Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னாரில் ஊரடங்கு சட்டம்!பொலிஸாரல் எச்சரிக்கப்படும் மக்கள்!

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை நண்பகல் வரை குறித...

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்கு பின்னரான பாதுகாப்புக்கு என ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் முழுமையா ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் உரிய அனுமதி இன்றி நடமாடும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர் வியாபார நிலையங்கள் முடப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது

அதே நேரம் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட அதிரடிபடையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்

மேலும் நேற்றைய தினம் (21)அறிவிக்கப்பட்ட முதலாவது ஊரடங்கு சட்டம்  இன்று (22) காலை 6 மணியுடன் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்  குறித்த ஊரடங்கு பகல் பண்ணிரண்டு மணிவரை நீப்பு செய்துள்ளது 

இதே நேரம் மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் முசலி மாந்தை மேற்கு மடு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலும் படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 


No comments