Page Nav

HIDE

Breaking News:

latest

கடற்படையால் தனித்தனி நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி  நடவடிக்கைகளில் கடத்தி வரப்பட்ட1648 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை)எடை கொண்ட போதையை ஏற்படுத்தும் டெ...

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி  நடவடிக்கைகளில் கடத்தி வரப்பட்ட1648 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை)எடை கொண்ட போதையை ஏற்படுத்தும் டெண்டு எனப்படும் இலைகள் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவமானது  17 மற்றும் 18 ஆம் திகதிகளில்  வெல்லமுண்டலம் முதல் கல்பிட்டி கொலங்கனத்த வரையிலான கடல் பகுதியிலும் கொலங்கநத்தை கடற்கரைக்கு அண்மித்த பகுதியிலும் கடற்படையினர் நடத்திய தனித்தனியான தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் கைப்பற்றப்பட்டது 

செப்டெம்பர் 17 ஆம் திகதி வெள்ளமுண்டலம் முதல் கொலங்கநத்த வரையிலான கடற்பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையில் விரைவு நடவடிக்கை படகு குழாம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் விளைவாக நீரில் மூழ்கியிருந்த சந்தேகத்திற்கிடமான 05 சாக்கு மூட்டைகள் மீட்கப்பட்டன. அந்த சாக்குகளில் 169 கிலோ 500 கிராம் (ஈரமான எடை) கடத்தப்பட்ட டெண்டு இலைகள் இருந்தனஇ அவை கடற்படைக் காவலில் வைக்கப்பட்டன.

இதே நேரம் செப்டெம்பர் 18 ஆம் திகதி கொலங்கநத்த கடற்கரைக்கு அருகில் ளுடுNளு விஜயா மேற்கொண்ட மற்றொரு நடவடிக்கையில் அருகில் உள்ள புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 45 சாக்குகளில் 1479 கிலோ (ஈரமான எடை) எடையுள்ள டெண்டு இலைகள் மீட்கப்பட்டனது 

 இந்த நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட டெண்டு இலைகளின் மொத்த அளவு 1,648 கிலோ மற்றும் 500 கிராம் ஆகும்.

கடத்தல்காரர்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக டெண்டு இலைகளின் இருப்புக்களை கைவிட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

கைப்பற்றப்பட்ட டெண்டு இலைகள் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேற்கு மாகாணத்தில் உள்ள கலால் சிறப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டன.


No comments