Page Nav

HIDE

Breaking News:

latest

இலங்கையில் அல்லிராணியின் அரண்மனை அமைந்திருந்த ராசமடு கிராமம்

தமிழ் பேசும் சமூகமாகிய நாம் வரலாறுகள் தொடர்பாக பேசாமல் விவாதிக்காமல் தமிழர் வரலாற்றை ஆவணப் படுத்தாமல் இருந்ததின் விளைவுகள்தான இன்று  எமது நி...

தமிழ் பேசும் சமூகமாகிய நாம் வரலாறுகள் தொடர்பாக பேசாமல் விவாதிக்காமல் தமிழர் வரலாற்றை ஆவணப் படுத்தாமல் இருந்ததின் விளைவுகள்தான இன்று  எமது நிலங்களும் வளங்களும் பறிக்கப்பட்டு உரிமைகளற்றவர்களாக ஒதுக்கப்பட்டுள்ளோம் 

சரியோ தவறோ தமிழர் வரலாற்றை தேடி விவாதித்து அதனை ஆவணப்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமை அவ்வாறு தமிழர் வரலாறுகளில் மிக முக்கிய சான்றாக இருக்கும் அல்லிராணி பற்றி சில வரலாற்றுத் தகவல்களை சேகரித்து உங்கள் பார்வைக்காக தரப்படுகிறது 

அல்லிராணியின் வரலாறு என்பது மிக நீண்டது அதில் எமக்குக் கடைத்த அல்லிராணியின் அரண்மனை அமைந்திருந்த ராசமடு என்னும் இடத்தைப் பற்றி   ஒரு சில சான்றுகளை உங்களுக்காக தருகின்றோம்

அல்லிராணி கோட்டையானது  மன்னார் மாவட்டத்தின் தென் கடற்கரையில் அமைந்துள்ளது. பல காலமாக கோட்டை அமைந்திருந்தாலும் அல்லிராணியைப் பற்றியோ அல்லது கோட்டையைப் பற்றிய கூடுதல் வரலாற்றுத் தகவல்கள் எதுவும்  நூல்களின் மூலமாகவோ அல்லது காணொளி வடிவிளோ கொடுக்கப்படவில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில தகவல்கள் கிடைத்தாலும் அவை அனைத்தும் பொது மக்களுக்கு ஏற்கனவே  தெரிந்த சில தகவல்களாகவே இருக்கிறது 

அல்லிராணி தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா? அல்லது இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவரா? என்பதில் வரலாற்றாசிரியர்களிடையே உள்ள குழப்பம் மற்றும் தெளிவின்மை காரணமாக இன்றுவரை அல்லிராணி பற்றிய தெளிவான கூற்றுக்கள் பகிரப்படவில்லை.

இதற்கான காரணம் மதுரை என்ற ஒரு இடப் பெயர்தான்  

மதுரை என்ற இந்த இடப்பெயர் ஈழத் தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷங்களை மறைத்து உலகத் தமிழர்களிடையே குழப்பமான மனநிலையை உருவாக்கியுள்ளது என்பதை இன்று வரை ஈழத்தமிழர்கள் உணர்ந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் 

இதற்குக் இன்னும் ஒரு காரணம் பண்டைய தமிழர்களின் நிலம்  குமரிக்கண்டம்,லெமூரியா கண்டம் கடலில் முற்றிலும் மூழ்கியதாக நம்பப்படுவதாகும். குமரிக் கண்டம் முற்றிலும் கடலில் மூழ்கிவிட்டது அமிழந்து விட்டது என்பது மிகவும் தவறு அந்த குமரிக் கண்டத்து தமிழர்கள் தான் இன்றும் இருக்கும் ஈழத் தமிழர்கள்  

இதனை குமரிக் கண்டத்து தமிழர்களிடன் இருந்ததாக கூறப்படும் அறம், வீரம், கலை, கலாச்சாரப் பண்பாடுகளை இன்றும் ஈழத் தமிழர்களிடத்தில் காணலாம்

இந்த பதிவு அல்லிராணியின் வாழ்க்கையைப் பற்றியது என்பதால் லெமூரியா அல்லது குமரிக்கண்டம் பற்றி இன்னுமொரு பதிவில்  பார்க்கலாம்

அல்லிராணியின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும் போது அல்லியானவள்  மதுரைக்கு அரசி என்று பல இலக்கிய நூல்கள் கூறுகின்றன.

மதுரை என்பது   பாண்டிய வம்சத்தின் பூர்வீக நிலம்  அல்லிராணி வாழ்ந்தது இன்றைய தமிழ் நாட்டில் இருக்கும் பிற்கால மதுரையில் அல்ல அவள் வழ்ந்தது குமரிக் கண்டத்து மதுரையில் தான்.

சங்க இலக்கியங்கள் கூறுவதும் இந்த  குமரிக் கண்டத்து மதுரையைத் தான் இந்த மதுரையை வைத்துதான் தமிழர் வரலாறுகளில் பெரும் குழப்பம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது 

இன்று குமரிக் கண்டத்தின் எச்சமாக இருப்பது இலங்கை அதிலும் மன்னார் தேசம் ஆகவே  நிச்சயமாக அல்லியின் தோற்றம் இலங்கையில்  அதிலும் மன்னார் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை 

அதற்கு மன்னார் மாவட்டத்தில் இருக்கும் அல்லிராணி கோட்டை சான்றாக உள்ளது மேலும்  பொன்பரப்பி, குதிரைமலை, போன்ற இடங்கள் அல்லிராணி ஆட்சி செய்ததாக சில வரலாற்று நூல்கள் கூறுகின்றது 

அத்துடன் கம்பராமாயண ஊர் தேடும் படலம் பகுதியில் வரும் பாடலில்  இந்த அல்லிராணி கோட்டை கடலோடு இயற்கையாய் அமைந்த காவல் கோட்டை அல்லது காவல் அரன் என்று கூறப்பட்டுள்ளது

ஆகவே அல்லிராணி என்பவள் தற்போதைய தமிழ்நாட்டு மதுரைக்கு சொந்தமானவள் அல்ல அது இலங்கை மாதோட்டம்  மன்னார் மாவட்டத்தின்  பேரரசி என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது

பண்டைய மாதோட்டம் மாந்தைத் துறைமுகத்துடன் மிகச்சிறப்பாக இருந்துள்ளதை பல சங்ககால இலக்கிய நூல்கள் விபரிக்கிறது அதிலும்  அதிலும் ராமாயண யுத்தத்தில் மிக முக்கிய பங்கு வகித்த  இந்த மாதோட்டம் அனுமன் முதலில் எரித்த நகரமும் இந்த மாதோட்டமே அதற்கும் பல இலக்கியச் சான்றுகள் உள்ளது

ஏற்கனவே வெளியிட்ட சில காணொளிகளில் கூறியிருக்கின்றோம். மாதோட்ட பகுதியில் வறுமை, பஞ்சம், நோய்கள், இயற்கை பேரழிவுகள், பண்டைய கால யுத்தம், காரணமாக ஆதி காலம் தொட்டே உயிர் பிழைப்பதற்காக அருகில் உள்ள தமிழ்நாட்டிற்கு ஈழ தமிழர்கள் செல்வது வழக்கம் 

அப்படிச் சென்று தமிழ் நாட்டின் பல இடங்களிலும் குடியேறி வாழ்ந்துள்ளார்கள் 

அதனால் தான் மன்னார் மாதோட்டப் பகுதிகளான மாந்தை, அரிப்பு, கட்டுக்கரை, ராசமடு, பொன்பரிப்பு, போன்ற பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட  தொல்பொருள் சின்னங்களான சட்டி, பானைகள், ஈமத்தாழிகள் செங்கல் ஓடுகளுக்கும்  தற்போதைய தமிழ்நாட்டு மதுரை ஆதிச்சநல்லூர் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள் சின்னங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாக சில வரலாற்றுசில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்

இவை மிகப் பழமையான கால வரலாறுகள் என்பதால் தொல்பொருள் சின்னங்களை சான்றாக எடுப்பதை விட இடப்பெயர்களை (ஊர்ப் பெயர்களை )சான்றாக எடுப்பது மிகப் பொருத்தமாக இருக்கும் 

இவ்வாறான நிலையில் மன்னார் மாதோட்டத்தில்  அல்லி ராணியின் கோட்டை மாத்திரம் இருக்கிறது அல்லிராணி தொடர்பான எந்த தகவல்களும்  ஆதாரத்துடன் இல்லை 

எனவே அல்லி தொடர்பான மேலதிக தகவல்களை தேடிய போது தான் மன்னார் நானாட்டான் பிரதேசத்தில்  இராசமடு பகுதிக்கும்  நானாட்டான் அல்லிராணிக்கும் தொடர்பு இருப்பது  கையெழுத்துப் பிரதி ஆதாரத்துடன் கிடைத்தது

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்பாக நானாட்டான்  ஸ்ரீ செல்வ முத்துமாரியம்மன் ஆலயம்   சிறிய குடிசை ஆலயமாக இருந்து கட்டிடமாக அமைக்கும்  போது இராசமாடு அல்லி அரண்மனை கட்டிட இடைபாடுகளில் இருந்து கற்கள் கொண்டு வந்துள்ளதாகவும்  மேலும் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராசமடு பகுதியில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி செய்து பாண்டியர் கால மீன் சின்னம் பொறித்த நாணயங்கள் விளக்குகள் சட்டி பானை ஓடுகள் எடுக்கப்பட்டதாகவும் ராசமடுப் பகுதியில் புதையல் இருப்பதாகவும் அந்த புதையலை எவரும் எடுக்க முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த கையெழுத்து சம்பவத் திரட்டுப் புத்தகத்தை ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலயத்தை தலைமை தாங்கி வழி நடத்திய கணக்காளர் சி.சின்னையா அவர்களால் எழுதப்பட்டிருக்கிறது

நானாட்டான் ராசமடுப் பகுதியில் புதையல் 

அல்லிராணியின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் ராசமடுப் பகுதியில் புதையல் இருப்பதாக அன்று தொடக்கம் இன்று ரை நம்பப்படுகிறது  இந்த புதையல் தொடர்பான பல விடயங்கள் நானாட்டான் ஸ்ரீசெல்வமுத்துமihரியம்மன் ஆலயத்தின் வரலாறுகள் கூறும் சம்பவத் திரட்டு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது ராசமடுப் பகுதியில் புதையல் இருப்பது அப்பகுதி பொது மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் அந்த புதையலை எடுப்பதற்காக இன்று வரை பல முயற்சிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் தொல்வியிலேயே முடிந்துள்ளது காரணம் அந்தம புதையல்களை குருமுனி பாதுகாப்பதாக மாந்ரீகர் ஒருவர் எம்மிடம் கூறியிருந்தார்

இந்த அல்லிராணியின் அரண்மனை இருந்ததாக நம்பப்படும் குறித்த ராசமடுப் பகுதியானது பண்டைய தமிழர் வரலாறுகளுக்கு ஆவணப் பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை

இந்த வரலாறுகளை மீட்பதற்கு தொல்பொருள் சின்னங்கள் உதவி புரியும் என்பதை விட  சங்ககாலவ இலக்கிய நூல்களும் இடப் பெயர் ஆய்வின் மூலம் பெறப்படும் தகவல்களும்  பண்டைய அல்லிராணி மற்றும் அவளுடன் இணைந்த பல வரலாறுகளை ஆணித்தரமாக தற்கால மக்களுக்கு வழங்கவல்லது

மேலும் அல்லி என்பவள் உலகிலேயே மிகவும் அழகானவளாகவும் வீரமிக்கவளாகவும்  எதிரியாக வரும் ஆண் அரசர் படைகளை சிதறடித்த பெண் அரிசியாகவும் ஆண் வாசம் பிடிக்காத அரசியாகவும் இருந்த அல்லிராணியின் வாழ்விலும் காதல் வீரம் சோகம் இருந்துள்ளது

சரியான ஒரு தருணம் வரும்போது இதற்கான விளக்கங்களும் ஆதாரத்தோடு உங்களுக்கு தரப்படும் இலங்கையில் மாதோட்ட பகுதி முழுவதும் அல்லியின் ஆட்சி நடைபெற்றுள்ளது அறிய முடிகிறது இராசமடு என்று அழைக்கப்படும் அல்லியின் அரண்மனை இருப்பதைப் போன்று மாதோட்டத்தின் பல ஊர் பெயர்கள் மடு என குறிக்கும் இடப்பெயர்கள் உண்டு அவை பெரிய மடு பள்ளமடு மடுகரை நீலமடு இருட்டுமடு தட்சிண மருதமடு நயினாமடு  போன்ற இன்னும் பல பெயர்கள் உண்டு

மடு என்பதற்கு  பள்ளம்,  கிடங்கு, குழி போன்ற பல அர்த்தங்களையும் மடு என்றால் கொலைக்களம் எனும் மற்றும்  தீ வைத்தல் அல்லது பரவுதல் எனும் அர்த்தத்தையும் குறிக்கும்

இலங்கையில் ஈழத் தமிழர் தொடர்பாக  பல வரலாற்று தகவல்களை விவரிக்கும் போது இந்த ராசமடு மற்றும்  அல்லிராணி பாத்திரங்கள்  ஆதாரமாக வந்து நிற்கும் என்பதனை இங்கு கூறிக் கொள்ள விரும்புகின்றேன்

இந்த பதிவானது மன்னார் நானாட்டன் இராசமடு பகுதியில்  அல்லி ராணியின் அரண்மனை வளாகம் இருந்துள்ளது என்பதே நிரூபிப்பதற்கு உருவாக்கப்பட்டது மேலும் ஈழத் தமிழர்கள் குமரிக் கண்டம் மற்றும் பல்வேறு வரலாற்றுத் தகவல்களோடு தொடர்ச்சியாக இணைந்திருப்போம் 

எனவே ஈழத் தமிழர்கள் நமது வரலாறுகள் தொடர்பாக தேடுங்கள் விவாதியுங்கள் தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளுங்கள் நாளைய நமது தமிழ் சமுதாயத்திற்கு நல்லதொரு வரலாற்றை சொல்லிக் கொடுப்போம்  

உசாத்துணை நூல்கள் 

கம்பராமாயணம்,தமிழர்வரலாறும் இலங்கை இடப் பெயர் ஆய்வும், மகாவம்சம்

No comments