Page Nav

HIDE

Breaking News:

latest

உயிரிழப்பின் பின்னராவது இந்திய மீனவர்கள் திருந்துவார்களா?

அண்மையில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை அங்கு...

அண்மையில் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட வேளை அங்கு நடைபெற்ற சிறு அசம்பாவிதத்தால் இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைத்து தரப்பினரையும் கவலை கொள்ளச் செய்துள்ளது 

இந்திய மீனவர்களின் தவறு

இலங்கை ஒரு இறையாண்மை உள்ள நாடு  அப்படி இருக்கையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபடும் பொழுது அவர்களை கைது செய்வது இலங்கை கடற்படையின் கடமை  இந்திய மீனவர்கள் ஒரு மாதத்தில் இரண்டு மூன்று தடவைக்கு மேல் கைது செய்யப்பட்டு பலர் இலங்கை சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள் ஆனாலும் இந்திய மீனவர்கள் தங்களது தவறுகளை திருத்திக் கொள்வதாக தெரியவில்லை 

குழப்பம் விளைவிக்க ஏற்பாடு 

இந்திய மீனவர்களது இந்த விரும்பத் தகாத செயற்பாடுகளால் இரண்டு நாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் முறுகல் நிலை தொடரவும்  அதே போல் இரு கரையிலும்இருக்கும் தமிழ் பேசும் சமூகங்களுக்குள் முரண்பாடுகளை தோற்றுசவிப்பதற்காக திட்டமிட்டு   செயற்படுத்தப்படுகிறார்களா என்னும் சந்தேகம் இரண்டு தரப்பிலும் எழாமல் இல்லை

இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளால் இலங்கை வட பகுதியில் மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற மீனவகுடும்பங்கள் பாரிய  பிரச்சனைகனைகளை எதிர் கொண்டுள்ளார்கள்  இந்திய மீனவர்களின் இராட்சத இழுவைப் படகுகளால்  இலங்கை கடல் எல்லைக்குள் இருக்கும்  பாரிய மீன் வளத்தை அள்ளிச் செல்கிறர்கள் குறிப்பாக பல்லாயிரம் கிலோ குஞ்சு மீன்களை அள்ளிச் சென்று அவர்களது கரையில் வீசிவிடுகிறார்கள் 

உபகரணங்கள் திருட்டு 

தொடர்ச்சயாக  இலங்கை கடற்பரப்பிற்குள் வரும்  இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களினால் கடலில் பாய்ச்சப்பட்டுள்ள  விலை மதிப்பு மிக்க வலைகளை களவாடியும் அறுத்து சேதப்படுத்தியும் சென்று விடுகிறார்கள்  இதனால் ஏற்கனவே மீன்பாடுகள் இல்லாமல் போதிய வருமானம் இல்லாமல் பரிதவிக்கும் இலங்கை மீனவர்களால்  அறுத்து சேதப்படுத்தி களவாடிப் போன மீன் பிடி வலைகளை புதிதாக கொள்வனவு செய்யமுடியாமல்  தொடர்ச்சியாக தொழிலுக்கு செல்லமுடியாத நிலையிலும் உள்ளார்கள் 

முயற்சிகள் தோல்வி 

இந்த நிலையில் இந்தியா மற்றும் இலங்கை வட பகுதி மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தி இந்த  பிரச்சனைகளுக்கு தீர்கான பலர் முற்பட்ட போதும் அவை தோல்வியில் முடிந்துள்ளது என்று  மன்னார் மீனவர் சங்கங்களின் சமாச செயலாளர் தெரிவிக்கின்றார் 

இந்திய இலங்கை கடலில் உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் குறித்த விடயத்தை 

 இலங்கை மீனவர் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்ற போதும் இந்திய அரசாங்கமும்  அந்நாட்டு மீனவர்களும் காது கொடுத்து கேட்பதாக இல்லை.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த மையின்  ஏற்பட்ட கைது நடவடிக்கையின் காரணமாக இந்திய மீனவரின் உயிரிழப்பு சம்பவம் இடம் பெற்றுள்ள போதும் குறித்த சம்பவங்கள் இடம் பெறக் கூடாது என இந்திய மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதும் இதுவரை இவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

கைது செய்வது கடற்படையின் கடமை

இறைமையுள்ள அரசு தனது கடல்வளத்தை பாதுகாக்கும் உரிமை கொண்டுள்ளர் ஆகவே கடலிலே பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுகின்ற பாதுகாப்பு தரப்பினர் அடிக்கடி கடலிலே கைது செய்கின்ற நடவடிக்கைகளை மேற் கொள்ளுகின்றனர் இவ்வாறு அண்மையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர் ஒருவரை கைது செய்ய முயன்ற போது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார் 

அதே போன்றுதான் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் இலங்கை  எல்லையினுள் அத்துமீறி வந்ததன் காரணமாக இப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் திருந்த வேண்டும் 

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீனபிடியில் ஈடுவதால் இழப்பு இந்தி மீனவர்களுக்குத்தான் அவர்களுடைய படகுகள் இலங்கை அரசுடமையாகும் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் இதனால் அப்பாவி மீனவ குடும்பங்களின் வாழ்க்கை பாதிப்படையும் இவ்வாறு உயிரிழப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டுமானால் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில்  ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் 

போராட்டம் செய்து பலன் என்ன ?

தங்கள் மீது தவறுகளை வைத்துக் கொண்டு மீனவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டவுடன் போராட்டங்கள் செய்து பலன் என்ன இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை ஒரு போதும் கைது செய்யவில்லை இச்சம்பவமானது தமிழக மீனவர்களின் செயற் பாட்டினாலேயே நிகழ்ந்துள்ளது.இதற்காக அங்கே பாரிய அளவில் போராட்டங்கள் செய்து பலனில்லை என்பதை மீனவர்கள் உணர வேண்டும் 

இலங்கை மீனவர்கள் கடந்த காலங்களில் யுத்தம் கொரோனா பொருளாதாரப் பிரச்சனை என்று பல வழிகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் அப்படி இருந்தும் தங்களது எதிர்கால சந்ததியினரில் நலன் கருதி  கடல் வளத்தை பாதுகாத்து மீன் பிடியில் ஈடுபடுகிறார்கள் ஆனால் இந்திய மீனவர்கள் தூர நோக்கு சிந்தனை இல்லாமல் கடல் வளத்தை அழித்து விட்டு தற்போது இலங்கை தமிழர் தாயக கடல் வளத்தை சூறையாடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்  இந்த செயற்பாடுகள் தவறானது இந்திய மீனவர்கள் உரிய முறையில் சிந்தித்து தங்களது குடும்பங்களின் நலன் கருதி இலங்கை கடல் எல்லைக்குள் வருவை நிறுத்த வேண்டும் அத்துடன் தங்களது நாட்டின் கடல்வளங்களை பாதுகாத்து  மீனினிப் பெருக்கததை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் இறங்கி  உங்களது வாழ்வை வளப்படுத்தும் முயற்சிகளை செய்ய வேண்டும் 



No comments