Page Nav

HIDE

Breaking News:

latest

தமிழ்க் குடியின் தொன்மையை கீழடி அகழ்வாய்வுகள் பறைசாற்றுகின்றன

கீழடி அகல்வாய்வின் முடிவுகள் தமிழ் மண்ணின் வரலாறு குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது . 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நகர நாகரிக...

கீழடி அகல்வாய்வின் முடிவுகள் தமிழ் மண்ணின் வரலாறு குறித்து புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது . 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வு மெய்ப்பித்தது-மருத்துவர். இரா. செந்தில்

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெற்று வரும் அகல்வாய்வுகள் வைகைக் கரை ஆற்றுப் பண்பாட்டிற்கும் முந்தைய வாழ்விடங்களை உலகுக்கு அறிவிக்கின்றன.

ஊத்தங்கரையிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சின்னானூர் என்ற ஊரில் நடைபெறும் அகழ்வாய்வைப் பார்ப்பதற்காக தோழர் சுப்பிரமணியத்துடன் இன்று சென்றிருந்தேன்.

4500 ஆண்டுகள் பழமை

சின்னானூரில் சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்திருப்பதற்கான சான்றுகள் கிடைக்கின்றன. இரும்புக்காலம்இ நுண் கற்காலம்இ ஆகிய காலங்களில் மனிதர்கள் வாழ்ந்திருப்பிற்கான எச்சங்களைக் காண முடிகின்றது.

தொழிற்சாலைகள் 

பெரிய அளவில் இரும்புத் தொழிற்சாலை இங்கே இருந்திருக்க வேண்டும். இரும்பை உருக்கியதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. கண்ணாடிப் பொருள்களையும் இங்கே வாழ்ந்த மனிதர்கள் உற்பத்தி செய்திருக்க வேண்டும் இங்கே கிடைத்த மண்பாண்டங்களில் உள்ள எழுத்துகள் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள். கீழடியிலும் இதே போன்ற எழுத்துகள் தான் கிடைத்திருக்கின்றன. குடியிருப்புக்கு அருகே உள்ள மலையில் அழகிய பாறை ஓவியங்களைக் காண முடிந்தது.

இங்கே கிடைத்த பொருள்கள் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புக்காக (Carbon dating) இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. அவற்றின் முடிவுகள் வந்தால் தமிழகத்தின் மிகத் தொன்மையான வாழ்விடம் சென்னானூரா என்பதை அறியலாம்.

நன்றி

மருத்துவர். இரா. செந்தில்

1.9.2024 

ஈழத்து தொல்லியலும் வரலாறும் 

No comments