Page Nav

HIDE

Breaking News:

latest

மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் ...

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

புதிய மது விற்பனை நிலையம் 

மன்னார் நகர பகுதியில் ஏற்கனவே ஒரு மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மது விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.

பிரதேச செயலகம் அனுமதி வழங்க வில்லை 

இந்த நிலையில்இமன்னார் பிரதேசச் செயலகம் எவ்வித அனுமதியும் வழங்காத நிலையில் தற்போது கொழும்பில் அனுமதி பெற்று இன்னும் சில தினங்களில் குறித்த மது விற்பனை நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுவரி திணைக்களத்தின் செயற்பாடு 

குறித்த விடயம் தொடர்பாக நாங்கள் அண்மையில் மன்னர் மது வரி திணைக்களத்திற்கு சென்று குறித்த விடயம் தொடர்பாக கேட்ட போது அவர்களும் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு ஆதரவாகவும் தம்மோடு கடும் தொனியில் கதைத்த தாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.


கலாச்சார சீர்கேடுகள் 

தற்போது மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிய மது விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில் அதனைச் சுற்றி மக்களின் குடியிறுப்புகள் அமைந்துள்ளது.

காமன்ஸ் இளைஞர் படையணி முகாம்இதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உற்பட மக்களின் செயல்பாடுகள் அதிகரித்த இடமாக குறித்த பகுதி காணப்படுகிறது.

குறித்த மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டால் அப்பகுதியில் பல்வேறு கலாச்சார சீர் கேடுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் உடனடியாக குறித்த மது விற்பனை நிலையத்தை  அங்கிருந்து அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாவட்டம் தழுவிய போராட்டம் 

குறித்த பகுதியில் இருந்து மது விற்பனை நிலையம் அகற்றப்படாது விட்டால் மாவட்டம் தழுவிய ரீதியில் ஒரு சில தினங்களில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபருக்கு கையளிக்கும் வகையில் மாவட்டச் செயலக அதிகாரிகளிடம் கையளிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments