Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் விடத்தல் தீவு பன்னாட்டு மாநாடு விரைவில் ஆரம்பம்

மன்னார் மாவட்டத்தில் விரைவில் விடத்தல் தீவு பன்பாட்டு மாநாடு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் குறித மாநாட்டில் வெளியிடப்படும்...

மன்னார் மாவட்டத்தில் விரைவில் விடத்தல் தீவு பன்பாட்டு மாநாடு நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் குறித மாநாட்டில் வெளியிடப்படும் ஆவணப்படுத்தல் நூலுக்கான  பலதரப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டு எழுதப்பட்டு வருவதாகவும் கலாநிதி பேராசிரியர் ஞானசீலன் ஜெயசீலன்  அவர்கள் தெரிவித்தார் 


வன்னி மண்ணின் முதலாவது ஆங்கில துறை பேராசிரியர் 

மன்னார் விடத்தல்தீவு பிரதேசத்தை பிப்பிடமாகக் கொண்ட கலாநிதி ஞா.ஜெயசீலன் அவர்கள் ஆங்கில துறையில் முதலாவது  பேராசிரியராக பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளார் 

மன்னார்  மண்ணின் மைந்தனும் வவுனியா பல்கழைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளருமாகிய கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன் அவர்கள் இலங்கையில் உள்ள ஒன்பது ஆங்கில பேராசிரியர்களின் மூன்று படிநிலை மதிப்பீடுகளின் பின்னர் 2022.11.08  திகதி முதல் ஆங்கில துறையில் பேராசிரியராக பதவி நிலை உயர்த்தப்பட்டுள்ளதாக வவுனியா பல்கழைக்கழக பேரவையின் (senate)) சிபாரிசின் பேரில் பல்கழைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (ருபுஊ ) மற்றும் வவுனியா பல்கழைக்கழக மூதவை (UGC) நேற்றைய தினம் (27.07.2024) அறிவித்துள்ளது.

இதில்  மிகவும் சிறப்பான விடயம்  என்னவென்றால்  கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன் அவர்கள் வன்னி மண்ணின் முதலாவது  ஆங்கில துறையில் பேராசிரியர் ஆவார்.  

சமூகச் செயற்பாடுகளில் ஈடுபாடு

பேராசிரியர் கலாநிதி ஞானசீலன் ஜெயசீலன் அவர்கள் சமூக, கலை, கலாச்சார, பண்பாட்டு, விழுமியங்களில்  மிகவும்  அக்கறை கொண்டு செய்படுவதுடன்  மன்னார் மாவட்டத்தின்கலைகள் கலைஞர்கள்ளவரலாறுகளை ஆவணப்படுத்தி ஊக்குவிப்பதில்  கடுமையாக உழைத்து வருகின்றார்

விடத்தல்தீவு பன்னாட்டு மாநாடு (2024-25) 

"விடத்தல் தீவு பன்னாட்டு மாநாடு" என்னும் புது முயற்சியை ஆரம்பித்து இந்த பன்பாட்டு மாநாட்டு நூலுக்காக  தற்போது 36 கட்டுரைகள் எழுதப்பட்டு  உறுதிப்படுத்தப்பட்ட கட்டுரைகள்

. "விடத்தல்தீவின் போருக்கு முந்தைய சமூக வரலாறு: சுவாம்பிள்ளை சாந்தியாப்பிள்ளையின் கவிதை வரலாற்று நூலில் இருந்து ஒரு பார்வை "விடத்தலூர் வித்தஆப்பு".  ஜி.ஜெயசீலன்   போனிஃபாஸ்  -

 விடத்தல்தீவின் எழுத்தியல் வரலாறு ருஹானி கனிஃப் (மசாஹிரா கனி)

 விடத்தல்தீவு மக்களின் இடப்பெயர்வுகள் மற்றும் பாதிப்புகள் மற்றும் அதன் விளைவாக ஜோசவாஸ் நகரில் குடியேறியது  - ஆசள. டெனிஸ்டீன்

 விடத்தல் தீவு மக்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட சொற்றொடர்கள் மற்றும் ஒலியமைப்பு மாற்றங்கள்" எஸ்.டக்ளஸ் பி.ஜூட் ஆனந்தகுமார் 

 விடத்தல் தீவின் புவியியல் சார் வரலாற்று மற்றும் சமகால அடிப்படையில் ஒரு ஆய்வு சூசைதாஸ் சுஜான்

 விடத்தல்தீவு கிராமத்தின் நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசனம் பற்றிய பொறியியல் கண்ணோட்டம் - எட்வர்ட் சுதர்சன்

 இலங்கையில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் விடத்தல்தீவின் பங்கு - திரு. எஸ். சாந்தகுமார்      அடுத்ததுஇ 50மூ எழுதி முடித்த கட்டுரையாளர்களின் பட்டியலையும் கட்டுரைத் தலைப்புகளையும் தருகிறேன். 

பாதி முடிக்கப்பட்டவை என உறுதிப்படுத்தப்பட்ட கட்டுரைகள்  

விடத்தல்தீவு விளையாட்டு வரலாறு  - நீல் ஆம்ஸ்ட்ராங் இ.எட்வின் அமல்ராஜ் ஆண்டனி இன்பராஜ்  ஜேம்ஸ் சுதாஹரன்

விடத்தல் தீவு சைவ வரலாறு -  நடராசா ஜெயதீபன்

விடத்தல் தீவு கிறிஸ்தவ வரலாறு  - ஜேம்ஸ் ஜெரிக் குவிண்டாஸ் 

80கள் மற்றும் 90களில் விடத்தல்தீவில் எனது பகிர்வு அனுபவம் திரு சாந்தன்

விடத்தல்தீவு புனித ஜோசப் வாஸ் பாடசாலையின் போருக்கு முந்தைய ஆரம்ப வரலாறு மற்றும் முக்கிய அதிபரர்கள் மற்றும் ஆசிரியர்களின் வரலாறுகள்  திரு.கிஜோமர்

"வடக்கு மாகாண நிலப்பரப்பு தொடர்பான விடத்தல்தீவின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம்." மேரிநாதன் குயின்சன்

விடத்தல்தீவின் கடல் சூழல் மற்றும் பாதுகாப்பின் தேவை - எடிசன் மேரிநாதன்

விடத்தல் தீவின் நாடக துறையின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் அனுரா சேவியர்

விடத்தல்தீவின் போருக்கு முந்தைய வரலாறு குறிப்பாக விடத்தல்தீவின் தோற்றம் மற்றும் அதன் பரிணாமம் எம்.ஸ்ரீகந்தகுமார் ஜெகநாதன் ஜனகம்

விடத்தல் தீவு மக்களின் சமூக மற்றும் கலாச்சார வரலாறு -  பிரான்சிஸ் மைக்கேல் ஃப்ரீடன் 

விடத்தல்தீவு இளைஞர்கள் எதிர்கொள்ளும் மீன்பிடி தொழில் வாழ்வாதார சவால்கள்: ஒரு சமூகவியல் ஆய்வு சூசைதாஸ் சுஜந்தன்

விடத்தல் தீவு   மக்களின் விவசாய வரலாறு டீ. ரெஜிஸ் ராஜநாயகம்

விடத்தல் தீவு மக்களின் அபிவிருத்தியும் புனர்வாழ்வும் வி ஏ கரோலின் 

விடத்தல் தீவும் என் வாழ்வும் -  ஞானசீலன் வசந்தசீலன் 

இறுதி யுத்த கலத்தில் விடத்தல் தீவு மக்கள் எதிர்கொண்ட சவால்களும் அதனை எதிர்கொண்ட விதமும் -  சுதர்சன் மேரி மெடில்டா

விடத்தல் தீவு இஸ்லாமிய வரலாறு   அப்துல் சமத் (க)ஃபைஸ் யனெ அனீஸ்

 "புலம்பெயர்வுகள்... விடத்தல்தீவில் ஏற்பட்ட மாற்றங்கள்"  சுஐப் எம். காசிம் 

விடத்தல் தீவின் பொது சுகாதார வரலாறு மற்றும் அதன் நிர்வாகம் தமியான்பிள்ளை மிதுன்றாஜ் 

விடத்தல் தீவு   மக்களின் பொருளாதாரமும் அதன் வரலாறும் முகமது யூசுப் தாசீன் மரிய செல்வம் இருதயராச் 

விடத்தல்தீவின் சாத்தியமான வளர்ச்சி உந்துதல்கள்   மரியாம்பிள்ளை  மரியசெல்வம் 

ஸ்காண்டிநேவிய நாடுகளுக்கு குடிபெயர்ந்த எங்கள் கிராம மக்களைப் பற்றி ஒரு கட்டுரை  எட்வின் அமல்ராஜ் 

சுவிட்சர்லாந்து இல் வசிக்கும் விடத்தல்தீவர்கள் தொடர்பான கட்டுரை  அன்ரன் நைனஸ்

விடத்தல்தீவின் வேர்களைக் கொண்ட பல்வேறு மட்டங்களில் பங்களித்து அங்கீகாரம் பெற்றவர்களின் சுருக்கப்பட்ட வரலாறு அ.அமல்ராஜ் 

விடத்தல்தீவு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் அறிமுகப்படுத்தி பயன்படுத்திய தொழில்நுட்பம் - ஜே.கமல் ராஜ் 

விடத்தல்தீவு மற்றும் ஜோஸ் வாஸ் நகர் கிராமங்களின் சாலை வீட்டுவசதி மற்றும் நகரத் திட்டங்கள் பற்றிய நிலையான உள்கட்டமைப்பு முன்னோக்கு. - சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் கீயோமர் பியஸ் பிரைட்டன் பயஸ் 

 விடத்தல்தீவு சார்ந்த கவிஞர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் இலக்கியப் பாராட்டு மற்றும் விமர்சனம்  ஜி.ஜெயசீலன்

மதங்களும் இலக்கியங்களும் 

விடத்தல் தீவு மேடை இலக்கியம், விடத்தல் தீவு சைவ வரலாறு, விடத்தல் தீவு கிறிஸ்தவ வரலாறு, விடத்தல் தீவு இஸ்லாமிய வரலாறு,  விடத்தல் தீவு மக்களின் கல்வி மற்றும் அதன் வரலாறு,விடத்தல் தீவு மக்களின் பொருளாதாரமும் அதன் வரலாறும்,விடத்தல் தீவு   மக்களின் சமூக தேசிய பல்துறை சார் பங்களிப்பு, விடத்தல் தீவு மக்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார் பங்களிப்பு,  போன்ற ஆய்வு கடடடுரைகள் மாநாட்டு நூலில் இடம்பெற உள்ளது

குறித்த மாநாட்டுக்கான வேலைத்திட்டங்கள்  நடைபற்று வருவதுடன் இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில்  விடத்தல் தீவு பன்னாட்டு மாநாடு நடைபெற உள்ளதாக கலாநிதி பேராசிரியர் ஞானசீலன் ஜெயசீலன் அவர்கள் தெரிவித்தார் 


No comments