Page Nav

HIDE

Breaking News:

latest

பூநகரி என்னும் வரலாற்று இடப்பெயர் உருவாகக் காரணம் என்ன?இடப்பெயராய்வு

இலங்கை வடபகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகவும் பல தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து புகழ் பெற்ற ' பூநகரி'  என்னும் ஊர்ப்பெயர் உள்ளத...

இலங்கை வடபகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகவும் பல தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்து புகழ் பெற்ற 'பூநகரி' என்னும் ஊர்ப்பெயர் உள்ளது இது முன்னைய காலத்தில் தனியான ராசதானி என்றாலும் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பிரதேச நிர்வாகப் பிரிவாக காணப்படுகிறது ஆனால் பழைய ராசதானிகளுக்குரிய எச்சங்கள் இன்று மறையாமல் காணப்படுகிறது 

பல சிறப்புகள் வாய்ந்த இந்த மண்  'பூநகரி' என்று பெயர் வருவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கும் பலவிதமான காரணங்கள் செவி வழி கதைகளாக கூறப்படுவதுண்டு அந்த கருத்துகளும்  மறுக்க முடியாதவை  ஆனால் கம்பராமாயணம் நூல் கூறும் குறிப்புகளும் காரணங்களும் இவ்வாறு இருக்கிறது 

ராமாயணம் யுத்தத்தில் அனுமன் இலங்கையை எரித்த போது சம்பவத்தை கூறும் பாடலில் 

பூக்க ரிந்து முறிபொறி யாயடை

நாக்க ரிந்து சினை றுஞ் சாம்பராய் 

மீக்கரிந்து நெடும்பணை வேருறக்

காக்க ரிந்து கருங்கரி யானவே

பூ கரிந்து –மலர்கள் தீந்து முறி பொறி ஆய்-தளிர்கள்  பொறிபடச் சிதறி –அடை- நா கரிந்து  இலைகளும் அவற்றின் டுவேயுள்ள அரும்பு முதலியனவும் தீந்து  சினை நறுஞ் சாம்பர்  ஆய்-  நல்ல சாம்பலாய் வெந்து  மீ கரிந்து (இங்ஙனம்) மேலுள்ள பொருட்களெல்லாம்  தீந்து  நெடும்பணை வேர் உற கரிந்து –நீண்ட பருத்த வேருமுற்படத் தீந்து கா-சோலைகள் கருங்கரி ஆன  கரிய கரிகளாகி விட்டன


மேலே குறிப்பிட்டுள்ளவை இலங்கை எரியூட்டு படலத்தில் உள்ள பாடலும் அதற்கான பொருள்களும் பூநகரி பகுதிக்கு  பொன்நகர் அல்லது பொன்னா வெளி என்னும் பழங்கலாலப் பெயர்களும் உண்டு என்பதை விபரிக்கிறது கம்பராமாயணம் நூலிணை படிக்கும் போது நீங்கள் உணர்ந்து கொள்ளலாம் 

அதிலும்  இந்த பூநகரி பிரதேசமானது எப்போதும் வாசம் வீசிக் கொண்டிருக்கும் மலர்வனம், மலர்ச்சோலை என்றும் கூறப்பட்டுள்ளது 'பூநாறு' அல்லது 'பூநாரி' என்பது மலர்கள் மணம் வீசுவதை குறிக்கும். தொடர்ச்சியாக வரும் பாடல்களில் ஆங்காங்கே இவற்றை காணலாம் 

அனுமன் தனது வால் பகுதியில் வைக்கப்பட்ட தீயினால்  இலங்கையை எரித்த போது  இந்த மலர்ச் சோலையில் (பூ) க்கள் எல்லாம் கரிந்து நா கரிந்து என்பது இலைகளும் அவற்றின் (ந)டுவேயுள்ள அரும்பு முதலியனவும் தீந்து  நெடும்பணை வேர் உற (கரி )ந்து கரிகளாகிவிட்டன   

நெடும்பணை வேர் உற கரிந்து என்று பாடல் கூறுகிறது மக்கள் அனைவருக்கும் தெரியும் பூநகரிப் பகுதியில் யுத்த காலத்திலும் அதற்கு முன்பும் பணை மரங்கள் நிறைந்து காணப்பட்டது மேலும் இங்கு கூறப்பட்டுள்ள பல இலக்கியப் பாடல்களின் அடிப்படையில் பூநகரி முழங்காவில் பகுதியில் மலைத் தொடர்களும் பிரசித்தி பெற்ற பெரிய ஆறு ஒன்றும் ஓடியிருக்க வாய்ப்பு உள்ளது.

 இவற்றை உறுதிப் படுத்த நிலம் சார்ந்த ஆய்வுகள் அல்லது இலக்கிய நூல்கள் முலமான இடப்பெயராய்வுகள் மேற்கொண்டு ஆவணப்படுத்த வேண்டும் 

இலங்கையில் அனுமன் எரித்த  பல நகரங்களில் பூநகரியும் ஒன்று என்பதை  கம்பராமாயண நூலின் பாடல்கள் விளக்குகிறது எனலாம் 

இது எமது தேடலில் கிடைக்கப் பெற்ற தகவல்கள் வரலாறுகள் மீது நம்பிக்கையும் பற்றும் கொண்டவர்கள் இந்த தகவல்களையும் ஆய்வு செய்து சரி தவறுகளை கண்டறிந்து எமது எதிர்கால தமிழ் சமூகத்திற்கு பலமான வரலாற்று தகவல்களை கொடுப்பதற்கு முன் வரவேண்டும் 

பூநகரி மண் தொடர்பாக எழுதுவதானால் பல நூல்கள் எழுதலாம் அவ்வளவு வரலாற்று சிறப்புகள் கொண்ட பூமி. 'பூநகரி எனும் பெயர் எவ்வாறு உருவாகியது என்னும் சிறு தகவல் மட்டும இங்கு கொடுக்கப்பட்டுள்ளது 

உலக படைப்பாக்கத்தில் மூத்த இனமாக ஈழத் தமிழர்களும் மூத்த மொழியாக தமிழும்  இருக்கிறது சங்ககால இலக்கிய நூல்கள் இதை உறுதிப் படுத்துகிறது தற்கால  வரலாற்றாசிரியர்களும் ஆய்வாளர்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

இயற்கைப் பேரிடர்கள், காலமாற்றம், மனித இடப்பெயர்வுகளால் ஈழத் தமிழர்கள் தங்களுடைய வரலாறுகளை பாதுகாக்க முடியாமல் ஆவனப் படுத்தாமல் விட்டத விளைவு இன்று வேற்று நாட்டவர்களோடும் வேற்று இனத்தவர்களோடும் 'இது எங்களின் மரபணு பூமி இங்கு தான் எங்களது மொழியும், கலை, கலாச்சார, பண்பாடுகள், தோன்றியது என்பதை நிரூபிப்பதற்கு போராட வேண்டி சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்

தொல்பொருட் சின்னங்கள் ஒரு போதும் ஈழத் தமிழர்களின் தொன்மையை நிரூபிப்பதற்கு உறுதுணையாக நிற்காது ஏனெனில் இங்கு தமிழ் பௌத்தம் சிறப்பாக இருந்தபடியாலும் சைவம் , இந்து, வைணவம், போன்ற சமய தெய்வங்களின் வணக்கக் குறியீட்டுப் பொருட்கள் ஒன்று என்பதனாலும் தொல் பொருள் சின்னங்கள் உதவி புரியாது 

தமிழர்கள் தங்களது இருப்பிடத்தையும் தொன்மங்களையும் தக்க வைத்துக் கொள்ளவதற்கு சங்ககால இலக்கிய நூல்களும் ஈழத்தின் இடப்பெயர் ஆய்வுகளும் மேற்கொண்டு அவற்றை ஆவணப்படுத்துவது சிறந்த ஒன்றாகும் 

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மேரு மலைத் தொடரோடும், மாதோட்ட பெருநிலப்பரபோடும், இணைந்திருந்த பூநகரி சிறந்த கடல் வாணிபத்துறை, விவசாயம், என்று பலதரப்பட்ட தொழில்களுடன், தற்சார்பு பொருளாதாரத்தில் சிறந்து விளங்கிய பூமி. 'லெமூரியா அல்லது குமரிக்கண்டத்தின் இயற்கைப் பேரிடர் அழிவில்  இதன் கடற் பிரதேசங்களும் நிலங்களும் நிறைவே கடலில் மூழ்கியிருக்க வாய்ப்புகள் உள்ளது 

துறைமுக செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதன் காரணமாக உள்ளுர் உற்பத்திகளை வெளியில் விற்பனை செய்ய முடியாத நிலை  மற்றும் தங்களது உற்பத்திகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலை காரணமாக  இந்த பூநகரி பிரதேசமும் பொருளாதாரத்தில் மீளமுடியாமல் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது  பலரின் ஆய்வும் எதிர் கருத்துகளும்   ஒரு வரலாறு நிலைபெற்றிருக்க உதவும் என்பது எமது நம்பிக்கை


No comments