Page Nav

HIDE

Breaking News:

latest

ஜனநாயகத்துக்கு சவாலாகும் தொழில்நுட்பங்கள் இந்த தேர்தலில் AI சவாலை ஏற்படுத்துமா?-ஜோசப் நயன்-

AI தொழில்நுட்பம் பல்வேறு தளங்களில்  எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது, புதுமை,செயல்திறன் மற்றும் முன்னெப்போதும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில...

AI தொழில்நுட்பம் பல்வேறு தளங்களில்  எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது, புதுமை,செயல்திறன் மற்றும் முன்னெப்போதும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் முன்னேற்றங்கள். AI தொழில்நுட்பத்தில் உள்ளது

1. செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்

மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளின் ஆட்டோமேஷன்: யுஐ ஆனது சாதாரணமான மற்றும் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை தானியக்கமாக்குவதில் சிறந்து விளங்குகிறது மேலும் சிக்கலான மற்றும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் கவனம் செலுத்த மனித தொழிலாளர்களை தேவையற்றதாகிறது  

பெரிய தரவுத்தொகுப்புகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் AI ஆனது நுண்ணறிவு மற்றும் கணிப்புகளை வழங்கவும் வணிகங்கள் மூலோபாய திட்டமிடலை மேம்படுத்தவும் உதவுகிறது

2. புரட்சிகர தொழில்கள்

ஹெல்த்கேரில் AI தொழிநுட்பம் மிகவும் துல்லியமான நோயறிதல் தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளில் கூட உதவுவதன் மூலம் AI சுகாதார மேம்படுத்தலுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

நிதியை மாற்றுதல்: 

மேலும்  இடர் மதிப்பீடு, மோசடி கண்டறிதல், மற்றும் தானியங்கு வர்த்தகம் ஆகியவற்றிற்கு AI  பயன்படுத்தப்படுகிறது. இந்த பயன்பாடுகள் நிதிச் சேவைகளின் செயல்திறனையும் பாதுகாப்பையும் அதிகரிக்கின்றன.

4. தரவு பகுப்பாய்வில் முன்னேற்றங்கள்

AI ஆனது அதிக வேகத்தில் பரந்த அளவிலான தரவை செயலாக்க முடியும்இ மனிதர்களால் கண்டறிய முடியாத வடிவங்கள் மற்றும் போக்குகளைக் கண்டறியும். நிதி சந்தைப்படுத்தல் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் இந்தத் திறன் முக்கியமானது..

 இவ்வாறு AI தொழில் நுட்பத்தை சொல்லிக் கொண்டே போகலாம்  இவை தற்போதைய இலங்கை அரசியல் சூழலில் எவ்வாறு தாக்கத்தை செலுத்துகிறது  இவை நண்மையா தீமையா எடின்று ஆராய வேண்டும் 

இலங்கையின் அரசியல் சூழல் தற்போது முன்பை விட பல்வேறு எதிர்பார்புக்களையும் அறிவிப்புக்களையும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளது நாட்டின் தலைவரான ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இடம் பெறுமா? இல்லையா? என்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை

இலங்கை அரசியல் நிலவரத்தின் படி இந்த வாரத்தில் பல முக்கிய அறிவிப்புக்கள் வெளி வந்துள்ள நிலையில் என்னும் பல அறிவுப்புக்கள் வருவதற்கான வாய்ப்புக்களும் காணப்படுகின்றது

இவ்வாறான நிலையில் தொடர்சியாக இடம் பெற உள்ள தேர்தல்களின் போது மக்களை திட்டமிட்ட வகையில் திசை திருப்பவும் உண்மைக்கு புறம்பான விடயங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்பதற்கும்  பல்வேறு போலி செய்திகள் உருவாக்கப்பட கூடிய வாய்ப்புக்கள்,தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது

குறிப்பாக கடந்த காலங்களில் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலாக இருக்கட்டும் பாராளுமன்ற தேர்தலாக இருக்கட்டும் அனைத்திலும் சமூக வலைதலங்கள் ஊடான பிரச்சாரங்கள் முன்னோக்கி காணப்பட்டது

அதிலும் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி தேர்தலில் செல்வாக்கு செலுத்தியிருந்தது நாம் அனைவரும் அறிந்ததே 

தற்போது இலங்கை மாத்திரம் இல்லாமல் உலக நாடுகள் முழுவதிலும் AI தொழில் நுட்பம் தொடர்பில் அச்சநிலமை தோன்றியிருக்கின்றது குறிப்பாக AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தேர்தல் தொடர்பில் பல்வேறு போலி செய்திகள்,போலி குரல் பதிவுகள்,போலி காணொளிகள் என்பவற்றை தயாரித்து மக்களின் தேர்தல் தொடர்பிலான நிலைப்பாட்டுடில் மாற்றங்களை ஏற்படுத்த கூடிய  வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்த கூடிய நிலமை காணப்படுகின்றது

அண்மை காலமாக   வேட்பாளர்களின் குரல்களுக்கு ஒத்த குரல் பதிவுகள் சமூக வலைதளங்கள் ஊடாக பரப்பப்பட்டு அவை AI தொழில்நுட்பம் ஊடாக தயாரிக்கப்பட்டவை என கண்றியப்பட்டுள்ளது, மறு புறம் AI தொழில்நுட்பத்தின் ஊடாக எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள்,கணொளிகளும் வெளியாகி அவை உண்மைக்கு புறம்பானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,அதே நேரம் தேர்தல் கருத்து கணிப்புக்கள் என்ற பெயரில் சர்வதேச நிறுவனம் ஒன்றை போலியாக அடையாளப்படுத்தி சில தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு சாதகமான கருத்து கணிப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன

இவ்வாறான நிலையில் இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தல் தொடர்பிலும் தேர்தலுக்கான அறிவிப்புக்கள் உள்ளடங்களாக தேர்தல் காலப்பகுதியில் பல்வேறு போலியான,உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவரக்கூடிய வாய்ப்புக்கள் முன்பை விட அதிகமாக காணப்படுகின்றது

இருப்பினும் இவ்வாறான செய்திகளின் உண்மைதன்மையை அறிவதற்கான வாய்ப்புகளை பயன்படுத்துவது தொடர்பிலான தெளிவு மக்களிடம் பெறும்பாலும் குறைவாகவே உள்ளது

சமூக ஊடகங்கள் மாத்திரம் இல்லாது பிரதான ஊடகங்கள் கூட இவ்வாறான தேர்தல் காலங்களில் சில கட்சிக்கு சார்பானதும் சில கட்சிகளை பாதிக்க கூடிய வகையிலும் கருத்துக்களையும் போலியான செய்திகளையும் வெளியிட்டுள்ளது

எனவே தேர்தல் காலங்களில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பிலும் கருத்துக்கள் தொடர்பிலும் மக்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய சூழல் காணப்படுவதுடன் தேர்தல் காலங்களில் நம்பகத்தன்மையான உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுவது தொடர்பில் ஊடகங்களும் அவதானமாக செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

-ஜோசப் நயன்-

No comments