Page Nav

HIDE

Breaking News:

latest

இந்தோனேசியாவில் திருத்தந்தையிடம் ஆசிகள் பெற்ற மன்னார் மாவட்ட அகதிகள்

திருத்தந்தையின்  45 வது திருப்பயணத்ததில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த  அகதிகள் குடும்பம் ஒன்று ஆசிபெற்றுள்ளனர்  திருத்தந்தை இம் மாதம் செப்டம்ப...

திருத்தந்தையின்  45 வது திருப்பயணத்ததில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த  அகதிகள் குடும்பம் ஒன்று ஆசிபெற்றுள்ளனர் 

திருத்தந்தை இம் மாதம் செப்டம்பர்   2ஆம் தேதி வத்திக்கானிலிருந்து ஆசியா மற்றும் ஒசியானியாவின் 4 நாடுகளுக்கான 45வது திருப்பயணத்தை ஆரம்பித்திருந்தார்.

ஏறக்குறைய 13 மணி நேர விமான பயணத்திற்குப்பின் கடந்த 3/9/2024  செவ்வாய்க்கிழமையன்று இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவை சென்றடைந்தார்.

இந்தோனேசியாவை தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் பாப்புவா நியு கினி கிழக்கு திமோர் மற்றும்  சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 11 நாட்கள் திருப்பயணத்தை மேற்கொண்டடிருந்தார் 

இப்பயணத்தின் போது இலங்கை அகதிகளாக இந்தோனேசியாவில் கடந்த 12 வருடங்களாக வசித்துவரும் மன்னார் மாவட்டத்தின் விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த திரு.சுதாகரன் அவரது மனைவி ஜொய்லின் மற்றும் அவர்களது பிள்ளைகளான சுஜொக்ஸின் சுஜொய்னஸ் ஆகியோரை திருத்தந்தை அவர்கள் சந்தித்து உரையாடியதுடன்  அவர்களை ஆசீர்வதித்துள்ளார் 

இவ் சந்திப்பானது இந்தோனேசியாவில் உள்ள வத்திக்கான் தூதரகத்தில் இடம்பெற்றதுடன் இவ் சந்திப்பில் இயேசு சபை அகதிகள் பணி நிறுவனம் மற்றும் புனித இஜிடியோ சபை சார்பாக 40 பேர் கலந்துகொண்டனர் .

இது தமது வாழ்வின் உயர்வான ஆசீர்வாதம் மிக்க சந்தர்ப்பம் என  குறித்த குடும்பத்தினர்  மகிழ்ச்சியில் உள்ளனர் 


No comments