Page Nav

HIDE

Breaking News:

latest

வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது

தடைசெய்யப்பட்ட வெடிமருந்துகளை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட  எட்டு நபர்களை கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி கடற்படையினர் கைது செய்துள்ளனர்...

தடைசெய்யப்பட்ட வெடிமருந்துகளை பயண்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட  எட்டு நபர்களை கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி கடற்படையினர் கைது செய்துள்ளனர் 

இவர்கள் திருகோணமலை ஜின்னாபுரம் மற்றும் முல்லைத்தீவின் கர்னாட்டங்கேயி  ஆகிய கடற்பரப்புகளில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளின் போது வணிக வெடிமருந்துகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேரை கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கை கடற்படை விழிப்புடன் உள்ளதுடன்இ சட்டப்பூர்வ மீன்பிடி நடைமுறைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் அதன் கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடித்தலை எதிர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக கிழக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS வலகம்பா மற்றும் SLNS ரன்வேலி ஆகியவை ஜின்னாபுரம் மற்றும் கர்னாட்டங்கேணி  கடற்பகுதிகளில் 02 சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுகளை இடைமறித்து சோதனை செய்த  போது ​​தடைசெய்யப்பட்ட  வெடிமருந்துகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08  நபர்கள் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும் இந்த குற்றத்துடன் தொடர்புடைய டிங்கி படகுகள்  அனுமதியற்ற மீன்பிடி உபகரணங்களுடன் கடற்படையினரால் .கைப்பற்றப்பட்டுள்ளது 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் செந்தூர் மொஹொந்துவாரம் மதுரங்குளிய மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களைச் சேர்ந்த 17 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜின்னாபுரத்தில் பிடிபட்ட டிங்கி (01) உடன் 04 சந்தேகநபர்களும் குச்சவெளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் கர்நாடகர்ணியில் வைத்திருந்த டிங்கி (01) மற்றும் மீன்பிடி உபகரணங்களுடன் 04 சந்தேக நபர்களும் கொக்கிளாய் பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர். .


No comments