Page Nav

HIDE

Breaking News:

latest

மிகவும் சிறப்பாக நடைபெற்றது மன்னார் ரோட்டரி கழகத்தின் புதிய தலைவர் பதவியேற்பு நிகழ்வு

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இயங்கி வரும் மன்னார் ரோட்டரி கழகத்தின் ஆறாவது (6)  புதிய தலைவர் பதவியேற...

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் முன்னேற்றத்திற்காக இயங்கி வரும் மன்னார் ரோட்டரி கழகத்தின் ஆறாவது (6)  புதிய தலைவர் பதவியேற்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது 

இந்த நிகழ்வானது மன்னார் ஆகாஸ் விருந்தினர் விடுதியில் இன்று (8) மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது 

இந்த நிகழ்வில் மன்னார் ரோட்டரி கழகத்தின் உதவி ஆளுநர்  நாகரெத்தினம் தேவரூபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் 

நிகழ்வுகள் ரோட்டரி கழகத்தின் விதிமுறைகளுக்கு அமைவாக கடந்த ஐதாவது (5)மன்னார் ரோட்டரி கழகத் தலைவர் பொறியியலாளர் ரொபேட் பீரிஸ் அவர்கள் புதி மன்னார் ரோட்டரி கழகத்தின் ஆறாவது தலைவர்(6) திருமலைராசா தனேஷ் அவர்களிடம் ஒப்படைத்தார்

அத்துடன் மன்னார் ரோட்டரி கழகத்தில்  புதிதாக இணைந்து கொண்ட உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்கள் 

இந்த நிகழ்வில் மன்னார் ரோட்டரி கழகத்தின் அனைத்து  உறுப்பினர்களும் ரோட்டிரக்ட் இள வயது உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்  

நிகழ்வின் சிறப்பு அம்சமாக  மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் ஊடகவியலாளர் ஜெகன் எழுதி அண்மையில் வெளியீடு செய்யப்பட்ட  'மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்' என்னும்  இடப்பெயர் ஆய்வு நூலானது அன்றைய  வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத உறுப்பினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது




























No comments