Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் பெரிய பாலத்தருகில் உந்துருளி விபத்து

மன்னார்  பெரிய பாலத்தருகில் பல்சர் ரக மோட்டார் சைக்கிள்  பாதையை விட்டு  பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இந்த சம்பவமான இன்று (செ...

மன்னார்  பெரிய பாலத்தருகில் பல்சர் ரக மோட்டார் சைக்கிள்  பாதையை விட்டு  பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த சம்பவமான இன்று (செப் 20)காலையில் இடம்பெற்றுள்ளது 

இந்த விபத்து சம்பவத்தில் உந்துருளியை செலுத்தி வந்த நபர்  ஒருவர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது

உந்துருளியின் அருகில் காணப்படும் பொருட்களை பார்க்கும் போது குறித்த நபர்  வேலை ஒன்றிற்கு சென்றவராக இருக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது 

VIDEO

விபத்து நடைபெற்ற இடத்தில் காணப்படும் உந்துருளியை போக்குவரத்து பொலிசார் பார்வையிட்டு சென்றுள்ளனர் என்பதுடன் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து குறித்த உந்துருளி அகற்றப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைத்ததும் அறியத்தரப்படும் 

VIDEO

No comments