Page Nav

HIDE

Breaking News:

latest

புதிய பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட அமைச்சுகள்

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக சற்றுமுன் (24-9-2024) பதவிப்பிரமாணம் செய்தார். இதேவ...

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய இலங்கையின் இடைக்கால பிரதமராக சற்றுமுன் (24-9-2024) பதவிப்பிரமாணம் செய்தார்.

இதேவேளை பிரதமர் நியமனத்தை தொடர்ந்து இடைக்கால அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றமும் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற கல்வியாளர்  உரிமைகள் செயற்பாட்டாளர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இலங்கையின் 16வது புதிய பிரதமராக  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்

கலாநிதி ஹரிணி அமரசூரிய நீதி கல்வி தொழில்  கைத்தொழில் விஞ்ஞான  தொழில்நுட்பம் சுகாதாரம் மற்றும் முதலீடுகள் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.  

அவருடைய கல்வி அறிவு ஆளுமை   என்பவற்றிற்கு அப்பால் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பெண் ஒருவரை இணைத் தலைவராக இந்த நாட்டில் உருவாக்கி இலங்கை தீவில் வாழுகின்ற 52 விதமான பெண்களுக்கு சமத்துவத்தை வழங்கும் முன்னுதாரணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.




No comments