Page Nav

HIDE

Breaking News:

latest

சிந்துஜாவிற்கும் குழந்தைக்கும் நீதி கிடைக்குமா?

கடந்த மாதம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் தாதியர்களின் அசமந்தப் போக்கினால் 27 வயதான இளம் பட்டதாரி தாயொருவர் மரணத்திருந்தார்  இந்...

கடந்த மாதம் மன்னார் பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் தாதியர்களின் அசமந்தப் போக்கினால் 27 வயதான இளம் பட்டதாரி தாயொருவர் மரணத்திருந்தார்  இந்த சம்பவம் இலங்கை மட்டுமல்ல புலம்பெயர் தமிழர்களிடமும் பாரிய அதிர்வலைகளை உண்டாக்கியிருந்தது 


தாய்ப்பால் இல்லாத குழந்தை

மரியராஜ் சிந்துஜா என்னும் இளம் தாய் மரணித்து விட்டாள் இங்கு நடப்பது எதுவும் அவருக்கு தெரியப் போவதில்லை  பிறந்து ஒருமாதம் ஆன சிசு தாய்ப்பாலும் தாயின் அரவணைப்பும் இல்லாமல் அனாதையாகியுள்ளது  

பிறந்த குழந்தைக்கு கிடைக்கும் தாய்ப்பாலின் சக்தியில் இருந்தே  அந்த குழந்தையில் எதிர்கால வாழ்க்கை தீர்மாணிக்கப்படும்  இன்று தாய்ப்பாலின் சுவையும், வாசமும் என்னவென்று தெரியாமல்  தவிக்கும் அந்த குழந்தைக்கு தாமதித்து கிடைக்கும் நீதி  பிரியோசனப்டப் போவதில்லை இந்த குழந்தைக்காகவாவது விரவாக நீதியை பெற்றுக் கொடுப்பதற்கு  அனைவரும் இதய சுத்தியோடு ஒன்றிணைய வேண்டும் 


போலி முழக்கங்கள் 

முகநூலிலும், வட்சாப் போன் சமூக குழுமங்களிலும் முழங்கும் எவரும் பொது வெளியில் வந்து ஆர்பாட்டங்களில் கலந்து கொண்டு பாதிப்படைந்தவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முன் வருவதில்லை இன்று சிந்துஜாவிற்கு நாளை உங்கள் குடும்ப உறவினர்களுக்கு இந்த சம்பவம் நிகழும் என்று எவரும் நினைப்பதில்லை 

ஆர்ப்பாட்டம் 

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தினர் ஏற்பாடு செய்த இன்றைய மௌன  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கருப்புக் கொடியை ஏந்தியவாறு  "பணத்துக்கு மனித உயிரை விலை பேசலாமா?,  இமருத்துவம் அரசே இலங்கையின் மருத்துவத்துறையை மறுசீரமைப்புச் செய்,உயிர் காக்கும் வைத்தியர்களே மனித நேயத்தை மதியுங்கள்,மருத்துவத்துறையின் அறம் எங்கே,சிந்துஜாவின் மரணம் இறப்பா?கொலையா?நீதி நிழலாடுகிறதா?,வைத்தியத்துறை மாபியாக்களின் கூடாரம் ஆகலாமா,  போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தது  இந்த மௌனமான போராட்டமும் கடந்த கால போராட்டங்கள் போலவே  மறந்து போகலாம் என்பது பலரது கருத்து


பணியிடை நீக்கமே தீர்வு

எனவே உயிரிழந்த சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் குறித்த மரணத்துடன் தொடர்புடைய வைத்தியர் உள்ளடங்களாக அனைவரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

குறித்த போராட்டத்தில் சிந்துஜாவின் தாய் சிந்துஜாவின் பிள்ளை கலந்து கொண்டதோடுஇபெண்கள் அமைப்பு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அருட் தந்தையர்களும் கலந்துகொண்டிருந்தனர்.


உண்ணாவிரத போராட்டம்

இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை அமைதி வழி போராட்டக் காரர்களுக்கு அருகில் உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் 

வைத்தியர் செந்தூரனும் சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார் 

என்றாலும் வைத்தியர் செந்தூரனின் உண்ணவிர போராம் இதய சுத்தியோடு சிந்துஜாவிற்கு குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நல்ல நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டிருந்தால் இதனை வரவேற்கிறோம் அல்லது  இதில் உள்நோக்கங்கள் இருப்பின் அதனை ஏற்க முடியாது என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களால் தகவல்கள் பரிமாறப்பட்டது 

குழந்தையை அலைக்கழிக்காதீர் 

சிந்துஜாவின் மரணத்திற்கும் குழந்தைக்கும் நீதி கிடைக்க வேண்டும் அதறடகாக பச்சிளம் குழந்தையை அலைக்கழிப்புச் செய்து உ;லை வருத்துவது குழந்தைக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வைத்தியர்கள் தரப்பிலிருந்து தொவிக்கப்பட்டது எனவே இந்த குழந்தைக்கு விரைவாக நீதி கிடைப்பதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும் 


வைத்தியர் தரப்பை காப்பாற்றும் நடவடிக்கை 

இதே வேளை சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய சிலரை காப்பாற்றவும் இந்த சம்பவங்களை மறக்கடித்து திசை திருப்பும் முயற்சியில் ரகசியமாக  பலர் ஈடுபட்டு வருவதாகவும்  சமூக செயற்பாட்டாளர்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள்   

தொடர் போராட்டம் 

சிந்துஜாவின் மரணம் தொடர்பில் குற்றமிழைத்தவர்கள் உடனடியாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்த வேண்டும்.இல்லை என்றால் நாங்கள் தொடர்ந்தும் மன்னார் வைத்தியசாலைக்கு முன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

.


 


No comments