலிருந்த வேளையில், அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கூறி தனது உத்தியோகபூர்வ X தளத்தில் செய்த ரிஷாட் பதியுதீன் அவர்கள்  வாழ்த்துப் பதிவை வெளியட்டிருந்தார் 

குறித்த  பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கையின் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றி நாட்டு மக்களின் அபிலாஷைகளின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதுடன், அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் ஊடாக மக்கள் உங்களுக்கு வழங்கிய ஆணையை உரியவாறு ஈடேற்றுவீர்கள் என நாம் நம்புகின்றோம். உங்களது வெற்றிக்கும், நீங்கள் அளிக்கவிருக்கும் தலைமைத்துவத்துக்கும் வாழ்த்துக்கள்' என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்

பல தலைவர்கள் வாழ்த்து

அத்துடன் புதிய ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு  தர்மலிங்கம் சித்தார்த்தன் சுமந்திரன் பொன்றவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள் 

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இணங்கியிருக்கும் நிலையில் அதனை முன்னிறுத்தி அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்குப் பூரண ஆதரவை வழங்குவோம் எனவும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து அவருடன் இனிவருங்காலங்களில் பேசுவோம் எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

எம்.ஏ.சுமந்திரன்

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி சிறந்த முன்னேற்றகரமான நகர்வாகும். நாம் எந்த வேட்பாளரை ஆதரிப்பதென ஆராய்ந்தபோது சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லாத பல விடயங்கள் அநுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனத்தில் இருந்தன.

அதேபோன்று அவர் அரசியலமைப்பில் உள்ளவாறு மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்துவதாகவும்இ காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்துக் கலந்துரையாடலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

தர்மலிங்கம் சித்தார்த்தன்

ஜனாதிபதித்தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி மிகச்சிறந்த மாறுதலாகும். இவ்வேளையில் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் நாட்டை ஊழல் மோசடிகளற்ற தூய நாடாக மாற்றியமைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இருப்பினும் தமிழ்த்தேசிய பிரச்சினையைப் பொறுத்தமட்டில் இனிவருங்காலங்களிலேயே இதுபற்றி அவருடன் பேசுவோம். தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அவர் விசேட கவனம் செலுத்தவேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது' என புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டார். 

அத்துடன் புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

No comments