Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் தள்ளாடி என்னும் வரலாற்றுப் பெயர் எவ்வாறு உருவானது கம்பராமாயணம்கூறும் விளக்கம்

 மன்னார் மாவட்டத்தில் தள்ளாடி என்னும் வரலாற்றுப் பெயர் எவ்வாறு உருவானது கம்பராமாயணம் நூல் கூறும் ஆதார விளக்கம் வரலாற்றாய்வில் தொல் பொருட் சி...

 மன்னார் மாவட்டத்தில் தள்ளாடி என்னும் வரலாற்றுப் பெயர் எவ்வாறு உருவானது

கம்பராமாயணம் நூல் கூறும் ஆதார விளக்கம்

வரலாற்றாய்வில் தொல் பொருட் சின்னங்களுக்கு இணையான ஆதாரத்தையும் நம்பிக்கையையும் தரவல்லது இடப்பெயர்கள் ஆகும் வரலாறு எங்கே மௌனமாகிறதோ அங்கே இடப்பெயர்கள் வாய் திறந்து பேசும் என்கிறார் இந்திய வரலாற்று அறிஞர் எஸ்.வி.இராமசாமி ஐயர் அது மட்டுமல்லாது பல அறிஞர்கள் இடப் பெயர்களின் முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார்கள்

இடப் பெயர்கள் என்பது இன்றோ நேற்றோ அல்லது சில வருடங்களுக்கு முன்போ வைக்கப்பட்டவை அல்ல தேவ அசுரர் இதிகாச புராண காலத்திலிருந்து இடங்களின் தன்மைக்கேற்ற வாறு பெயர்கள் சூட்டி அழைக்கப்பட்டவை
அந்த வகையில் இன்றைய மன்னார் மாவட்டத்தில் உள்ள பல பெயர்கள் சங்க கால இலக்கிய நூல்களில் பாடலாக உள்ளதை காணலாம்

மன்னார் மாவட்டத்தில் தள்ளாடி என்னும் மிகப் பழமையான ஊர்ப் பெயர் இருக்கிறது இதன் இடப் பெயர் உருவான வரலாற்றினை இராமாயணத்துடன் தொடர்பு படுத்தி தொன்று தொட்டு வரும் செவி வழிக்கதை ஒன்று உள்ளது அதாவது இராமன் இராவணன் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இராமன் தம்பி இலக்குமணன் காயப்பட்டு மூர்ச்சையுற்றதால் இலக்குமணனையும் வானரப் படைகளையும் காப்பாற்றுவதற்காக புறப்பட்ட அனுமன் இமயமலையிலிருந்து சஞ்சீவி மலையை கையினால் சுமந்து ஆகாயமார்க்கமாக வரும் போது பாரம் தாங்க முடியாமல் தள்ளாடி விழுந்ததால் மன்னாரில் உள்ள குறித்த இடம் தள்ளாடி என்று அழைக்கப்படுவதாக செவி வழிக் கதைகள் உண்டு

இந்த கூற்று தொடர்ச்சியாக அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பரப்பப்பட்டு வருகிறது
இந்த கூற்று உண்மையாக இருந்தால் இராமாயண செய்யுள் பாடலில் நிச்சயம் பதியப்பட்டிருக்கும் என்று இராமாயண நூல்களை ஆராய்த போது தள்ளாடி எனும் பெயர் உருவானதற்கு வேறு ஒரு காரணத்தை கம்பராமாயணப் பாடல்கள் கூறுகின்றது

இராவணன் சீதையை இலங்கைக்கு கடத்தி சென்று விட்டான் என்பதை கேள்விப்பட்ட அனுமன் இராமனின் அனுமதியுடன் தனி ஒரு ஆளாக இலங்கையில் தான் சீதை சிறை வைக்கப்பட்டுள்ளாரா என்பதை உறுதிப் படுத்துவதற்காக வருகிறார் (அதற்கான ஆதார செய்யுள் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது)

அப்போது தமிழ் நாட்டிலிருந்து ஆகாய மார்க்கமாக வந்து இலங்கையின் பவளமலை மீது குதிக்கிறார் அனுமனின் விசை மற்றும் பாரத்தை தாங்க முடியாத அந்த பவளமலை அங்கும் இங்கும் தள்ளாடி மலையிலிருந்த அத்தனைப் பொருட்களும் சிதறி விழுந்தனவாம் அதாவது கடலில் உள்ள படகு மீது பெருங் காற்று மோதினால் எவ்வாறு இருக்குமோ அதே போல் அந்த பவள மலை தள்ளாடியதாம் அந்த பவள மலைதான் இன்றைய மன்னாரில் உள்ள தள்ளாடிப் பகுதியாகும்

உயரமாக இருந்த பவளமலை அனுமனின் விசை மற்றும் பாரத்தால் மண்ணடியுற்று நிலத்தில் அமிழ்ந்து வரம்பின் தன்மையை பெற்றதாக பாடல் கூறுகிறது பாடலில் வரும் பல ஒத்த கருத்துள்ள சொற்களை அவதானித்தால் அவை அவை மன்னார் தேசம் என்பதை உணர முடியும்

இராமாயணத்துடன் முற்று முழுதாக தொடர்பு பட்டது மன்னார் என்னும் மாதோட்டம் இந்த சம்பவமே தள்ளாடி உருவானதற்கான ஆதாரத்துடன் செய்யுளில் காணப்படுகிறது அதைவிட மன்னார் மாவட்டத்தில் பல மலைத் தொடர்கள் இருந்து அழிந்து போயுள்ளதை சங்க காலத்து இலக்கிய பாடல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்

இன்றைய மன்னார் அரச பதிவேட்டில் இரண்டொரு மலைகள் இருப்பதை காணலாம் நானாட்டான் பிரதேசத்தில் உமநகரி அருகில் குருசுமால் எனும் சிறு கிராமம் உள்ளது (மால் என்பது மலையை குறிக்கும்) முத்தரிப்புத்தறையில் அல்லிமலை அல்லது வள்ளிமலை வெள்ளிமலையாக மருவி அரச பதிவேட்டில் உள்ளது

இனி அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு வரும் பொழுது ஏதேனும் சம்பவங்கள் நிகழ்ந்து தள்ளாடி விழுந்தமைக்கான அறிகுறிகள் பாடல்களில் உள்ளதா என்று தேடிய போது எந்த ஒரு பாடலிலும் கூறப்படவிலை ஒத்த கருத்துக்கள் உள்ள சொற்களாவது இருக்குமா என்றால் அதுவும் இல்லை ஆனால் சஞ்சீவி மலை சிதறல்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விழுந்ததாக சில இடங்களை அடையாளப்படுத்தி தமிழநாட்டவர்களால் எழுதப்பட்ட தற்கால நூல் குறிப்புகள் கூறுகின்றது

இராஜபாளையத்திற்கு கிழக்கே உள்ள மலையின் பெயர் சஞ்சீவி மலை. இராவணாதியருடன் நடைபெற்ற போரில் லக்ஷ்மணனுக்கு ஏற்பட்ட காயத்தைக் குணப்படுத்த அனுமன் தூக்கி வந்த இமயத்து மகேந்திரகிரி யிலிருந்து பெயர்த்த மூலிகை மலை. மூலிகையைப் பயன் படுத்திய பிறகு அனுமன் அதனை வீசி எறிந்ததாகவும் அதில் ஒரு பகுதி இங்கே விழுந்து சஞ்சீவி மலையாக வளர்ச்சியடைந்ததாக வும் இப்பகுதி வாழ் மக்களால் பேசப்பட்டு வருகிறது.
(இராமநாதபுரம் விவரச் சுவடி ப.1185)

சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் பறந்து சென்றபோது சதுரகிரி சித்தர்கள் பிரார்த்தனைப்படி ஒரு துண்டு உடைந்து சதுரகிரி அருகே விழுந்தது. அதுவே சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலை’ என்றும் கூறப்படுகிறது.

திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சிறுமலை. அனுமன் தூக்கிச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதியே இம்மலை என்று கூறப்படுகிறது.
அனுமன் சஞ்சீவி மலையை எடுத்து வந்த போது அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அதுவே காங்கயம் அருகிலுள்ள பொன்னூதி மாமலையாம். சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் இது அழைக்கப்படுகிறது.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ ஆதிவராக நல்லூர் சஞ்சீவி மலை உள்ளது.

ஔஷதகிரி:
தாம்பரத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள ஆப்பூர் கிராமம் அருகே உள்ளது ஔஷதகிரி. இது போன்ற பல ஊர்கள் அடையாளப்படுத்தப்படுகிறது
இவற்றை சில வேளைகளில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது

ஏனெனில் மலையை அனுமன் சுமந்து கொண்டு வரும் பொழுது ஓரிடத்தில் புனிதம் நிறைந்த அந்த மலை வஞ்சகர் உடைய ஊருக்கு வர மறுத்து ஆகாயத்தில் நின்றதாக கம்பராமாயணம் யுத்த காண்டம் இரண்டாம் பகுதி 218 பக்கத்தில் கூறப்பட்டுள்ளது

இந்த சம்பவத்தை தமிழ் நாட்டவர்கள் தங்களுக்கு சாதகமாக


எழுதியிருக்கலாம்
மன்னார் மாவட்டத்தில் உள்ள இராமாயணப் புகழ் பெற்ற தள்ளாடி எனும் ஊர்ப் பெயர் அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு வரும் பொழுது ஏற்பட்டது அல்ல தள்ளாடி என்பது பவள மலைப் பகுதி என்பதை இராமாயணப் பாடல் ஆதாரத்துடன் இங்கு தரப்பட்டுள்ளது

இந்த பவளமலை மீது அனுமன் குதித்ததினால் விசை மற்றும் பாரம் தாங்க முடியாமல் அது தள்ளாடியதால் தள்ளாடி என்று பெயர் பெற்றுள்ளது

செவி வழிக் கதைகளில் உண்மை இருக்கும் அவை ஆராயப்பட வேண்டும் வரலாறுகள் திரிபடையக் கூடாது அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கு பிழையான வரலாற்றை கற்பிக்கக் கூடாது

அவ்வாறு செவி வழிக் கதையாலும் திரிபடைந்த வரலாற்றாலும் தொகுக்கப்பட்ட சிங்கள மஹாவம்சத்ததால் ஏற்படுத்தப்பட்ட இன முறுகலால் தமிழினம் பாரிய பின்னடைவை சந்தித்து நிற்கிறது

தள்ளாடி சஞ்சீவி மலை கூற்றைப் போலவே விஜயன் 700 தோழர்களுடன் இலங்கை வந்தது உண்மை மஹாவம்சத்திற்குள் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை தமிழினத்திற்கு எதிராக மிகவும் நுனுக்கமாக பின்னப்பட்டட சதி வலை

ஏனெனில் மஹாவம்சம் நூலானது கி.பி 5ம் நுற்றாண்டில் மஹாநாம தேரரால் தொகுக்கப்பட்டது ஆனால் மஹாவம்ச நுலின் உள்ளடக்கத்தினுல் கி.மு .முதலாம் நூற்றாண்டிலிருந்து பல சம்பவங்கள் காணப்படுகிறது அவை காலத்திற்குக் காலம் நேரில் கண்ட சம்பவம் மற்றும் செவி வழிக் கதைகள் குறிக்கப்பட்டு இருந்ததை மேலும் பல விடயங்களை உள்ளடக்கி இலங்கை ஒரு பௌத்த பூமி என்பதாக காட்டப்பட்டுளளது
மஹாவம்சத்தையும் பல சங்ககால இலக்கிய நூல்களையும் ஆராய்ந்து விவாதித்தால் உண்மை புலப்படும்

அதைவிட இலங்கையில் விஜயன் எங்கு வந்து இறங்கினால் குவேனியின் தாமிரபரணி தேசம் எது என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே ஈழத்தமிழர்களின் பாரிய வரலாற்றை மீட்க முடியும்

குறிப்பு ‘-இங்கு என்னால் தரப்பட்ட விடயங்கள் மாத்திரம் உண்மை என்றும் இதுவே சரி என்றும் நான் கூறவில்லை தேடுங்கள் இன்னும் பல விடயங்கள் கிடைக்கக் கூடும் சரியோ தவறோ விவாதித்து அடுத்த தலைமறைக்கு உண்மையான வரலாறுகளை கையளிக்க அது உதவும் முடிந்த வரை இலக்கிய நூல்களின் ஆதாரத்தோடு விவாதியுங்கள்

No comments