Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் இதுவரை பதிவான வாக்குகள் முழு விபரம்

மன்னார் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் 10 மணி வரையும் 28.2 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அல...

மன்னார் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் 10 மணி வரையும் 28.2 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்   க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்களில் போலீஸ் பாதுகாப்புடன் இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் வாக்களிப்புகள் ஆரம்பமாகியது.

இந்த நிலையில் மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் காலை 11 மணியளவில் வாக்களிப்பை மேற்கொண்டார்.

28.2 வீத வாக்குகள் பதிவு

மேலும் தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

மேலும் மன்னாரில்  9 ஆவது  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை(21) காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட  வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் தொகுதியில் 98 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

காலையில் மந்த கதி

காலையில் சற்று மந்த கதியில் வாக்களிப்புகள் இடம் பெற்றாலும் பின்னர் மக்கள் வருகை தந்து வாக்களிப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளூர்  மற்றும் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சென்று வாக்களிப்பை அவதானித்து வருகின்றனர்.

தேர்தல் கண்காணிப்புக் குழு

குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் அமைதியான முறையில் வாக்களிப்புகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments