Page Nav

HIDE

Breaking News:

latest

யாழ்ப்பாணத்தில் பலாலி என்னும் இடப்பெயர் உருவாகக் காரணம் என்ன?

 கடந்த வருடம் யாழ்ப்பாணம் வந்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர் கு.அண்ணாமலை அவர்கள் யாழ் மத்திய கலாச்சார நிலையம் திறப்புவிழாவில் உரையாற்றும் போது இ...

 கடந்த வருடம் யாழ்ப்பாணம் வந்திருந்த தமிழக பா.ஜ.க தலைவர் கு.அண்ணாமலை அவர்கள் யாழ் மத்திய கலாச்சார நிலையம் திறப்புவிழாவில் உரையாற்றும் போது இராமாயணம் யுத்தம் முடிந்த பின்னர் ராமருக்கு பாலாலயம் நடாத்தப்பட்டதால் அந்த இடம் பலாலி என்று பெயர் பெற்றதாக கூறியிருந்தர் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி விமர்சனத்திற்கு உள்ளாகியது


பலாலியில் உண்மையில் பாலாலயம் நடாத்தப்பட்டதா?
அண்ணாமலை கூறியது உண்மையா?
இராமாயணதத்திற்கும் பலாலிக்கும்  தொடர்பு உள்ளதா?
இலக்கிய நூல்களைக் கொண்டு செய்த இடப்பெயராய்வின் முடிவுகள் இங்கே தரப்படுகிறது

வரலாறு எங்கே மௌனமாகிறதோ அங்கே இடப் பெயர்கள் வாய் திறந்து பேசக் கூடும் என்கிறார் இந்திய அறிஞர் ஸ்வாமி அவர்கள் அதுமட்டுமல்ல  வரலாற்று ஆய்வில் தொல் பொருள் சின்னங்கள் சான்றுகளுக்கு நிகராக இந்த இடப் பெயர்களை  ஆதாரமாக முன் வைக்க முடியும்  


இலங்கையைப் பொருத்தமட்டில்  தமிழர் வரலாற்றை  சங்க கால இலக்கிய நூல்கள் மற்றும் இடப்பெயராய்வு மூலமாகவே நிரூபிக்க முடியும் தொல்பொருட் சின்னங்கள் எவ்வளவு வெளிப்பட்டாலும் அதை பௌத்தம் சொந்தம் கொண்டாடுவதற்கு ஏதுவான காரணிகள் பல உள்ளது அதில் ஒன்று சைவர்களாகவும், இந்துக்களாகவும் இருந்த மக்களே பௌத்தர்களாக, மதம் மாறினார்கள் என்பதை மகாவம்சம் தெளிவு படக் கூறுகிறது

சில நாட்களாக சமூக ஊடகங்களில் பேசு பொருளாக இருப்பது யாழ்ப்பாணம் பலாலி தொடர்பாக அண்ணாமலை  அவர்கள் தெரிவித்த கருத்து சில நாட்களுக்கு முன் யாழ் கலாச்சார மண்டபம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக பாரதீய ஜனதா கட்சி லைவர் கு.அண்ணாமலை அவர்கள்  கு.அண்ணாமலை அவர்கள் கம்பன் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ‘யாழ்ப்பாணம் பலாலியில் ராமருக்கு பாலாலயம் நடைபெற்றதாக கூறியிருந்தார் அதாவது ராவணன் ராமர் போர் முடிவுற்ற பின் பாலாலயம் நடை பெற்றதால் அந்த இடத்திற்கு பலாலி என்று பெயர் வந்ததாக கூறியிருந்தார்

அண்ணாமலை அவர்களின் இந்த கருத்திற்கு பலர் எதிர்ப்பை தெரிவித்தும் பலர் தங்களுக்குத் தெரிந்த வரலாறுகளை கூறி வந்தார்கள் பலாலி என்பதற்கு அவை எதுவுமே ஒத்துப் போகவில்லை 
உண்மையில் சங்ககால இலஙக்கியப் பாடல்களில்  வடபகுதியில் உள்ள தமிழ் கிராமங்கள் பல இடம் பெற்றுள்ளது  அத்துடன் சிறு சிறு கிராமங்களின் ஒத்த கருத்துச் சொல்லை  ஆராய்ந்தால்  அவை தமிழரின் பழமையான வரலாற்றுடன் ஒத்துப் போகும்

அவ்வாறு பலாலியைப் பற்றி தேடிய பொழுது
பலாலி  என்னும் சொல்க்கான பொருளை ஒவ்வொன்றாக  பிரித்தும் இணைத்தும் பார்ப்போம்
பலா-ஆலி

பலா என்பது கனி- ஆலி என்பது பூதம் அல்லது அரக்கர்

பலா என்பது முக்கனிகளுள் இரண்டாம் கனியாக கூறப்படுகிறது  நாம் அனைவரும் விரும்பி உண்னும் சுவை மிக்க பழம்
அதையும் விட சிற்றாமுட்டி எனும் பெயரும் உண்டு பலா மரத்திற்கு ஒரு சிறப்பு உண்டு  வெட்ட வெட்ட தழைப்பது அதாவது  விதையில் இருந்தும் உருவாக்கலாம் கிளைகளை வெட்டி ஒட்டுவதன் மூலமாகவும் உருவாக்கலாம்

பலாவிற்கு சிற்றாமுட்டி என்ற பெயரானது இங்கு குறியீட்டு பெயராக வருகிறது  கள் இறக்குவதற்காக பயன்படுத்தப்படும் குவளை  யாழ்ப்பாணத்தில் அதிக பனை வளம் இருக்கிறது பனையில் முட்டி எவ்வாறு தொங்குமோ அதே போலவே  பலாவும் தொங்குவதை காணலாம்

இராமாயணத்தில் அரக்கர்கள் கள்ளுண்டு களித்துதிருப்பதாக பல பாடல்கள் வரும்

அந்த கள்ளின் குறியீடாக இங்கு பலாவற்கு சிற்றா முட்டி என்னும் பெயர் வருகிறது ஆலி என்பது அரக்கர்கள் அல்லது பூதம் இராமன் இலங்கையில் போரிட்டது  அரக்கர்களுடன் அல்லது பூதங்களுடன் என்று இராமாயணம் கூறுகிறது

உண்மையில் பலா என்பதை அரக்கர்கள் அதன் பின்னரான யக்கர்கள் அதன்பின்னரான மனிதர்களின் குறியீடாக கொள்ள முடியும்

அடுத்தது பலாலி என்பதை
பல்-ஆலி என்று பிரித்துப் பார்ப்போம்
பல்லாலி என்பது மருவி பலாலி ஆகியிருக்கலாம்

பல் என்பது நமது வாயில் உணவுகளை மென்று உண்பதற்காக உருவாக்கப்பட்டது  ஆலி என்பது அரக்கர்கள் அல்லது பூதம்
அரக்கர்களுக்கு பல் என்பது நீளமாக இருக்கும் என்று இலக்கிய நூல்கள் வாயிலாகவும்  ஓவியயங்கள் கதைகள் வாயிலாகவும் நாங்கள் படித்திருக்கின்றோம் 

பல் என்பது மனித இனத்திற்கே இவ்வளவு பலமாக இருக்கும் போது அரக்கர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று சிந்திக்க வேண்டும்

இலங்கையில் அரக்கர்களுடன் யுத்தம் செய்ய இராமன் வந்துள்ளான் பெரும் பற்கள் வைத்திருந்த அரக்கர்கள் இருந்தமையால் அந்த இடம் பல்லாலி பல்-ஆலி என்று அழைடக்கப்ட்டு பின் பலாலி  என மருவி இருக்கலாம்

பல்லரக்கர்கள் இருந்ததால் பல்லாலி-பலாலியானது இதை நாங்கள் மிகவும் சுலபமாக எடுத்துக் கொள்ளலாம்

தேவ அசுரர் யுத்தத்தில் அரக்கர்கள் தலை மற்றும் உடற்பாகங்கள் வெட்டப்பட வெட்டப்பட மீண்டும் மீண்டும் உயிர் பெற்று அல்லது வளர்ந்து வரும் என்பதை சங்க கால இலக்கிய நூல்களும் திரைப்படங்கள் மூலமடாகவும் அறிந்திருக்கின்றோம்

அந்த சம்பவத்தைத்தான் இங்கு  பலாலி என்பதில் பலா எனும் கனிக்கு உவமிக்கப்படுகிறது அதாவது வெட்ட வெட்ட துளிர்த்து வருவது

இதற்கு  ஒளவையார் ஒரு அழகான பாடலை பாடுகிறார்

கூரியவாளால் குறைபட்ட கூன்பலா ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய்ச் – சீரிய வண்டுபோல் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப் பண்டு போல் நிற்கப் பணி.வெட்டுண்டு வீழ்ந்த தனது பலா மரம் முன்னைப்போல் வ‌ளர்ந்து ஆளான‌து க‌ண்டு அக‌ம‌கிழ்ந்து போனாள் முத்தரசிஇ உடனே தனது நன்றியை புலப்படுத்த ஒரு படி தினைமாவை ஒளவைக்கு பரிசளித்தாள். அதனைத் தனது தொங்கு மூட்டையில் வைத்துக்கொன்டு ஒளவை பிராட்டியார் சோழனின் அவையை சென்றடைந்தார். ஒளவையின் பையைக்கண்டு அதனுள் என்ன உண்டு என சோழன் வினவஇ ஒளவை சோழனுக்குகூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும் மூழைக்குழக்கு தினைதந்தாள் – சோழாகேள் உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் என்றனுளம்.என்று பதிலளித்தார்.

இங்கு ஒளவையின் பாடலை எடுத்துக் காட்டாக கூறக் காரணம் வெட்டப்பட்ட பலாவிற்கு மீண்டும் உயிர் பெரும் சக்தி இருக்கிறது  அதே போலத்தான் யுத்தத்தில் அரக்கர்களின் உடல் உறுப்புகள் வெட்டப்பட்டாலும்  அதை மீண்டும் உருவாக்கிக் கொள்ளும் சக்தி அரக்கர்களுக்கு உண்டு  இதை நாங்கள் பலாலி என்பதற்கு சிலேடையாக அல்லது  குறியீடாகவும் எடுத்துக் கொள்ளலாம்

ஆலி என்பது அரக்கர் அல்லது பூதம் ஆலித்தல் என்றால் ஆரவாரம் செய்தல்  யுத்த களத்தில் அரக்கர் சேனை எப்பொழுதும்  ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்தே யுத்தம் புரிவார்கள் என்பதை நாம் அறிவோம்

பலாலி என்பதற்கான அர்த்தத்தை  பலாப்பழத்தை குறியீடாகவும் கொள்ளலாம்
பல ஆலி பல அரக்கர்கள் அதாவது பல என்பதை ஒரு சேனையாக கொள்ளலாம் அரக்கர் சேனை என்று கொள்ளலாம் உற்று நோக்குவோம்னால் பல் -ஆலி (பல் அரக்கர்கள்)மருவி பலாலியாக உருவாகிளிருப்பதற்கு இடம் உண்டு

இங்கு கூறியது கூறலாக வருவதற்கு காரணம் வாசிப்பவர்கள் தெளிவு பட வேண்டும் என்பதற்காகவே

இனி தமிழ்நாட்டு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கு.அண்ணாமலை அவர்களின் கூற்றுக்கு வருவோம்

இராமாயண யுத்தத்தின் போது இராமருக்கு பாலாலயம் செய்த இடம் பலாலி என்று அண்ணாமலை கூறியிருந்தார் ஆனால் இலக்கிய நூல்கள்  அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த பதிவிலும் இல்லை  ஆனால் யாழ்ப்பாணம் எனும் ஒரு நகரம் இராமாயண போர் முடிந்த பின்னும் இராவணன் இறந்த பின்னரும் தான் உருவாக்கப்பட்’டதாக திருக்கோணேஸ்வரர் புகழ்பாடும் தெட்சிணை கைலாச புராணம் நூல் கூறுகின்றது  அவ்வாறு இருக்க எப்படி ராமருக்குப் பாலாலயம் பலாலியில் செய்யப்பட்டிருக்கும் அந்த நேரம் யாழ்ப்பாணப் பகுதியானது அடந்த காடாக இருந்துள்ளது ஆனால் மாதோட்டமும் திருக்கோணேஸ்வரம் வன்னி பெருநிலப்பரப்பும்  நகரங்களாகவும் மனித வாழ்விடங்களாகவும் இருந்தமைக்கான ஆதாரங்களை இராமாயணம் நூல் கூறுகின்றது

இதே போல்தான் தமிழ் நாழட்டு கல்வியாலர்கள் இலக்கிய கர்த்தாக்கள்  ஈழத்தமிழர்களுக்கு சொந்மதமான பல வரலாறுகளை தமிழ் நாடு எனும் பெயர் உள்ளததை வைத்துக் கொண்டு அவர்களது சொந்மததமாக்கி கொண்டார்கள் 

அடுத்த பதிவில் காட்டுப் பகுதியாக இருந்த யாழ்ப்பாணம் எவ்வாறு நகரமானது என்பதனை இலக்கிய நூல்களின் ஆதாரங்கள் மூலம் தரப்படும்

நன்றி
உசாத்துணை நூல்கள்
கம்பராமாயணம் தமிழர்வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும் இராவணன் இந்திர உலா

No comments