Page Nav

HIDE

Breaking News:

latest

குருதிக் கொடையளிப்பதால் உண்டாகும் நன்மைகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டினை ஓரளவிற்கு நிவர்த்தி செய்யும் நோக்கத்தொடு மன்னார் ரோட்டரி கழகத்தின் ...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டினை ஓரளவிற்கு நிவர்த்தி செய்யும் நோக்கத்தொடு மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் மன்னார் ஆகாஷ் தனியார் விடுந்தினர் விடுதியில் எதிர்வரும் 9 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை எட்டு மணியிலிருந்து மதியம் 1.00.மணி வரை மாபெரும் குருதிக் கொடை முகாம்' நடைபெற உள்ளது 

மனிதனின் சிறந்த கொடை

மனித ரத்தத்துக்கு மாற்று எதுவுமில்லை. உடலில் ஓடும் உயிர்த்திரவம் ரத்தம்  என்பது சான்றோர்கள் கருத்து  மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானத்தின்போது 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 உயிர்களை  காப்பாற்ற முடியும் என்று கூறப்படுகின்றது குருதிக் கொடையாளி அளிக்கும் ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள், என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றைத் தனித்தனியாகப் பெறும் நோயாளிகள் மூவர் காப்பாற்றப்படுகின்றனர் என்பது வைத்தியர்களின் கருத்து

இரத்ததானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

இரத்த தானம் செய்யும் போது மனிதர்களுக்கு பல்வேறு நணைமைகள் உண்டாவதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றது  உதாரணமாக குளத்து நீரைவிட ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீர் சுத்தமானது என்பார்கள் அதே போலத்தான்  குருதி வெளியேற்றப்படாமல் தேக்கி வைத்திருப்பது பல எதிர் விளைவுகளை உண்டாக்க நேரிடலாம்  அவ்வப்போது நமது கவனக் குறைவுகளால் உடம்பில் ஏற்படும் காயங்களால் வெளியேற்றப்படும் குருதிகளால் நமக்கு அவை பெரிதான தாக்கத்தை உண்டுபண்ணுவதில்லை

இதயம் 

இரத்தத்தில் இரும்பு சத்து இருக்கிறது. சில சமயங்களில் இந்த இரும்புச்சத்து இரத்தத்தில் அதிகரிப்பதாலும் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட காரணம் ஆகிறது. எனவே உடலாரோக்கியம் நன்றாக இருப்பவர்கள் இரத்ததானம் செய்து வருவது அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.  

புதிய செல்கள்   

இரத்ததானம் செய்த பிறகு நமது உடலில் ஓடும் இரத்தம் உடலின் அனைத்து பகுதிகளிலும் புதிய செல்களின் உற்பத்தி மற்றும் பெருக்கத்தை உணட் hக்குகிறது. இது உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கிறது

உடல் எடை குறைய   

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்வதும் நல்ல பலன் அளிக்கும். குறிப்பாக உடலின் உயரத்திற்கும் வயதிற்கும் அதிக உடல் எடை கொண்டவர்கள்,தங்களின் மருத்துவரின் அறிவுறுத்தல்படி இரதத்தானம் செய்வதால் உடல் எடை சுலபமாக குறைவதோடு தேவையற்ற நச்சுகள் கொழுப்புச் சத்துக்கள் ரத்தத்தில் சேராமல் உடல் நலத்தை பாதுகாக்கிறது  

புற்று நோய்   

நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் மரபணு பிறழ்வு தான் புற்று நோய் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. உரிய கால இடைவெளிகளில் இரத்ததானம் அளித்து வருபவர்களுக்கு அவர்கள் உடலில் தொடர்ந்து புது செல்களின் உற்பத்தி தூணட்ப்படுவதால் செல்களில் மரபணு பிறழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து புற்று நோய் ஏற்படாமல் காக்கிறது. 

உயிர்காத்தல்   

இரத்ததானம் செய்பவர்கள் தாங்கள் அதுவரை நேரில் காணாத பல மனிதர்களின் உயிர்களை காப்பாற்றும மிகப்பெரும் பேறு பெறுகின்றனர்

அரச வைத்திய சாலைகளில் முன்னுரிமை  

இரத்த கொடையாளருக்கு வழங்கப்படும் அட்டையைபயன் படுத்தும் சமயங்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

இதயம் கல்லீரல் நலம் பெற ஹீமோகுரோமேடோசிஸ்   

இரும்புச் சத்துக்கள் நமது உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், கல்லீரல், மற்றும் கணையம், போன்றவற்றில் சேமிப்பிற்குள்ளாகிறது. இந்த அதிக அளவு இரும்புச் சத்து எதிர்காலங்களில் கல்லீரல் பாதிப்பு கணையம் செயலிழப்பு, இதய நோய்கள், இதயத்துடிப்புகளில் மாறுதல்கள் உண்டாவது போன்ற பலவகையான ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மூன்று மாதத்திற்குகொரு முறை ரதத் தானம் தருபவர்களின் ரதத் த்தில் உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கின்ற அதிக அளவான இரும்புச்சத்து வெளியேறுவதால் மேற்கூறிய உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பதோடு அந்த உறுப்புக்கள் சம்பந்தமான நோய்கள் உண்டாகாமல் காக்கிறது.   

ஹீமோகுரோமேடோசிஸ் 

அடிக்கடி இரத்ததானம் செய்பவர்களுக்கு ஹீமோகுரோமேடோசிஸ் எனப்படும் குறைபாடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்கிறார்கள். இந்த ஹீமோகுரோமேடோசிஸ் என்பது நமது ரத்தத்தில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர்வதால் உண்டாகும் ஒரு குறைபாடாகும். அளவுக்கதிகமாக மது அருந்தும் பழக்கம் ரத்த சோகை மற்றும் இதர காரணங்களாலும் இந்த ஹீமோகுரோமேடோசிஸ் குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகளை அதிகரிக்கிறது..;  

மாரடைப்பு தடுப்பு   

மன அழுத்தம் குறைக்கப்படுகிறது, உணர்ச்சி ஆரோக்கியம் மேம்படும், எதிர்மறை உணர்ச்சிகளில் இருந்து விடுபட உதவுகிறது, இரத்ததானம் செய்வதால் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம். 

இரத்ததானம் தொடர்பான முக்கிய குறிப்பு  

இரத்ததானம் கொடுப்பவர்கள் வயது 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் இரதத்தானம் செய்பவர் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும்.ஒவ்வொரு முறையும் இரத்ததானம் செய்வதற்கு இடையே குறைந்தது மூன்று மாதங்கள் இடைவெளி இருக்க வேண்டும். 

கொடையாளர்களுக்கு அழைப்பு 

குருதிக் கொடை நடைபெறும் அன்று குருதி வழங்கவுள்ள கொடையாளர்கள்  கீழ் உள்'ள தொலைபேசி இலக்கத்திற்கு ரோட்டரி கழக நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு உங்கள் வருகையை உறுதிப் படுத்தி உயிர் காக்கும் குருதியினை வழங்க முடியும் 

இரத்ததானம் நடைபெறும் இடம் 

மன்னார் ஆகாஷ் ஹோடட்ல்   திகதி:- 09/08/2024 (வெள்ளிக்கிழமை) நேரம்:- காலை 8 மணியிலிருந்து 1.00 மணி வரை  தொடர்புகளுக்கு 0775440150 /0775439550 

மன்னார் ரோட்டரி கழகமானது மன்னார் மாவட்டத்தில்  கல்வி மற்றும் மருத்துவத்தை முதன்மைப் படுத்தி பொது மக்கள் சார்ந்த பல வேலைத் திட்டங்களை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும் 


No comments