Page Nav

HIDE

Breaking News:

latest

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை -கல்வி அமைச்சு

எதிர்வரும் 21ம் தினதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (20) விடுமுறை வழங...

எதிர்வரும் 21ம் தினதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது 

தேர்தல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய  வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை வியாழக்கிழமை (19) பாடசாலை நிறைவடைந்த பின்னர் குறிப்பிட்ட கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் 

வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்கு தேவையான மேசைகள்  கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி  ஒவ்வொரு பாடசாலைக்கும் தொடர்புடைய காலப்பகுதியில் மாத்திரம் வாக்கு எண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்கள் 

வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பாடசாலையும் அந்தந்த காலப்பகுதியில் மட்டும் மூடப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மீண்டும் பாடசாலை ஆரம்பம் 

அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள்  திறக்கப்படும் என கல்வி அமைச்சு இன்று வியாழக்கிழமை (19) அறிவித்துள்ளது 

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவித்தல் 

மேலும் வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துதல்  நிழற்படம் எடுத்தல் காணொளி எடுத்தல்  ஆயுதங்களை வைத்திருத்தல் புகைப்பிடித்தல்  மதுபானம் அருந்துதல்  போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும்  மதுபானம் அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி வருகை தருதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது அறிவிக்கப்பட்டுள்ளது 



No comments