Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னாரில் கவனிப்பாரின்றி கிடக்கும் தனிநாயகம் அடிகளாரின் நினைவுத் தூபி

மன்னார் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந்துறவியான தமிழத்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத்தூபியானது காக்கைகளின் எச்சத...

மன்னார் நகர மத்தியில் அமைக்கப்பட்டிருக்கும் தமிழ் வளர்த்த பெருந்துறவியான தமிழத்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத்தூபியானது காக்கைகளின் எச்சத்தினால் அசுத்தம் செய்யப்பட்டு கவனிப்பாரின்றி கிடப்பதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் 

தமிழத்தூது தனிநாயகம் அடிகள் என்கிற வண. சேவியர் தனிநாயகம் அடிகளார் ஈழத்தமிழர்களின் தமிழ் வளர்ச்சி மற்றும்  பாதுகாப்பில் பெரும் பங்காற்றி தமிழுக்காக உயிர் நீத்தவர் என்பது உலகறியும் 

அந்த வகையில மன்னார் மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பாக தனிநாயகம் அடிகளாரின் நினைவு நாள் அனுஷ்டித்து நினைவுத்தூபிக்கு மலர் மாலை போட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது ஆனால் தற்போது அந்த செயற்பாடுகள் தொடர்வதாக எந்த தகவலும் இல்லை என்பதும் பலரது குற்றச்சாட்டு

அசுத்தம் செய்யப்பட்டுள்ள நினைவுத் தூபி 

மன்னார் பொது நூலக வளவிற்குள் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத்தூபியானது  காக்கை மற்றும் கொக்குகளின் எச்சங்களினால்  அசுத்தமாகி நினைவுத்தூபியை பராமரிப்பதற்கு எவரும் இல்லாமல்  கேட்பாரின்றி கிடக்கிறது தனிநாயகம் அடிகளாரின் நினைவுநாளில் மாத்திரம் மாலை போட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பவர்கள் இன்று போனார்கள் என்று தமிழ் மீது பற்று கொண்ட சிலர் கேட்கிறார்கள் 

எனவே தமிழுக்காக பாடுபட்ட பெருந்துறவியான தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரின் நினைவுத்தூபியை சுத்தம் செய்து பராமரிப்பதற்கு உரியவர்கள் முன்வர வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டார்கள் 

குறித்த நினைவுத்தூபியானது  2013.2. 8 அன்று மறைந்த மன்னார் மாவட்டத்தின் முன்னைநாள் ஆயர் மேதகு ராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 

தமிழ்த்தூது ஒரு பார்வை

தனிநாயகம் அடிகளார் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்துறையில் கரம்பொன் என்ற கிராமத்தில் நாகநாதன் ஹென்றி ஸ்ரனிசுலாசு சிசிலியா இராசம்மா பஸ்தியாம்பிள்ளை ஆகியோருக்கு ஆகஸ்ட்  2, 1913 பிறந்தார் அடிகளாரது தந்தை நாகநாதன் மற்றும் அவரது தந்தைவழிப் பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். தனிநாயக அடிகளின் இயற்பெயர் சேவியர் நிக்கலஸ் ஸ்ரனிசுலாசு என்பதாகும். பிற்காலத்தே இவர் தமிழில் கொண்ட தீராத காதலினால் உரோமன் கத்தோலிக்க குருவாக நியமிக்கப்பட்டபோது தனது பெயரினை சேவியர் எஸ் தனிநாயகம் என்ற தமிழ்ப் பெயரினையும் சேர்த்துக் கொண்டார் என்பது பொது வரலாறு 

கல்வி

தொடக்கக் கல்வியை ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி்யிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்றார். பின்னர் 1931 முதல் 1934 வரை கொழும்பில் புனித பேர்னாட் மறைப்பள்ளியில் சேர்ந்து இறையியல் கல்வி பயின்றார். இக்காலத்தில் ஆங்கிலம் இலத்தின் இத்தாலியம் பிரெஞ்சு ஜேர்மன் ஸ்பானியம் போத்துக்கீயம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். தொடர்ந்து உருசியம் கிரேக்கம் புரு சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்து ஒரு பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.

வெளிநாட்டுப் பயணம் 

பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள நூலகங்களில் பல தமிழ்க் கையெழுத்துப்பிரதி நூல்கள், மற்றும் அச்சிடப்பெற்ற தமிழ் நூல்கள் பற்றி ஆராய்ந்து வெளிக் கொணர்ந்தார்.

தமிழ்க் கலாச்சாரம்  என்னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். 1964 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலினார். 

இந்த நிறுவனமே தொடர்ச்சியாக பத்து உலகளாவிய ரீதியிலான உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியது. அடிகள் உயிருடன் இருந்த காலப்பகுதியில் நான்கு மாநாடுகள் நடத்தப் பெற்றன. 

மலேசியா கோலாலம்பூர் 

இவர் பொதுச் செயலாளராவிருந்து முதல் மகாநாட்டினை கோலாலம்பூரில் பல உலகநாடுகளின் தமிழ் ஆய்வாளர்களை வரவழைத்து வெற்றிகரமாக நடத்திய பெருமை இவரைச் சார்ந்ததே.

திருவனந்தபுரம் மறைமாவட்டத்தில் பணியாற்றிய போது 1934 தொடக்கம் 1939 வரை உரோமை நகரில் வத்திக்கான் பல்கலைக்கழகம் சென்று  The Carthaginian Clergy பல என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையினை எழுதி தெய்வ தத்துவத்தில்  (Doctor of Divinity) பட்டம் பெற்றுக் கொண்டார் 

குருத்துவக் கல்வியை முடித்து அதில் பட்டம் பெற்ற பின்பு தென்னிந்தியா திருநெல்வேலி மாவட்டத்தில் வடக்கன்குளம் என்னும் ஊரில் உள்ள புனித திரேசா மடப் பாடசாலையில் 1940 முதல் 1945 வரை துணைத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் என்பவரிடம் தமிழ் பயில ஆரம்பித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தமிழ் இலக்கியம் படித்தார். சங்க இலக்கியம் பற்றி ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.

ஆசிரியப் பணியும் பட்டங்களும் 

1952 தொடக்கம் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியலில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலத்தில் 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியம் வழியாகக் கல்வியியல் என்னும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து கல்வியியலில் முனைவர் பட்டத்தினை இரண்டாவது முறையாகப் பெற்றுக் கொண்டார். 1961 முதல் 1968ஆம் ஆண்டுவரை மலேசியாவில் உள்ள மலாய் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறையின் தலைவராகவும் தமிழ்த் துறையின் பீடாதிபதியாகவும் தமிழ் பேராசிரியாராகவும் பணியாற்றினார். இக்காலத்திலேயே பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்களும் இங்கு பேராசியரியராகக் கடமையாற்றினார். 1969 இல் மலேசியாவை விட்டு நீங்கியவுடன் பாரிசு மற்றும் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

தனிநாயகம் அடிகளாரால் எழுதப்பட்ட சில நூல்களின் விபரங்கள் வருமாறு

1.The Carthaginian Clergy 2.Nature in the ancient poetry3.Aspects of Tamil Humanism

4.Indian thought and Roman Stoicism 5.Educational thoughts in ancient Tamil literature

தமிழர் பண்பாடு நேற்றும் இன்றும் நாளையும்.6.தமிழ்த்தூது

ஒரே உலகம் 7.திருவள்ளுவர் 8.உலக ஒழுக்கவியலில் திருக்குறள்

9.Reference guide to Tamil studies 10.Tamil Studies Abroad 11.Tamil Culture and Civilization


No comments