Page Nav

HIDE

Breaking News:

latest

புனித அந்தோனியார் வரலாறும் புதுமைகளும்

புதுவைப் பதியர்  பதுவை நகர புனித அந்தோனியார்  ஓகஸ்ட்  15 ம்  1195 –ஜீன்  13  1231) பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு ஆவார் இவர் லிஸ்பன் நகர...

புதுவைப் பதியர் 

பதுவை நகர புனித அந்தோனியார்  ஓகஸ்ட்  15 ம்  1195 –ஜீன்  13  1231) பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு ஆவார் இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டு வருவதாக வரலாறுகள் கூறுகின்றது  இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் புனித அந்தோனியார் அவரது  கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான் என்னும் வரலாற்று குறிப்புகளும் உள்ளது  ஆதலால் தான் புனித அந்தோனியார் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். அந்தோனியாரின்  புனித வாழ்வும் கூரிய நுண்ணறிவும் விவிலிய பக்தியும்  அந்தோனியார் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்துள்ளது என்றால் மிகையாகாது 

புனித அந்தோனியாரின் பிறப்பும் இளமையும் 

புனித அந்தோனியார் ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் மாநகரில்  மார்டின்  மேரி  பெற்றோர்களுக்கு 1195 ஆம் ஆண்டு ஓகஸ்ட் திங்கள் 15 ம் திகதி  முன்றாவதாகப் பிறந்தார் பெற்றோர்கள்  இவருக்கு பெர்டிணாண்டு மார்ட்டின் தே பர்னாந்து என்று பெயரிட்டனர். மிகவும் அசாத்திய திறமையும் கூரிய நுண்ணறிவு படைத்த  புனித அந்தோனியார் திறம்படக் கல்வி கற்று சிறப்புத்  தேர்வு பெற்றார்.

புனித அகுஸ்தீன் சபையில் புனித அந்தோனியார் 

ஆன்ம குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் புனித அந்தோனியார் இணைந்து கொண்டார் பின்னர் துறவறத்திற்கு தனிமை தேவை என்பதை உணர்ந்த புனித அந்தோணியார் ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று  அதிபரின் அனுமதியுடன்  கொயிம்ரா என்னும் இடத்திற்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 

இளவயதில் பட்டம் 

புனித அந்தொனியார் குருகுலக் கல்வியில் சிறந்து விளங்கியதன் அடிப்படையில் 1219ம் ஆண்டு அவரது 24 ஆம் இளம் வயதில் குருப்பட்டம் பெற்றார்.

புனித அந்தோனியாரின் தனியாத தாகம் 

மொராக்கோவில் வேத சாட்சிகளாக மரித்த ஐந்து பிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம் 1220-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொண்டு வரப்பட்டது  கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த புனித அந்தோனியார்  தாமும் அவர்களைப் போன்று கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். அதன் ஆரம்ப கட்டமாக 1221ஆம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.

பிரான்சிஸ்கன் சபையில் புனித அந்தோனியார் 

பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்த  பின்புதான் பெர்ணாண்டு என்ற தனது இயற்பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதுப் பெயரை எடுத்துக்கொண்டார். 

புனித அந்தோனியாரின் போதனைகள் 

புனித அந்தோனியார் சிறிதுகாலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். அங்கே அவரது உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பி போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றத் தொடங்கினார் அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்க போதகரானார் 

சக்தி வாய்ந்த போதனை

புனித அந்தோனியார்  பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து இடைவிடாத  மறையுரையாற்றினார். அந்தோனியாரின்  உரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும் அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து ஆணித்தரமாகப் போதித்தார்.

புனித அந்தோனியாரின் புதுமைகள் 

புனித அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன சில வெளிவந்து பல வெளிவராமலும் உள்ளது ஒருமுறை இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்ததாக வரலாறுகள் உண்டு 

மேலும்  யூதர் ஒருவர் இயேசுவின்  நற்கருணையில் பங்கு கொள்வதை  மறுத்தாராம். ஆனால் பட்டினியில் கிடந்த  அவரது கழுதை அதற்கு முன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்த புதுமைகளும் உண்டு

எண்ணிலடங்காப் புதுமையாளர் 

புனித அந்தோனியார்  வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம்.  இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்ததாகவும் கூறப்படுகிறது அதனடிப்படையில்  நாள் ஒன்றுக்கு 13 புதுமைகள் செய்ய  மட்டுமே தலைமை குரு கட்டளையிட்டுள்ளார்   

ஒரே நேரத்தில் இரு இடங்களில் புதுமை

ஒருநாள் புனித அந்தோனியார்  அன்றைக்கு செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின் மாலையில் வெளியே உலாவச் சென்றுள்ளார்  அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்தவேளையில் "அந்தோனியாரே என்னை காப்பாற்றும்" என்று உதவிக்குரல் எழுப்ப இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்கவைத்ததாகவும் அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது பதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில் ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்து புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.

மதங்கள் கடந்தவர் 

புனித அந்தோனியார் மதங்களைக் கடந்த புதுமையாளராகவே காணப்படுகின்றார் இந்தியா மற்றும் இலங்கை தேசங்களில் மதங்களை கடந்து மனிதர்கள் வேண்டும் வரங்களை அளித்து நோய் நொடிகளை அகற்றி பல புதுமைகள் செய்துள்ளதை  அந்தோணியாரிடம் புதுமைகள் பெற்ற நபர்கள் கூறியுள்ளார்கள் என்றாலும்   புனைவுகளை நீக்கிவிட்டு வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் பல புதுமைகள் செய்தார் என்பது உண்மையே 

புனித அந்தோனியாரின் இறப்பு

1231ஆம் ஆண்டு புனித அந்தோனியாரின் கடும் தவ முயற்சிகளாலும் பல ஊர்களில் ஓய்வில்லாமல் மறையுரை ஆற்றிய காரணத்தினாலும்  நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன்  மாதம் 13 நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் அவரது  36 வது வயதில் இறந்தார். 

அழிவில்லா நாக்கு 

புனித அந்தோனியார் இறந்து  32 ஆண்டுகளுக்குப்பின் 1263 ம் ஆண்டளவில் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டு புனித அந்தோனியாரின்  நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

புனிதர் பட்டம் 

புனித அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பத்திநாதர் புனித அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார் 

புனித அந்தோனியார் ஆலயங்கள் 

உலகம் முழுவதும் அந்தோனியார் புதுமைகள்   பல ஆலயங்கள் உள்ளது  அந்த வகையில் மன்னார் மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற பல ஆலயங்கள் உள்ளது 

மன்னார்  தள்ளாடி தூய அந்தோனியார் ஆலயம் மதங்கள் கடந்து மாவட்டம் முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து நேர்த்திகடன் செலுத்தி புனித அந்தோனியாரின் புதுமைகளைப் பெற்றுள்ளார்கள் 

மன்னார் வவுனியா வீதியில் பெரியகட்டு புனித அந்தோனியார் திருத்தலம் 

மன்னார் பள்ளங்கோட்டை புனித அந்தோனியார் திருத்தலம் 

மன்னார் யாழ் பிரதான அமைந்திருக்கும் "பாம்பு வழிகாட்டி புனித அந்தோனியார் ஆலயம்"உட்பட பலசிப்பியாறு  அந்தோனியாரின் ஆலயங்கள்  பக்தர்களின் குறை தீர்க்கும்  ஆலயங்களாக உள்ளது 

கோடி அற்புதர் 

தாம் வாழ்ந்த காலத்திலும் இறப்பிற்குப் பின்னரும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்து மக்களின் நோய்களை குணப்படுத்தி, கவலைகள், கஷ்டங்களை, இல்லாமல் செய்து தேடி வருவோர்க்கு புதுமைகள் பல செய்ததால்   கோடி அற்புதர் புனித அந்தோனியார் என்ற சிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறார் 








No comments