Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் கமநல சேவை அறிமுகப் படுத்திய புதிய தொழிநுட்பம்

மன்னார் நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்பிற்கு உட்பட்ட வஞ்சியன்குளத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை  காலை  ...

மன்னார் நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்பிற்கு உட்பட்ட வஞ்சியன்குளத்தில் இன்று (26) வெள்ளிக்கிழமை  காலை   ட்ரோன் மூலம் ரசாயனம் விசுரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது  MI 07 பயறுச் செய்கைக்கான இரசாயனம், விசுரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மஞ்சள் நோய்க்கு எதிர்ப்பு இனமான உளுந்து முன்மாதிரி துண்டச் செய்கை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட  அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர்,விவசாய  மாகாண பிரதிப் பணிப்பாளர்,கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கமநல,விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் விவசாயிகள் கலந்து சிறப்பித்தனர்.

மாற்றுச் சிந்தனை

மக்கள் தற்போது மாற்றி சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் பூச்சிக்கொல்லிகள் இல்லாத பயிர்கள் இயற்கை  முறையிலான் உணவுப் பொருட்களை விளைவிப்பதில் மக்கள் நாட்டம் கொள்கிறார்கள் 

நஞ்சற்றது 

அதாவது  பண்ணைகளில் செயற்கையான உரங்களுக்கு பதிலாக இங்கு இயற்கையாக சூழலில் கிடைக்கக்கூடிய உயிர் வெளியீட்டு தரவுகளை பயன்படுத்தப்படுவதனையும் காண முடிகிறது 

இயற்கை விவசாயத்தின் நன்மைகள்

இயற்கை விவசாயத்தில் செலவுகள் குறைக்கப்படுவதோடு இலாபம் அதிகரித்தல் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுதல்இ ஆரோக்கியமான தூய்மையான உணவுப் பொருட்கள் கிடைக்கிறது இதனை அனைத்து அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளார்கள் 

நண்மைகள் 

பூச்சிக்கொல்லிகள் இல்லாமையினால் நச்சுத்தன்மை அற்றதாக காணப்படுதல்இ நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுதல் பழங்கள் காய்கறிகள் போன்றன நீண்ட நாளுக்கு உபயோகப்படுத்தக் கூடியதாகவும்இ சுவை அதிகமானதாகவும் காணப்படுதல் போன்றவாரான பல்வேறு நன்மைகள் இந்த விவசாயத்தின் மூலம் கிடைக்கின்றன.

பூச்சிய செலவு விவசாயம்

தற்காலங்களில் செயற்கையான விவசாய முறைகளுக்கு மிகவும் அதிகமாக செலவு  உரங்கள் வாங்குவதிலேயே காணப்படுகின்றன.இன்று இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடி காரணமா கிருமிநாசினிகளை பெற்றுக் கொள்வதில் விவசாயிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள் 

மாற்றுச் சிந்தனை

மேலும் இயற்கை விவசாயம் முறைகளில் தங்களுடைய பண்ணையில் காணப்படும் விலங்குகளின் கழிவுகள் மற்றும் மக்கக் கூடிய குப்பைகள் போன்றன  உரமாக பயன்படுத்தப்படுவதனால் இங்கு உரத்துக்கான செலவு பூச்சிய செலவாக காணப்படுகின்றது. இதனால் மக்கள் குறைந்த செலவில் அதிக லாபத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை  கமநல சேவைகள் திணைக்களம் விவசாய திணைக்களங்கள் வலியுறுத்த வேண்டும் 



No comments