Page Nav

HIDE

Breaking News:

latest

புற்று நோயின் ஆரம்ப நிலையை கண்டறியும் வைத்தியசாலை தொடர்பான விளக்கம்

புற்று நோயை குணப்படுத்த ஆரம்ப நிலையில் கண்டறிவோம் எனும் தொனிப்பொருளில்  shanu foundation விழிப்புணர்வு  நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதி...

புற்று நோயை குணப்படுத்த ஆரம்ப நிலையில் கண்டறிவோம் எனும் தொனிப்பொருளில் shanu foundation விழிப்புணர்வு  நிறுவனத்தின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் புற்று நோயை கண்டறியும் நிலையம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (17) காலை 10 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வின் மூலம்  குறித்த வைத்தியசாலை தொடர்பாக  பொது மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது 

 முன்கூட்டியே புற்று நோயை  கண்டறியும் நிலையம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில்  அமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியிலும் சரி இலங்கையிலும் சரி இறப்பு களுக்கான காரணமாக இரண்டாவதாக இடம் வகிக்கும் நோயாக புற்று நோய் காணப்படுகின்றது எனவே அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அதனை தடுப்பதன் மூலம் இறப்புகளை கட்டுப்படுத்த முடியும்.

குறித்த நிலையமானது நிலையமானது புற்றுநோய் அறிகுறி எதுவும் ஏற்பட முன்னர் ஒரு சாதாரண நோயாளிக்கு ஒரு சாதாரண மனிதருக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா எதிர்காலத்தில் புற்று நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏதும் உள்ளதா என்பதை பற்றி கண்டறிவதற்கான அல்லது அவ்வாறான நோயாளிகளுக்கு இது வரைக்கும் ஏதாவது புற்றுநோய் ஏற்பட்டு ள்ளதா என்பதை பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஒரு நிலையமாகும்

இந்நிலையம் புற்று நோயாளர்களுக்கான நிலையம் அன்றி புற்றுநோய் ஏற்படுவதற்கு முன்பு கூட்டியே அதனை ஏற்படாமல் தடுப்பதற்கு அல்லது அதன் ஆரம்ப நிலையிலேயே அதனை கண்டறிவதற்கான ஒரு நிலையமாக தொழிற்படும் நிலையமானது ஒரு வாரத்தில் 7 நாட்களும் திறந்திருக்கும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை யாழ் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இயங்கும் பொதுமக்கள் தங்களுடைய புற்றுநோய் சம்பந்தமான சந்தேகங்களை குறித்த சிகிச்சைநிலையத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மா.சிறிஸ்கந்தகுமார்  (shanu foundation)  உறுப்பினர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களும்  கலந்து கொண்டார்கள் 


No comments